ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 27ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியல் சனிக்கிழமை எபிசோடில் தியாவை காப்பாற்ற சென்ற வெற்றி காணாமல் போன நிலையில், வெற்றி திரும்ப கிடைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. இன்றைய எபிசோடில், லட்சுமி துளசிக்கு போன் செய்து தல தீபாவளியை கொண்டாட வீட்டுக்கு அழைக்கிறாள். துளசி அப்பா இறந்து கொஞ்ச நாள் தான் ஆகுது, அஞ்சலி வேற எப்படி இருக்கா.. எதுக்கு இதெல்லாம் என்று கேட்க லட்சுமி அப்பா இருந்தாலும் இதுதான் செஞ்சிருப்பாரு எல்லாம் முறைப்படி நடக்கணும் என்று சொல்கிறாள்.

அடுத்த நாள் வெற்றி துளசி லட்சுமி வீட்டிற்கு கிளம்ப அபிராமி எங்க போறீங்க என்று கேட்க வெற்றி தல தீபாவளியை கொண்டாட அத்த வீட்டுக்கு போறேன் என்று சொல்கிறான். அப்போது அபிராமி எல்லா வருஷமும் இங்கதாங்க கொண்டாடுவோம் என்று சொல்ல இந்த வருஷம் அங்கு வருவதாக வாக்கு கொடுத்து இருக்கேன் என்று வெற்றி கிளம்புகிறான். மீனாட்சி தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இருவருக்கும் தங்கச் செயினை தீபாவளி கிப்டாக கொடுத்த வெற்றி என்ன அண்ணி இது புதுசா இருக்கு என்று கேட்க மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள். தல தீபாவளி என்பதால் வாங்கியதாக சொல்லி சமாளிக்கிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

இங்கே லட்சுமி வெற்றி, துளசிக்கான வாங்கிய நகைகளை எடுத்து அஞ்சலியிடம் காட்டிக் கொண்டிருக்கிறான். அதேப் போல் முருகன், ரேவதிக்கு தல தீபாவளி என்பதால் அவர்களுக்கும் நகை எடுத்திருப்பதாக சொல்கிறாள். அடுத்து வெற்றி, துளசி, தியா வீட்டுக்கு வர லட்சுமி குடும்பத்தினர் அவர்களை வரவேற்கின்றனர். இங்கு மீனாட்சி டென்ஷனாக யோசனையில் இருக்க அங்கு வந்த அவளது கணவன் என்ன மீனாட்சி நீயும் அம்மா வீட்டுக்கு போய் இருக்கலாம் என்று யோசிக்கறியா? என்று கேட்க அவங்க உறவே வேணாம்னு நான் இருக்கேன். அவங்களை எதுக்கு ஞாபகப்படுத்துறீங்க என்று கோபப்படுகிறாள்.

அண்ணா: சௌந்தரப்பாண்டியின் திட்டத்தின் படி சண்முகத்தின் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து,க வீட்டுக்குள் நுழைந்த பாண்டியம்மாள் கனியின் ஜாதகத்தை யாருக்கும் தெரியாமல் திருடி அதை சாமியாரிடம் கொடுக்கிறார். அந்த ஜாதகத்தை எடுத்துச் சென்று பூசாரி ஒருவரிடம் கொடுக்கிறார், அதை பார்த்த பெண் ஒருவர், இந்த பெண் மிகவும் அழகாக லட்சணமாக இருக்கிறாள் என்று சொல்கிறாள். அப்போது பூசாமி பெண் மட்டும் லட்சணமானவள் இல்லை, இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வருக்கு மிகப்பெரிய உயரத்தில் அடைவார் அந்த அளவுக்கு இந்த பெண் ராசிக்கான பெண் என்கிறார்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம் : சனிக்கிழமை எபிசோடில் ஸ்ரீஜா விஷாலுக்கு கொடுத்த கிப்டுகள் அனைத்தும் தான் செய்து கொடுத்தது என்ற விஷயம் இசைக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில், விஷால், ஸ்ரீஜா உடன் பேசிக்கொண்டிருக்க இதை சிந்தாமணி கவனிக்கிறாள். விஷாலுக்கு ஏற்கனவே காதல் இருக்கு என்பதை தெரிந்து கொள்ளும் அவள் இதை பானுமதிக்கு தெரியப்படுத்துகிறாள். அடுத்த நாள் காலையில் சுப்ரதா வீட்டில் பந்தகால் நடும் வேலைகள் நடக்க விஷாலை போட்டோ எடுக்கும் ராகவ் அதை வர்ஷினிக்கு அனுப்பி வைக்க வர்ஷினி விஷால் அணிந்திருக்கும் டி ஷர்ட் கலரில் இசைக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்க இசையும் அதை போட்டுக்கொள்கிறாள். அடுத்ததாக இவர்கள் பந்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு வர இசையை பார்த்து விஷால் டென்ஷன் ஆகிறான். சிந்தாமணி ஸ்ரீஜாவை தனது தோழி என சொல்லி வீட்டிற்குள் அழைத்து வருகிறாள். இதனால் ஸ்ரீஜா விஷால் வீட்டில் தங்குகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X