»   »  பொங்கலுக்கு பாயும்புலி, பாகுபலி, என்னை அறிந்தால், ஓகே கண்மணி... டிவியில பாருங்க

பொங்கலுக்கு பாயும்புலி, பாகுபலி, என்னை அறிந்தால், ஓகே கண்மணி... டிவியில பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய மெகா ஹிட் திரைப்படங்கள் வரும் பொங்கல் தினத்தன்று சிறப்பு திரைப்படங்களாக ஒளிபரப்பாக தயாராகி வருகின்றன தொலைக்காட்சி சேனல்கள்.

தை பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 3 நாட்கள் விடுமுறை என்பதால் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. சிறப்பு பட்டிமன்றம் ஒருபக்கம் களைகட்ட... நாங்களும் இருக்கோம்ல என்று களமிறங்க உள்ளனர் சின்னதிரை தொகுப்பாளினிகள்.


இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்துள்ளதால் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் இருந்து லைவ் ஆக ஒளிபரப்ப தயாராகி வருகின்றன செய்தி சேனல்கள். எனினும் சிறப்பு திரைப்படங்களுக்கே ரசிகர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதால் டிவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களின் பட்டியலை உங்களுக்கு அளிக்கிறோம்.


என்னையறிந்தால், பாகுபலி

என்னையறிந்தால், பாகுபலி

ஜெயா டிவியில் பொங்கல் பண்டிகை தினமான ஜனவரி 15 வெள்ளிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு அஜீத், திரிஷா நடித்த என்னையறிந்தால் ஒளிபரப்பாக உள்ளது. அதேநாளில் பிற்பகல் 1.30 மணிக்கு சூப்பர் ஹிட் திரைப்படமான பாகுபலி ஒளிபரப்பாக உள்ளது.


ஓகே கண்மணி, 36 வயதினிலே

ஓகே கண்மணி, 36 வயதினிலே

மாட்டுப்பொங்கல் தினமான ஜனவரி 16ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு ஜோதிகா நடித்த 36 வயதினிலே திரைப்படமும், மாலை 6 மணிக்கு ஓகே கண்மணி திரைப்படமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சன்டிவியில் பாபநாசம், பாயும்புலி

சன்டிவியில் பாபநாசம், பாயும்புலி

சன் டிவியில் வெள்ளிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு கமல் கவுதமி நடித்த பாபநாசம் ஒளிபரப்பாக உள்ளது. சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு விஷால், காஜல் அகர்வால் நடித்த பாயும்புலி பட்டையை கிளப்ப போகிறது.
கலைஞர் டிவியில் வை ராஜா வை

கலைஞர் டிவியில் வை ராஜா வை

தமிழ்புத்தாண்டு, தை திருநாள் கொண்டாடுகிறது கலைஞர் டிவி. சிறப்பு திரைப்படமாக ஜனவரி 15 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வை ராஜா வை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.


வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

பொங்கல் நாளில் காலை 11 மணிக்கு சிவகார்த்திக்கேயன், ஸ்ரீ திவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படமும், 16ம் தேதி காலை 11 மணிக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.


விஜய் டிவி, 10 எண்றதுக்குள்ள, சண்டிவீரன்

விஜய் டிவி, 10 எண்றதுக்குள்ள, சண்டிவீரன்

விஜய் டிவியில் பொங்கல் தினத்தன்று விக்ரம், சமந்தா நடித்த 10 எண்றதுக்குள்ள திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. ஜனவரி 16ம் தேதி அதர்வா, கயல் ஆனந்தி நடித்த சண்டிவீரன் சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது. ஜனவரி 16ம் தேதி 7 மணிக்கு கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.


ராஜ் டிவி

ராஜ் டிவி

ராஜ் டிவியில் போக்கிரி மன்னன் திரைப்படமும், இரவும் பகலும் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது. இன்னும் பாலிமர் டிவி, வேந்தர் டிவி, புதுயுகம் டிவியில் ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களை இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.


நம்பர் 1 யாருக்கு கிடைக்கும்

நம்பர் 1 யாருக்கு கிடைக்கும்

கடந்த ஒருவாரகாலமாகவே பொங்கல் பண்டிகைக்கான திரைப்படங்கள் பற்றிய முன்னோட்டங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ரசிகர்கள் எந்த திரைப்படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறார்களோ அந்த படமே டிஆர்பியில் முதலிடம் பிடிக்கும் என்பதால் போட்டி போட்டு புதுப்படங்களை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன. பொங்கல் ரேஸில் முந்தப்போவது அஜீத்தா, விக்ரமா? விஷாலா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
English summary
Sun TV Pongal 2016 Special movies Telecast time, Vijay TV 2016 pongal festival film telecast schedule, which movie telecast in Jaya TV for pongal festival 2016. Papanasam, Payumpuli, Ok Kanmani, 10 endrathukulla movies will telecast on TV chennals.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil