Mr&Mrs சின்னத்திரையிலிருந்து திடீரென விலகிய ஜோடி… உண்மையை போட்டுடைத்த சோபியா!

சென்னை : மணிகண்டன் - சோபியா ஜோடி மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்து உள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களால் இவர்கள் விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மணிகண்டன் ராஜேஷ் - சோபியா ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த ஜோடி, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சி

விஜய் தொலைக்காட்சி

ரியாலிட்டி ஷோக்கள் முதல் சீரியல்கள் வரை தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப புது புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் மனதை கவர்ந்த நிகழ்ச்சியாக உள்ளது. இதில், புகழ், சிவாங்கி, மணிமேகலையின் அட்டகாசம் அனைவரும் ரசிக்கும் படி இருக்கும். குக்வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது.

12 ஜோடிகள்

12 ஜோடிகள்

இதில் சின்னச்சித்தரை பிரபலங்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஜோடியாக பங்கேற்கப் போகிறார்கள். இதில், ராஜ்மோகன் - கவிதா, கோபாலகிருஷ்ணன் - ஹரிதா, சங்கர் - தீபா, யுவராஜ் - காயத்ரி, வேல்முருகன் - கலா, வினோத்குமார் - ஐஸ்வர்யா, சரத்குமார் - கிருத்திகா, யோகேஷ் - நந்தினி, மணிகண்டன் - சோபியா, திவாகர் - அபினயா, ஜாக் -ரோஷினி, அஜய் குமார் - ஆனந்தி ஆகிய ஜோடிகள் பங்கேற்று வருகின்றனர்.

Array

Array

இந்த நிகழ்ச்சியில் தம்பதிகளுக்கு பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும் . மேலும், தம்பதிகள் ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை வைத்து அந்த தம்பதிகளுக்கு மதிப்பெண் வழங்கப்படும். மேலும், ஆட்டம் பாட்டம் என நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை மா.கா.பா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்குகிறார்கள். நிகழ்ச்சியின் நடுவர்களாக நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மணிகண்டன், சோபியா வெளியேறினர்

மணிகண்டன், சோபியா வெளியேறினர்

இந்த 12 போட்டியாளர்களில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் மற்றும் அண்ணி சோபியாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தனர். கடந்த சில நாட்களாக சோபியா இதில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக சோபியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வேறு வழி தெரியவில்லை

வேறு வழி தெரியவில்லை

இதில், இந்த தகவலை நான் லேட்டா சொல்வதற்கு என்னை மன்னிக்கவும், என்னுடைய இன்பாக்ஸ் முழுவதும் ஏன் நீங்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் கலந்து கொள்ளவில்லை என்று பலர் கேட்டு வருகிறார்கள். எனக்கு, சில உடல்நல பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள் என்னை ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக வைல்ட் கார்டு சுற்றில் மீண்டும் வருவோம் என்று கூறியுள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலர் நிச்சயமாக நீங்கள் உடல் நலம்பெற்று வைல்ட் கார்டு சுற்றில் வருவீர்கள் என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X