பெருங்குடியில் தொடங்கிய வரலாறு பெருங்குடியில் முடிந்துவிட்டது.. ரோபோ சங்கர் மறைவு.. மதுரை முத்து வேதனை!

சென்னை: கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு என ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலக்கிய மதுரை முத்து தனது சக கலைஞர் ரோபோ சங்கர் மறைவை அறிந்து மிகுந்த மன வேதனையுடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திச் சென்றார். அப்போது, அவர் பேசும் போது, மதுரை பெருங்குடியில் தொடங்கிய வரலாறு சென்னை பெருங்குடியில் முடிந்துவிட்டதே என பேசியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடம்பெல்லாம் பெயின்ட் பூசிக் கொண்டு இளம் வயதில் இருந்தே திருவிழாக்களில் வித்தைக் காட்டி வந்த ரோபோ சங்கர் எப்படியாவது நல்லா வாழ்ந்துவிட வேண்டும் என சென்னைக்கு வந்த நிலையில், லக்‌ஷ்மன் ஸ்ருதியில் நான் தான் அவருக்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடுகளை செய்தேன் என நடிகர் கிங்காங் ரோபோ சங்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு கூறினார்.

Madurai Muthu gets emotional and talks about Robo Shankar rise and fall story

கமல்ஹாசன் உடன் ஒரு படத்திலாவது நடிக்க வெண்டும் என ரோபோ சங்கர் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ரோபோ சங்கருக்கு இறுதியாக கமல்ஹாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

ரோபோ சங்கர் இறுதிச்சடங்கு: வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவன் நகர் மின் மயானத்தில் நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் கணவர் கார்த்திக் இறுதிச் சடங்கை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகள் இந்திரஜா சங்கர் கடைசி வரை தனது அப்பாவுடனே இருந்து கண்ணீர் மல்க கலங்கி நின்றது பலரையும் உலுக்கி எடுத்ஹ்டது.

Madurai Muthu gets emotional and talks about Robo Shankar rise and fall story

மதுரை முத்து இரங்கல்: விஜய் டிவி பிரபலங்கள், காமெடி நடிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ரோபோ சங்கர் மறைவு செய்தியை அறிந்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். வரமுடியாத சூழலில் உள்ளவர்கள் சோஷியல் மீடியா மூலம் அஞ்சலி செலுத்தினர். கூல் சுரேஷ் கதறி அழுது ஒப்பாரி வைத்து சாவு டான்ஸையும் ஆடினார். மதுரை முத்து, நாஞ்சில் விஜயன், எம்.எஸ். பாஸ்கர், ஆரத்தி, மதுமிதா என ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

பெருங்குடியில் தொடங்கி பெருங்குடியில் முடிந்தது: மதுரை பெருங்குடியில் தான் ரோபோ சங்கர் வரலாறு பாடம் படித்து பட்டம் பெற்றார். அங்கிருந்து தொடங்கிய அவரது வாழ்க்கை 46 வயதில் சென்னை பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் பிரிந்து விட்டது. 46 வயது தான் சினிமாவில் பலரும் சாதிக்கத் தொடங்கும் வயது, இவ்வளவு சீக்கிரத்தில் ரோபோ சங்கர் உயிர் போகும் என கனவிலும் நினைக்கவில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார் மதுரை முத்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X