Priyanka Deshpande: விஜே பிரியங்கா வீட்ல விசேஷம்.. கணவருடன் அவர் கொடுத்த செம போஸ்.. குவியும் வாழ்த்து!

சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் கணவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை ஷேர் செய்துள்ளார். பிரியங்காவின் ரசிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் பிரியங்காவின் கணவர் வசிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

திருமணங்களில் டிஜே வாசித்து வந்த வசி சாச்சியுடன் காதல் ஏற்பட்ட நிலையில், விஜய் டிவி பிரியங்கா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எளிமையான முறையில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய குடும்பத்தினர் சூழ திருமணம் செய்துக் கொண்டார்.

Priyanka Deshpande celebrates her husband birthday with a lovely post
Photo Credit:

பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் வைரலான நிலையில், வசி சாச்சி குறித்த தகவல்களும் வெளியாகின. அவர் டிஜேவாகவும் ஒரு ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

சந்தோஷமான வாழ்க்கை: முதல் திருமணம் பிரியங்காவுக்கு பல கசப்பான அனுபவங்களை தர அதில் இருந்து விலகிய பிரியங்கா தேஷ்பாண்டே பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். சூப்பர் சிங்கர் உள்ளிட்ட ஏகப்பட்ட விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா 2வதாக வசி சாச்சியை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், மீண்டும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

கணவருக்கு பிறந்தநாள்: "பல போராட்டங்கள், குழப்பங்கள், காத்திருப்பு என அனைத்துக்கும் நீ என்னை கண்டுபிடித்த நாள் ஒரு நல்ல தீர்வாக அமைந்தது. ரொம்ப நன்றி என் அழகான மனுஷனே.. ஹேப்பி பர்த்டே மை லவ்" என விஜே பிரியங்கா தேஷ்பாண்டே தனது கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்து எடுத்த ரொமாண்டிக் போட்டோவையும் ஷேர் செய்து இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குவியும் வாழ்த்து: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்காவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் மட்டுமே சுமார் 3.5 மில்லியன் பேர் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர். விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தற்போது பிரியங்காவின் கணவர் வசி சாச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X