»   »  டிசி கிரி தப்பிச்சிட்டாரே.... பிரபாவுக்கு யார் கூட கல்யாணம் நடக்கும்? - பிரியமானவள்

டிசி கிரி தப்பிச்சிட்டாரே.... பிரபாவுக்கு யார் கூட கல்யாணம் நடக்கும்? - பிரியமானவள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரியமானவள் சீரியலில் புதிய திருப்பமாக ஜெயிலில் இருந்து திட்டமிட்டு டிசி கிரி தப்பிவிட்டார். கிருஷ்ணன் வீட்டில் கடைசி மகன் பிரபாவிற்கு நந்தினியை பேசி முடிக்க, பிரபாவோ தான் இசையைத்தான் விரும்புவதாக கூறுகிறான்.

பிரபாவின் மனதில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து வைத்து விடலாம் என்று நினைத்து இசை வீட்டிற்கு பெண் கேட்டு செல்கின்றனர். இசையின் அப்பா முத்துக்குமார், இலங்கையில் இருந்து வந்தவர் என்பதால் அவரது வீட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் படம் வைத்துள்ளனர்.

முத்துக்குமார் வீட்டில் மாட்டப்பட்டிருந்த வயதான தம்பதியரின் படத்தை பார்த்து உமாவிற்கு தன் பெற்றோர் படம் இங்கே எப்படி வந்தது என்ற கேள்வி எழுகிறது. முத்துக்குமார்தான் காணாமல் போன தன் அண்ணன் என்று தெரிந்து கொள்கிறாள் உமா.

அண்ணன் தங்கை பாசம்

அண்ணன் தங்கை பாசம்

உமாவும் முத்துக்குமாரும் இலங்கையில் நடைபெற்ற போரின் போது ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து விட்டனர். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது இருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். அண்ணன் மகளைத்தான் தன் மகனுக்கு திருமணம் செய்யப்போகிறோம் என்ற மகிழ்ச்சி உமாவிற்கு ஏற்படுகிறது.

மறுக்கும் இசை

மறுக்கும் இசை

பிரபாவிற்கு இசையை பெண் கேட்கிறாள் உமா. ஆனால் இசையோ, பிரபாவை நந்தினிதான் திருமணம் செய்ய நினைக்கிறாள். எனவே நந்தினிதான் சரியாக வருவாள் என்று கூறுகிறாள். நந்தினியை பெண் கேட்டு செல்வோம் என்று உமா கூற, கிருஷ்ணன் முயற்சியில் நந்தினியே இசையிடம் பேசி சம்மதிக்க வைக்கிறாள்.

கிரி குடும்ப சதி

கிரி குடும்ப சதி

கிரியின் மனைவியும் நந்தினியும் இணைந்து சதித்திட்டம் போடுகின்றனர். எப்படியாவது கிருஷ்ணன் வீட்டுக்கு மருமகளாகவேண்டும் என்று நல்லவள் போல நடிக்கிறாள் நந்தினி. கிரியும் போலீசில் இருந்து தப்பித்து ஈஸ்வரியின் மாப்பிள்ளையுடன் சேர்ந்து சதி செய்கிறான்.

நிச்சயம் செய்த உமா

நிச்சயம் செய்த உமா

அண்ணன் முத்துக்குமாரை வீட்டுக்கு வரவழைத்து தன் மகனுக்கு இசையை பெண் கேட்டு உடனே நிச்சயம் செய்கிறாள் உமா. ஆனால் நந்தினியும், ஈஸ்வரியும், இந்த திருமணத்தை எப்படியும் நிறுத்துவோம் என்று மனதிற்குள் திட்டமிடுகின்றனர்.

அவந்திகாவின் திட்டம்

அவந்திகாவின் திட்டம்

நடராஜ் உடன் விவாகரத்து வரை போன அவந்திகாவிற்கு புதிய திருப்பமாக கர்ப்பமாக இருப்பது தெரியவரவே, உமாவும் அவந்திகாதான் தன் மருமகள் அவளை விட்டுத்தரமாட்டேன் என்று கூறுகிறாள். ஆனால் அவந்திகாவே, எப்படியாவது நடராஜை அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் அழைத்து வருவேன் என்று தனது திட்டத்தை தோழியிடம் கூறுகிறாள்.

15 கோடி என்னவானது

15 கோடி என்னவானது

15 கோடி என்னவானது

எத்தனை நாள் ஓட்டுவாங்களோ?

எத்தனை நாள் ஓட்டுவாங்களோ?

பிரியமானவள் தொடரில் நடராஜ் அவந்திகா கல்யாணமும், சரவணன் பூமிகா கல்யாணமும் பரபரப்பாகவே நடந்தது பல வாரங்கள் இழுத்தனர். திலீபன் - கவிதா கல்யாணம் ஒரே நிமிடத்தில் நடந்து முடிந்தது. இப்போது பிரபாவிற்கு கல்யாணம் நடக்கப் போகிறது. இந்த கல்யாணத்தை தடுக்க ஈஸ்வரியோடு கூட்டணி அமைத்திருக்கிறாள் நந்தினி. போதாகுறைக்கு கிரி வேறு தப்பி வந்திருக்கிறான் இன்னும் எத்தனை நாள் இழுப்பாங்களோ?

English summary
Sun TV Priyamanaval Serial new turning point DC Giri escape from Police. Subhalekha Sudhakar, Praveena, Dharish, Vijay, Vineeth, Aseem, Balasubramaniam, ... This is about priyamanaval seria

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil