கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் இருந்து விலகும் மனிஷா அஜித்...அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை : சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மனிஷா அஜித், திவ்யபத்மினி, சந்தோஷ் என பலர் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
மதியழகன், சுபத்ராவை திருமணம் செய்து கொண்ட 5 ஆண்டுகள் கழித்து வெண்ணிலாவை காதலிக்க துவங்குகிறார். வெண்ணிலா கர்ப்பமானதால் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு சுபத்ராவை பிரிகிறார் மதியழகன். இதனால் சுபத்ராவை, மதியழகனின் தாய் தனது மகளை போல் கவனித்துக் கொள்கிறார். மதியழகன் - வெண்ணிலாவின் மகள் ஆதிரா.
18 ஆண்டுகள் பிரிவிற்கு பிறகு ஒரு நாள் திடீரென மதியழகனுக்கு போன் செய்கிறார் சுபத்ரா. ஆனால் இது தெரிந்த வெண்ணிலா, மதியழகன் தற்போதும் சுபத்ராவுடன் தொடர்பில் இருப்பதாக நினைத்து சண்டை போடுகிறார். கோபத்தில் பால்கனியில் இருந்து குதிக்க போகிறார் வெண்ணிலா. ஆனால் அவரை காப்பாற்ற மதியழகன் முயற்சித்தும், வெண்ணிலா கீழே விழுந்து உயிரிழக்கிறாள். ஆனால் வெண்ணிலாவை, மதியழகன் தான மாடியில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அவர் சிறைக்கு செல்கிறார்.

அடுத்தடுத்த ட்விஸ்ட்
இதனால் ஆதிராவை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்கிறாள் சுபத்ரா. ஆனால் தனது அம்மாவின் சாவிற்கு சுபத்ரா தான் காரணம் என நினைத்து அவளை வெறுக்கிறாள் ஆதிரா. ஆதிராவிற்கு உண்மை தெரிய வருமா? அவர் சுபத்ராவை ஏற்பாரா என்பதை நோக்கி கதை சென்று கொண்டிருக்கிறது.இதற்கிடையில் திருமாறன் மனைவி சாருமதி அகிலனை கள்ளத்தனமாக காதலிக்க, அகிலன் ஆதிராவை விரும்புவதாக ட்ராமா போட்டு திருமணம் வரை வந்து சாருமதியோடு வீட்டை விட்டு ஓடி விட, அதன்பிறகு எதிர்பாராத சூழ்நிலையில் திருமாறன்,ஆதிராவுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்வதாக செல்கிறது சீரியல் கதைக்களம்.

100 எபிசோட்களை கடந்தது
ஆதிரா திருமணத்தை நோக்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் தற்போது 100-வது நாள் எபிசோடில் நுழைந்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் சீரியல் குழுவினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஆதிராவின் திருமணம் யாருடன்
மேலும் சீரியலின் திருப்பு முனையான திருமாறன், ஆதிரா திருமணம் அடுத்த வாரத்தில் நடக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சீரியலில் புதிய திருப்பம் ஒன்று நடைபெற உள்ளது.

சீரியலில் இருந்து விலகுகிறாரா
அதாவது கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் லீட் ரோலான ஆதிரா ரோலில் நடித்து வரும் மனிஷா அஜித் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மனிஷா எதற்காக சீரியலில் இருந்து விலகுகிறார் என தெரியவில்லை. அதே சமயம் அவருக்கு பதில் அடுத்து ஆதிரா ரோலில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

புதிய ஆதிரா யார்
லேட்டஸ்ட் தகவலின் படி, ஆகஸ்ட் மாத இறுதி வரை கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் மனிஷா தொடர்வார் என்றும், அதற்கு பிறகு புதிய ஆதிராவின் என்ட்ரி நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.யார் அந்த புதிய ஆதிரா என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினாலும், சீரியல் 100 எபிசோட்களை கடந்த நிலையில் புதிய ஆதிராவை ரசிகர்கள் ஏற்பார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











