twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "மம்மி"களை வில்லியாக்கி மாமியார்களைத் தூக்கி வைக்கும் சீரியல்கள்...!

    |

    சென்னை: தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து விட்டன சீரியல்கள் என்றால் மிகையில்லை.

    வாரத்தில் ஒருநாள் மட்டுமே ஒளிபரப்பான சீரியல்கள் என்ற நிலை மாறி காலை முதல் இரவு படுக்கப் போகும் வரை தொடர்ச்சியாக சீரியல்களை ஒளிபரப்பி பெண்களை திணற வைக்கின்றன தமிழ் சேனல்கள்.

    தமிழ் சினிமாவைத் தொடர்ந்து, மாமியார்களை வில்லிகளாக்கியதில் சீரியல்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

    உறவுகளை எதிரிகளாக்கும்....

    உறவுகளை எதிரிகளாக்கும்....

    காலை முதல் இரவு வரை சீரியல்களிலேயே மூழ்கிப் போயுள்ள குடும்பத்தலைவிகள், தங்களது உறவுகளையும் எதிரிகளாகவே பார்க்கும் மனோபாவத்தை சீரியல்கள் உருவாக்கி விடுகின்றன.

    வில்லிகளாகும் அம்மாக்கள்...

    வில்லிகளாகும் அம்மாக்கள்...

    அந்தவகையில் சமீபகாலமாக சில தமிழ் சீரியல்களில் அம்மாக்களை வில்லிகளாகக் காட்டி வருகிறார்கள். அம்மாக்களுக்குப் பதில் மாமியார்கள் மருமகள்கள் மீது அதிக அக்கறை மற்றும் அன்போடு இருப்பதாகவும் அதில் காட்டுகிறார்கள்.

    நாதஸ்வரம் மலர்...

    நாதஸ்வரம் மலர்...

    நாதஸ்வரம் சீரியலில் கோபியின் மனைவியான மலர், தனது பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டைத் தான் ஆரம்பத்தில் இருந்தே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார். நிறைமாத கர்ப்பிணியான தனது மகளைச் சரியாக கவனித்துக் கொள்ளாத மாமியாரைத் திட்டுவார்.

    மாமியார் செய்வதே சரி...

    மாமியார் செய்வதே சரி...

    ஆனால், அப்போதும் கூட மலர் தனது மாமியார் செய்ததே சரி என வாதாடி, பெற்றோர்களை எடுத்தெறிந்து பேசுவார். பிரசவம் முடிந்ததும் தனது பெற்றோரை விட்டுவிட்டு மாமியார் வீட்டோடு சென்று விடுவார்.

    அம்மானா சும்மாவா...?

    அம்மானா சும்மாவா...?

    உண்மையிலேயே மாமியார்கள் நல்லவர்களாகவே இருந்தாலும், நிச்சயமாக அவர்களை விட அம்மாக்களின் பாசம் அதிகமாகத் தானே இருக்கும். பத்து மாதம் சுமந்த தன் குழந்தைகளுக்கு கேடு நினைப்பார்களா தாய்மார்கள்.

    அழகி... அழகி...

    அழகி... அழகி...

    அழகி என்ற மற்றொரு சீரியலில் மருமகனைப் பிரிந்து வந்த தன் மகளின் கர்ப்பத்தைக் கலைக்க டாக்டரிடம் மருந்து வாங்கி வருகிறார் அம்மா ஒருவர். கடைசி நேரத்தில் உண்மை தெரிந்து பாய்ந்து வந்து மருமகளையும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்றுகிறார் மாமியார்.

    தெய்வமகள்...

    தெய்வமகள்...

    தெய்வமகள் என்றொரு சீரியல். அதில் பணக்கார மருமகனின் சொத்து முழுவதையும் அபகரித்து, சம்பந்தியை பழி வாங்க நினைக்கிறார் அம்மா ஒருவர். இதற்காக மகளின் வாழ்க்கையை பணயம் வைக்கிறார்.

    அம்மாவின் சுயரூபம்...

    அம்மாவின் சுயரூபம்...

    இறுதியில் அம்மாவின் சுயரூபத்தை அம்பலமாக்கி, தன் மாமியாரைக் காக்கிறார் மருமகள். இதைக் கண்டு நெகிழ்ந்து போன மாமியார், தன் நிறுவனத்தின் உயரதிகாரியாக மருமகளை பணியமர்த்தி அழகு பார்க்கிறார்.

    நோயாளி பட்டம்...

    நோயாளி பட்டம்...

    ஏற்கனவே, இதே நாடகத்தில் தன் மகளின் காதலை அழித்து, அவளுக்கு நோயாளி பட்டம் அளித்து அம்மாவே, அவளது திருமணத்தைத் தடுத்து நிறுத்துவது போன்று காட்சிகள் அமைக்கப் பட்டிருந்தது.

    தெய்வம் தந்த வீடு...

    தெய்வம் தந்த வீடு...

    இதேபோல், தெய்வம் தந்த வீடு என்ற சீரியலில் மாமியார் ஒருவர் தனது மருமகளின் வாழ்க்கைக்காகப் போராடுகிறார். மருமகளின் வயிற்றில் உள்ள குழந்தையை அழிக்க வேண்டும் என கூறிய மகனை எதிர்த்து, மருமகளைத் தன்னுடன் தங்க வைப்பது போன்று காட்சிகள் வருகிறது.

    English summary
    A new trend is being followed in mega serials now as the directors have promoted mother in laws as heroines and changed mothers as villis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X