மாஸ்டர் செஃப் கிராண்ட் ஃபினாலே...எப்போ தெரியுமா
சென்னை : சர்வதேச சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தற்போது இந்தியாவிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழில் சன் டிவி.,யிலும், தெலுங்கில் ஜெமினி டிவி.,யிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர். ஆனால் தெலுங்கில் இந்த நிகழ்ச்சிக்காக தனக்கு பேசியபடி சம்பளம் தரவில்லை என நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் தமன்னா.

14 போட்டியாளர்கள்
ஆனால் தமிழில் ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் 14 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். ஆர்த்தி சம்பத், ஹரிஷ் ராவ், கெளசிக்.எஸ் ஆகியோர் இந்த போட்டியின் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.

விறுவிறுப்பான போட்டி
கடந்த பல வாரங்களாக இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. எலிமினேஷன்கள், அட்வான்டேஜ்கள் என விறுவிறுப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் முழு முனைப்புடன் போட்டி போட்டு விளையாடி வருகிறார்கள்.

கிராண்ட் ஃபினாலே
பங்கேற்ற 14 போட்டியாளர்களில் வின்னி சுக்லா, டாக்டர் நித்யா ஃபிராங்கிளின், தேவகி மற்றும் கிருத்திகா சிவநேசன் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த இறுதிப் போட்டி நிகழ்ச்சி நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ப்ரோமோ சன் டிவி.,யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அசத்தல் ப்ரோமோ
இறுதி போட்டியாளர்கள் 4 பேர், நடுவர்கள் ஆகியோர் பிரம்மாண்ட இறுதிப் போட்டி அரங்கிற்குள் நுழையும் இந்த ப்ரோமோ அனைவரையும் கவர்ந்துள்ளது. ஒவ்வொருத்தருக்கும் இது நெகிழ்ச்சியான நேரம் என்ற கேப்ஷனுடன் சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளது.

டைட்டில் வின்னர் யார்
இன்றும், நாளையும் இரவு 9.30 மணிக்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதனால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, யார் டைட்டில் வெல்லப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











