For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிகினிக்கு நோ சொன்ன நாகினி நாயகி மௌனி ராய்... சீதைக்கு குரல் கொடுக்கிறார்!

  By Mayura Akilan
  |

  சென்னை: நாகினி நாயகி மௌனிராய்க்கு தாத்தா முதல் பேரன்கள் வரை தமிழகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐந்து எதிரிகளை நாகினி பழிவாங்கினாளா? என்பதை பார்க்கவே பத்து மணிக்கு எல்லோரும் டிவி முன் அசெம்பிள் ஆகி விடுகின்றனர். என்னதான் பழிவாங்கும் கதை என்றாலும் இடை இடையே ரொமான்ஸ்... கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகளும் இருப்பதால் இந்த சீரியலின் டிஆர்பியும் எகிறுகிறது. இரவில் பார்க்க முடியாதவர்களுக்காக பகல் 12 மணிக்கு சன் டிவியில் மறு ஒளிபரப்பு செய்கின்றனர்.

  நாகினி சீரியல் நாயகி மௌனி ராய் கவர்ச்சியும் அழகும் சினிமா இயக்குநர்களை ஈர்த்துள்ளது. ஆனால் இந்த ஸ்னேக் லேடி சினிமாவில் நடிக்க வந்த ஆஃபரை மறுத்து விட்டாராம். சினிமா பட ஸ்கிரிப்டை படித்துப் பார்த்த அவர், ஒரு சீனில் பிகின் போட வேண்டும் என்று இருக்கவே, நான் பீச்சிலேயே பிகினி போட்டதில்லை, கேமரா முன் சான்ஸே இல்லை என்று கூறிவிட்டாராம்.

  நாகினியின் டூயட்

  நாகினி நாடகத்தின் மூலம் தமிழகத்தின் வீடுகளுக்குள் புகுந்து பலரது மனதைக் கவர்ந்தவர் மௌனி ராய். இரவு நேரத்தில் மகுடி சத்தம்தாம் இப்போது பலரது வீடுகளில் கேட்கிறது. சன் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாகினி நாடகத்துக்குப் பிறகு, நாகினி 2 நாடகத்தையும் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப உள்ளனர். நாகினி 2 சீரியலில் அம்மா, மகள் என இரட்டை வேடம் போடும் மௌனிராய், ஹீரோவுடன் டூயட் எல்லாம் ஆடுகிறார்.

  சீதைக்கு குரல்

  மகாயொத்த ராமன் என்ற அனிமேஷன் திரைப்படத்தில் சீதையின் கதாபாத்திரத்திற்கு மௌனி ராய் டப்பிங் பேசியிருக்கிறார். பல ஆண்டுகளாக உருவாகிவரும் இந்த அனிமேஷன் திரைப்படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

  சீதையாக நாகினி

  மௌனிராயின் அழகு, கவர்ச்சியைப் பார்த்து நிறைய சினிமா ஆஃபர்கள் இப்போது வருகிறதாம், ஆனால் முழு ஸ்கிரிப்டையும் படித்து பார்த்து விட்டே ஓகே சொல்கிறாராம். ஒரு படத்தில் பிகினி போட்டு நடிக்க வேண்டும் என்று இருக்கவே, கூலாக நோ சொல்லி விட்டாராம்.

  படிப்பாளி மௌனிராய்

  படிப்பாளி மௌனிராய்

  நாகினி நாயகி மௌனி ராய் நடிப்பாளி மட்டுமல்ல... இவர் சிறந்த படிப்பாளியாம். ஷேக்ஸ்பியர் எழுதிய புத்தகங்களை அட்டை டூ அட்டை படித்து ரசித்து ருசித்திருக்கிறாராம். நடிப்பது போரடித்து விட்டால் புத்தகம் எழுத ஆரம்பித்து விடுவராம்.

  பாடகி மௌனிராய்

  பாடகி மௌனிராய்

  ஸ்நேக் நாயகிக்கு இசை என்றாலே கொள்ளை பிரியம். தனிமையில் பாடுவது ரொம்பவே இஷ்டமாம். சூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம் ரெஸ்ட் கிடைத்தாலும் மௌனியின் உதடுகள் தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்துக்கொண்டிருக்குமாம். ரியாலிட்டி ஷோவில் பாடியிருக்கிறாராம் மௌனிராய். சீரியலில் நடித்த நேரம் போக மாடலிங், ராமாயணம் கிராபிக்ஸ் படத்தில் சீதைக்கு டப்பிங் பேசுவது என நேரத்தை கழித்து வருகிறாராம்.

  சினிமாவிற்கு எண்ட் கார்ட்

  சினிமாவிற்கு எண்ட் கார்ட்

  2004ம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடித்த பாலிவுட் ரன் படத்தில் ஒரு குட்டி ரோலில் நடித்திருக்கிறார். ஆனாலும் பாலிவும் அவரை வரவேற்கவில்லை. பஞ்சாபி படத்தில் பாகிஸ்தானி பெண்ணாக ஹீரோயின் ரோலில் நடித்திருக்கிறார் மௌனி ராய், அந்த படம் வெற்றி பெறவில்லை. எனவே சினிமாவை விட சின்னத்திரையே போதும் என்று சீரியலுக்கு திரும்பிவிட்டாராம். டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கிறார் மௌனிராய். தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும், புகைப்படங்களையும் பதிவேற்றுவதுதான் மௌனியின் அன்றாட நடவடிக்கை.

  English summary
  Mouni Roy is undoubtedly one of the multitalented actresses of telly town and now the actress has added another feather to her cap. The Naagin actress, who is an amazing dancer, singer and a fashion icon, is now apparently dubbing for mythological character Sita for an animated show.Mahayoddha Rama on November 4. The animation film talks about the epic battle between Lord Rama and Raavan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X