»   »  விக்கிரமாதித்தன் சிம்மாசனம்.. அதை அடைய 32 படிகள்.. ஒரு விறுவிறுப்பான சீரியல்!

விக்கிரமாதித்தன் சிம்மாசனம்.. அதை அடைய 32 படிகள்.. ஒரு விறுவிறுப்பான சீரியல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுயுகம் தொலைக்காட்சியில் புத்தம் புதிய வடிவில் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதிகாச தொடர்கள், புராண கதைகள், மாய மந்திர கதைகளுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம்தான். ராமாயாணம், மகாபாரதம் இன்றைக்கும் அழியா புகழோடு சீரியல்களாக தொலைக்காட்சிகளில் வலம் வருகின்றன.

அதேபோல வேதாளம் விக்ரமாதித்யன் கதைகளுக்கு என்றைக்கும் வரவேற்பு அதிகம்தான் குழந்தைகளுக்கு பிடித்தமான கதை விக்ரமாதித்யன் கதை. பல தொலைக்காட்சிகளில் சீரியல்களாக ஒளிபரப்பாகியிருந்தாலும் புதுயுகம் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

ராஜா விக்ரமாதித்யன்

ராஜா விக்ரமாதித்யன்

நம் இந்திய பாரம்பரியத்தில், மகாராஜா விக்கிரமாதித்தன் கதைகளுக்கு தனியிடம் உண்டு. நாடாறு மாதம் காடாறு மாதமாக 2,000 ஆண்டுகள் ஆட்சி புரிந்த விக்கிரமாதித்தன், மகாகாளி அருளால் கிடைத்த சிம்மாசனத்தில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி நடத்தினான். பிரச்னைகளுடன் அவனைத் தேடி வருபவர்களுக்கு சாதுர்யமாகவும் புத்திசாலித்தனமாகவும் தீர்ப்புகள் வழங்கினான். இந்தத் தீர்வுகளே, விக்கிரமாதித்தன் நீதிக்கதைகளாக புகழப்படுகின்றன.

விக்ரமாதித்யன் சிம்மாசனம்

விக்ரமாதித்யன் சிம்மாசனம்

விக்கிரமாதித்தனுக்குப் பிந்தைய காலத்தில் சிறப்பான முறையில் அரசாட்சி செய்துவருகிறான் மகாராஜா போஜராஜன். அவனுக்கு அதிர்ஷ்டவசமாக விக்கிரமாதித்தனின் சிம்மாசனம் கிடைக்கிறது. அந்த சிம்மாசனத்தை அடைவதற்கு 32 படிகள் இருக்கின்றன.

விக்ரமாதித்யன் கதை

விக்ரமாதித்யன் கதை

போஜராஜன் முதல் படியில் கால் வைத்ததும், அந்தப் படியில் இருக்கும் பதுமைக்கு திடீரென உயிர் வந்து போஜராஜனை தடுத்து நிறுத்துகிறது. 'மகாராஜா விக்கிரமாதித்தனின் சிம்மாசனத்தில் அமர்வதற்குரிய தகுதியும் ஞானமும் திறமையும் உனக்கு இருக்கிறதா என்பதை சோதிக்கப்போகிறேன். என் கேள்விக்கு சரியான பதில் அளித்தால் மட்டுமே அடுத்த படிக்குச் செல்லமுடியும்' என்றபடி கதை சொல்லத் தொடங்குகிறது.

பதில் சொன்ன போஜராஜன்

பதில் சொன்ன போஜராஜன்

அனைத்து பதுமைகளின் சாதுர்யமான கேள்விக்கும் பதில் சொல்லி, சிம்மானசத்தில் போஜராஜன் அமரமுடிந்ததா என்பதை புதுயுகம் தொலைக்காட்சியில் மாலை 6.00-க்கு ஒளிபரப்பாகும், ‘விக்கிரமாதித்தனின் சிம்மாசனம்' தொடரில் கண்டுரசிக்கலாம்.

பிரபல நட்சத்திரங்கள்

பிரபல நட்சத்திரங்கள்

விக்கிரமாத்தனாக கரண் சூசக், போஜராஜனாக சித்தார்த் அரோரா நடிக்க இவர்களுடன் செஸ்தா மேத்தா, சயந்தனி, அதிதி சஜ்வன், நவீனா போலே போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

நவீன தொழில் நுட்பம்

நவீன தொழில் நுட்பம்

மந்திர, தந்திரம் மற்றும் மாயாஜாலங்கள் நிறைந்த, ‘விக்கிரமாதித்தனின் சிம்மாசனம்' தொடரை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இந்தத் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. 'விக்கிரமாதித்தனின் சிம்மாசனம்' தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.00 மணிக்கும், மறுஒளிபரப்பு அடுத்தநாள் பகல் 11.00 மணிக்கும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. குட்டீஸ்கள் இனி தினசரி வேதாளம் விக்ரமாதித்தன் கதையை தெரிஞ்சுக்கலாம்.

English summary
Vikramathithanin simmasanam New serial telecast on Week days 6 P.M on Pudhuyugam TV.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos