ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 6ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

கெட்டிமேளம்: லட்சுமி மற்றும் அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது முருகன் குறித்து விசாரிக்கிறாள். லட்சுமி முருகனைத் தத்தெடுத்தது, அவனது அம்மாவின் போட்டோவை ஆசிரமத்தில் இருந்து வாங்கியது போன்ற விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறாள். பிறகு அஞ்சலி முருகனுக்கு அடிபட்டு இருப்பதால் அவனை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறாள். போகும்போது துளசியையும் வரவைத்து அவளிடம் நடந்த விஷயங்களை சொல்கிறாள். மேலும் வீட்டிற்கு சென்று முருகனின் அம்மாவின் போட்டோவை கொண்டு வர முடிவெடுக்கின்றனர். வீட்டுக்கு வந்த மகேஷ், அஞ்சலியிடம் லட்சுமி பற்றி விசாரிக்க, அவள் ஹாஸ்பிடல் சென்று இருக்கும் விஷயத்தை அப்படியே வீட்டுக்கு போய் முருகன் அம்மாவின் போட்டோவை கொண்டு வரப் போகும் விஷயத்தை சொல்ல மகேஷ் அதிர்ச்சி அடைகிறான்.

இதை தடுக்க நினைக்கும் மகேஷ், அஞ்சலிக்கு போன் செய்து நீங்க ஹாஸ்பிடல் இருங்க நானே வந்து உங்கள பிக்கப் பண்ணிக்கிறேன் என்று சொல்ல, அஞ்சலி கேப் புக் செய்துவிட்டேன் என சொல்லி போனை வைத்து விடுகிறாள். இதனால், மகேஷ் வேக வேகமாக லட்சுமி வீட்டிற்கு வந்து பூட்டை உடைத்து முருகனின் அம்மாவின் போட்டோவை கைப்பற்ற முயற்சி செய்கிறான். ஆனால், மகேஷ் வீட்டில் இருக்கும் போதே இருவரும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: சண்முகம் குடும்பத்தை அழிக்க சௌந்தரபாண்டி வேனில் பாம் வைத்த நிலையில் இன்று நடக்கப் போவதை பார்க்கலாம். சண்முகம் குடும்பத்தினர் பாண்டியம்மாவையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்ல சௌந்தரபாண்டி பதற்றத்துடன் பின் தொடர்ந்து வருகிறார். சண்முகம் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து இறங்கியதும் அறிவழகன், ரத்னா மற்றும் சிவபாலன், வீரா ஆகியோருக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்கின்றனர்.

சௌந்தரபாண்டி பாண்டியம்மாவை கூப்பிட பாண்டியம்மா நல்ல வேலை பாம் வெடிக்கல என நிம்மதி அடைகிறாள். பாம்ப வைப்பவர்கள் சௌந்திரபாண்டிக்கு போன் செய்து பாம் எடுத்து விட்டதாக சொல்கின்றனர். பரணி, வீராவை பாக்கியம் வீட்டிற்கு வாழ அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்ல சண்முகம் அவளுக்கு விருப்பம் இருந்தால் போய் வாழட்டும் என வாக்குவாதம் செய்கிறான். மறுபக்கம் சௌந்தரபாண்டி, பாண்டியம்மா ஆகியோர் காரில் சென்று கொண்டிருக்க ரவுடிகள் போன் செய்ய சௌந்தரபாண்டி என்ன விஷயம் என்று கேட்கிறார். பாமை உங்க கார் டிக்கில தான் வச்சிருக்கோம் என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைந்து டிக்கியை திறக்க பாம் வெடித்து சிதறுகிறது. பிறகு இருவரும் கரிக்கட்டையாக வீட்டுக்கு வர எல்லோரும் என்னாச்சு என்று கேட்கின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: ராகவ்வுக்கும் தீப்திக்கும் திருமணம் செய்து வைக்க பானுமதி ஜாதகத்தை மாற்றி எழுதிய விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம். இசை இந்த விஷயத்தை எப்படியாவது சுப்ரதாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என முயற்சி செய்ய பானுமதி நாடகம் போட்டு ஆட்டத்தை கலைத்து விடுகிறாள். விஷால் இசையை பார்க்க அவளது வீட்டிற்கு வர அவள் இல்லாததால் எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி லெட்டர் எழுதி வைத்து விட்டு அங்கிருந்து கிளம்ப ருக்குமணி இதை கவனிக்கிறாள். விஷால் சென்றதும் லெட்டரை எடுத்து படிக்க அதில் அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று எழுதி இருக்க அதிர்ச்சி அடைகிறாள்.

மங்காவிடம் விஷயத்தை சொல்ல இசைக்கு தெரியாமல் மறைக்க சொல்கிறாள். அடுத்து இசை கோவிலுக்கு வர ப்ரியாவும் அங்கு அப்பாவுடன் வருகிறாள். அப்பா போதையில் இருப்பதால் கோயிலுக்குள் வராமல் ஆட்டோவில் இருக்க ப்ரியா கோவிலுக்கு வருகிறாள். ஏன் டல்லாக இருக்க என்று கேட்க இசை நடந்த விஷயத்தை சொல்கிறாள். ப்ரியா கண்டிப்பா பானுமதி ஜாதகத்தை மாற்றி எழுதி இருக்காங்க என்று ஆதாரம் கிடைக்கும் என ஆறுதல் சொல்கிறாள். பிறகு விஷால் காதலியை சந்திக்க வெளிநாடு கிளம்பும் அவள் விஷாலை பிரிய மனமில்லாமல் அவன் கையால் குங்குமம் வைத்து கொண்டு கிளம்பி செல்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X