»   »  காயத்ரிக்கு முத்தம், டான்ஸ் தேவையா?: முதலில் கமலை எலிமினேட் செய்யச் சொல்லும் நெட்டிசன்கள்

காயத்ரிக்கு முத்தம், டான்ஸ் தேவையா?: முதலில் கமலை எலிமினேட் செய்யச் சொல்லும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்ததாக கமல் ஹாஸனை வெளியேற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரி ரகுராம் எப்பொழுது வெளியேறுவார் என்று தான் பார்வையாளர் எதிர்பார்த்தனர். ட்ரிக்கர் சக்தி கிளம்பிய கையோடு அவரும் போவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.

பார்வையார்கள் ஓட்டு போட்டாலும் காயத்ரியை பிக் பாஸ் காப்பாற்றினார்.

 காயத்ரி

காயத்ரி

காயத்ரி ரகுராம் ஒருவழியாக நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்ரியை பிக் பாஸும், கமல் ஹாஸனும் காப்பாற்றுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டார்.

 கேள்விகள்

கேள்விகள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து கமல் இருக்கும் அரங்கிற்கு வந்த காயத்ரியிடம் பலரும் கேள்வி கேட்டனர். அவரும் பதில் அளித்தார். நான் உங்களுக்கு பரிந்து பேசுவதாக பார்வையாளர்கள் நினைக்கிறார்கள் என்று காயத்ரியிடம் கூறினார் கமல்.

 சாதி

சாதி

நீங்கள் மட்டும் கெட்ட வார்த்தை பேசவில்லை. பார்வையாளர்களும் என்னை பார்த்து பேசினார்கள். சாதியின் காரணம் நான் உங்களிடம் அன்பாக இருப்பதாக கூறினார்கள் என்று கமல் காயத்ரியிடம் தெரிவித்தார்.

 முத்தம், டான்ஸ்

முத்தம், டான்ஸ்

காயத்ரி ரகுராமுக்கு நெத்தியில் முத்தம் கொடுத்து அவருடன் சேர்ந்து கமல் ஹாஸன் டான்ஸ் ஆடினார். இது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

கமல்

காயத்ரி ரகுராமுக்கு ராஜ உபச்சாரம் செய்து அனுப்பி வைத்ததை பார்த்து கமலை வெளியேற்ற வேண்டும் என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

மேடை

மேடையில் காயத்ரி மிகவும் அடக்கமாக இருந்தார். கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த விதத்தை பார்த்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மீம்ஸ் போட்டுள்ளனர்.

English summary
Fans are unhappy about the way Big Boss and Kamal gave nice send off to Calcium Gayathri Raghuram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil