ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 28ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியலில், வெற்றி தல தீபாவளி கொண்டாட துளசி வீட்டுக்கு வந்த நிலையில், லட்சுமி, துளசி மற்றும் ரேவதி இடம் மோதிரத்தை கொடுத்து வெற்றி மற்றும் முருகனுக்கு போட்டு விட சொல்கின்றனர். உடனே வெற்றி எதற்கு இதெல்லாம் வேண்டாம் என்று மறுக்க லட்சுமி, உங்க மாமா இருந்திருந்தாலும் இதெல்லாம் பண்ணி இருப்பாரு என்று சொல்லி ஏற்றுக்கொள்ள வைக்கிறாள். இந்த சமயத்தில் வெற்றிக்கு குடோனில் நடந்த ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வர அவன் உடனடியாக வெளியே கிளம்ப வேண்டும் என கிளம்பி வருகிறான்.
மறுபக்கம் மீனாட்சி தனது அண்ணனுக்கு ஃபோன் செய்து வெற்றி வான்டடா தான் வந்து குழந்தையை காப்பாற்றுவதற்காக அந்த கும்பலிடம் மாட்டி இருக்கான். அவன்கிட்ட கொஞ்சம் உஷாராவே இரு என்று சொல்கிறாள். மேலும் என்னுடைய கம்மல் ஒன்னு குடோன்ல விழுந்துடுச்சுன்னு நினைக்கிறேன் அது மட்டும் எப்படியாவது தேடி எடுத்து விடனும் என்று சொல்லி இருவரும் குடோனுக்கு வர வெற்றியின் இதே குடோனுக்கு வருகிறான்.

அண்ணா: எம்எல்ஏ திருமணம் இந்த நட்சத்திரத்தில் உள்ள சின்ன பெண்ணை திருமணம் செய்தால், பதவி, பணம் தேடி வரும் என்று சொல்ல, பாண்டியம்மா கனியின் ஜாதகத்தை திருடி அவர்களிடம் கொடுக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். இன்றைய எபிசோடில், பரணி வேலை விஷயமாக ஊட்டி செல்ல வேண்டும் என்று செல்ல பாக்கியம் சண்முகத்தை கூட கூட்டிட்டு போ என்று சொல்கிறாள். இதை கவனித்த பாண்டியம்மா கனியை தூக்க இதுதான் சரியான நேரம் என திட்டம் போடுகிறாள்.
பிறகு கனியிடம் நீயும் ஊட்டி வருவேன் அம்மா கனவில் வந்து என்னையும் ஊட்டி போக சொன்னாங்க என்று சொல்ல, அது எப்படி அம்மா உன் கனவுல வந்து எப்படி ஊட்டிக்கு போக சொல்லுவாங்க என்று கலாய்த்து சிரிக்கின்றனர். ஆனால் கனி நானும் ஊட்டி வருவென் என்று துணிமணிகளை பேக் செய்கிறாள்.பாண்டியம்மா எம்எல்ஏவுக்கு ஃபோன் போட்டு கனியே கடத்தி கல்யாணம் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சு என்று சொல்கிறாள். பிறகு சண்முகம் பரணி ஊட்டி கிளம்ப கனி ஸ்கூலுக்குச் செல்ல எம்எல்ஏவின் ஆட்கள் கனியை கடத்த தயாராகின்றனர்.

பாரிஜாதம்: விஷால் ஸ்ரீஜாவை காதலிக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட சிந்தாமணி, சுபத்திரா வீட்டுக்கு அவளை அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப் போவதை பார்க்கலாம். இன்றைய எபிசோடில், சிந்தாமணி விஷாலை சந்தித்து எனக்கு உன்னுடைய காதல் பத்தி எல்லா விஷயமும் தெரியும். அதனால் தான்,நான் ஸ்ரீஜாவை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கேன். உங்கள நான் சேர்த்து வைக்கிறேன் என்று சொல்கிறாள்.
அடுத்ததாக பந்த கால் நட்ட இடத்தில் மாலை மாற்றி பொட்டு வைக்க வேண்டும் என்று சொல்ல விஷால் இசைக்கு பொட்டு வைக்க தயங்குகிறான். ராகவ் அவனை தட்ட விஷால் இசைக்கு பொட்டு வைத்து விட இதை பார்த்து ஸ்ரீஜா கடுப்பாகிறார். அதையடுத்து, ஸ்ரீஜா, தனது அம்மாவிற்கு நடந்த அவமானத்தை நினைத்து பார்க்கிறாள். அதாவது, ஸ்ரீஜாவின் அப்பா அம்மா இருவரும் பாடர்களாக இருக்கின்றனர். இவர்கள் விட இசை நன்றாக பாடுகிறாள். ஒரு கச்சேரியில் ஸ்ரீஜாவின் அம்மா பாட சுப்ரதா அதைப் பார்த்து பாராட்டுகிறாள். அங்கிருந்த இசையின் அப்பா இது என் பொண்ணு பாடுன பாட்டு அவங்க பாடவில்லை என்று உண்மையை உடைக்க சுபத்ரா ஸ்ரீஜாவின் அம்மாவை அவமானப்படுத்துகிறாள். சுபத்ராவால் தனது குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழி தீர்க்கவே ஸ்ரீஜா, விஷாலை காதலிப்பது போல நடிக்கிறாள் என்பது பிளாஷ் பேக்கில் தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications











