»   »  ஐ லவ் யூ சொல்லாமல் வந்த காதல்… புது ஜோடி கயல்சந்திரன்- அஞ்சனா

ஐ லவ் யூ சொல்லாமல் வந்த காதல்… புது ஜோடி கயல்சந்திரன்- அஞ்சனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊடக உலகின் இப்போதைய டாக் புது லவ் ஃபேட்ஸ் கயல் சந்திரன் சன் டிவி விஜே அஞ்சனாதான். ஒரே அலுவலகத்தில் வேலை செய்த போது வராத லவ் டுவிட்டரில் லைக் போட்டபோது வந்ததாக சொல்கின்றனர் இந்த காதல் ஜோடி.

கயல் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆன சந்திரன் தனது எதார்த்தமான நடிப்பால், அடுத்தடுத்த படங்களில் புக் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள பைசல், கிரகணம் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தற்போது சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனி படத்தில் நடித்து வருகிறார்.

கயல் சந்திரனுக்கும் சன் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனாவுக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 29ம் தேதி சென்னையில் நடக்கிறது.

சந்திரன், அஞ்சனா நிச்சயம் பற்றி செய்தி அறிந்த உடனே ஊடகங்களில் இந்த புது ஜோடியின் பேட்டி களைகட்டி வருகிறது. நிஷா, கணேஷ் வெங்கட்ராம் ஜோடி போல அடுத்த ஜோடி திருமண வாழ்க்கையில் இணைய தயாராகி வருகிறது.

கயல் சேர்த்து வைத்த காதல்

கயல் சேர்த்து வைத்த காதல்

அஞ்சனா விஜேவாக இருந்தபோது நான் சூரியன் எஃப் எம்மில் பணியாற்றினேன். அப்போது எல்லாம் எங்களுக்கு காதல் எதுவுமில்லை. கயல் படம் முடிந்த பின்னரே எங்களுக்குள் காதல் வந்தது என்கிறார் சந்திரன்.

வீட்டில் எதிர்ப்பு இல்லை

வீட்டில் எதிர்ப்பு இல்லை

இவர்களின் காதலுக்கு வீட்டில் எந்த எதிர்ப்புமே வரவில்லையாம். காதலித்து இரு வீட்டார் சம்மத்தோடு நடக்கப் போகும் திருமணமாம். இந்த காதல் ஜோடிக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிகிறதாம்.

அஞ்சனா மாதிரி பெண்

அஞ்சனா மாதிரி பெண்

நான் அஞ்சனா போல அழகுள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என் அம்மாவிடம் சொன்ன போது, அதற்கு அவர், ‘‘நீ அஞ்சனாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே'' என்று சொன்னார் பிறகுதான் தைரியமாக அஞ்சனாவிடம் காதலை சொன்னேன் என்கிறார் சந்திரன்.

சம்மதம் சொன்ன அஞ்சனா

சம்மதம் சொன்ன அஞ்சனா

அஞ்சனாவிடம் ஐ லவ் யூ என்றெல்லாம் சொல்லவில்லை. ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா' என்றேன். அவர் மிகுந்த சந்தோசத்துடன் சரி என்றார். அவர் திருமணத்துக்கு சம்மதிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நிச்சயிக்கப்பட்ட திருமணம்

நிச்சயிக்கப்பட்ட திருமணம்

அஞ்சனா சரி என்று சொன்ன வார்த்தை என்னை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்கிறோம். எங்களுக்கு நடக்க இருப்பது காதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்கிறார் சந்திரன்.

ரொம்ப நல்ல பையன்

ரொம்ப நல்ல பையன்

எங்கள் இருவருக்கும் நேரில் பார்த்த போது வராத காதல், டுவிட்டரில் வாழ்த்து, வாட்ஸ் அப்பில் சாட்டிங் என்று வளர்ந்தது. இப்போது திருமணத்தில் வந்து முடிந்துள்ளது என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் அஞ்சனா.

English summary
When actor Chandran of Kayal fame and city-based Video Jockey (VJ) Anjana Rangan got to know each other, little did both think they would end up marrying each other.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil