மண்ணள்ளி போடாத குறை தான்.. எக்ஸ் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை சபித்த ஜாய் கிரிஸில்டா

சென்னை: பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இடையேயான உறவு மற்றும் அதனையொட்டி எழுந்த சர்ச்சைகள் தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் 5ம் தேதியான இன்று மாலை எக்ஸ் தள பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை, ஜாய் கிரிஸில்டா சபித்து ஒரு போஸ்ட் போட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்ற வழக்கறிஞரை மணந்து, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். எந்தப் பிரச்சினையும் இன்றி சுமூகமாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், தற்போது ஜாய் கிரிஸில்டா உடனான உறவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Madhampatty Rangaraj Second Wife Joy Crizildaa put a curse tweet now
Photo Credit:

சமீபத்தில், ஜாய் கிரிஸில்டா தான் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டதாகவும், ஆறு மாத கர்ப்பிணியாகவும் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்தார். இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், தனது தந்தையைப் போலவே சமையல் கலையில் சிறந்து விளங்கி, திரையுலக பிரபலங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு சமையல் செய்து வருகிறார். இவருக்கென ஒரு சமையல் குழுவும் உள்ளது.

இந்த சர்ச்சை குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தார். ஆனால், சமீபத்தில் கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அவர் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கலந்துகொண்டது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இரண்டாவது திருமணம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், முதல் மனைவியுடன் அவர் தோன்றியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இடையேயான திருமணம் சட்டப்படி செல்லாது எனத் தெரிவித்துள்ளார். "கிரிஸில்டா எவ்வளவு சம்பாதித்திருந்தாலும், அவருக்கு இந்த திருமணத்தில் சட்டப்பூர்வமாக எந்த உரிமையும் இல்லை," என்று அவர் கூறினார்.

மேலும், "சட்டப்படி மனைவி என்ற உரிமையே கிரிஸில்டாவுக்குக் கிடைக்காது. ஸ்ருதி நினைத்தால் இவர்கள் மீது வழக்குத் தொடரலாம். கிரிஸில்டா அடல்ட்ரியில் இருக்கும்போது ஸ்ருதி கேஸ் போடலாம். எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரலாம் என வழக்கறிஞர்கள் எல்லாம் தகவல் தெரிவித்தனர்.

மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு லிப் லாக் அடித்த போட்டோக்களையும் தாலி கட்டி கணவன் மனைவியாக போஸ் கொடுத்த போட்டோக்களையும் வீடியோ காலில் ஜொள்ளு விட்ட வீடியோவையும் வெளியிட்டு வந்த ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி தன்னை ஏமாற்றி விட்டார் என சமீபத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், திடீரென ட்விட்டர் பக்கத்தில், ""பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்." தர்மம் ஜெயிக்கும் என பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட மாதம்பட்டி ரங்கராஜுக்கு சாபம் தான் விடுத்துள்ளார் ஜாய் கிரிஸில்டா என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே திருமணமான ஒருவருடன் நீங்கள் உறவு கொண்டதே தவறு என்றும் அதற்கான தண்டனை உங்களுக்கும் கிடைக்கும் என்றும் நெட்டிசன்கள் ஜாய் கிரிஸில்டாவையும் திட்டி கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X