»   »  விவசாயிகளின் உயிர் காக்க ராகவா லாரன்ஸ் நிதி உதவி - சொல்லாதே செய்

விவசாயிகளின் உயிர் காக்க ராகவா லாரன்ஸ் நிதி உதவி - சொல்லாதே செய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் 'விவசாயிகளின் உயிர் காப்போம் - சொல்லாதே செய்' என்ற அமைப்பை விவசாயிகளின் நலனுக்காக தொடங்கியுள்ளார். இதன் மூலம் நிதி உதவி அளித்து வருகிறார்.

இந்த அமைப்பின் சார்பாக அவர், விவசாயிகளை இழந்து வாடும் 250 குடும்பத்தினரை அண்மையில் ஈரோட்டில் சந்தித்து பேசி, நலத்திட்ட உதவிகளின் முதற்கட்டமாக 25 குடும்பத்தினருக்கு அந்த இடத்திலேயே நிதி உதவிகளை வழங்கினார்.

வறட்சி காரணமாக பல்வேறு விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ்

வறுமையால் வாடும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ நடிகர் ராகவா லாரன்ஸ், "விவசாயிகளின் உயிர் காப்போம் சொல்லாதே செய்" என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி உள்ளார்.

தொண்டு நிறுவனம்

தொண்டு நிறுவனம்

தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இளம் விதவையாகும் சூழலுக்குத் தள்ளப்பட்ட, தற்கொலை செய்துக் கொண்ட விவசாயி ஒருவரின் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை ராகவாலாரன்ஸ் அண்மையில் சந்தித்தார். நெஞ்சை உருக வைத்த இந்த துயரமான நிலை, ‘விவசாயிகளின் உயிர் காப்போம் - சொல்லாதே செய்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்க நடிகர் ராகவா லாரன்ஸை தூண்டியது.

சொல்லாதே செய்

சொல்லாதே செய்

சொல்லாதே செய் அமைப்பின் மூலம் நிதி திரட்டி வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு உதவி செய்ய திட்டமிட்ட அவர், ரூ.1 கோடி நிதி வழங்கினார். மற்றவர்களிடமும் நிதி திரட்டினார். சென்னையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், நாகை மாவட்டம் ஆயக்குடியில் இறந்த விவசாயி கண்ணதாசன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கினார்.

விழிப்புணர்வு பயணம்

விழிப்புணர்வு பயணம்

இது தொடர்பாக பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன் பயணத்தை தொடங்கியுள்ளார்.சொல்லாதே செய்' என்ற பெயரில் அந்த திட்டத்தை நான் தொடங்கயிருக்கிறேன். ஒரு மாணவர் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்.

விவசாயிகளுக்கு நிதி உதவி

விவசாயிகளுக்கு நிதி உதவி

திரையுலக பிரபலங்களும் விவசாயிகளுக்கு உதவி கரம் நீட்டத் தொடங்கியுள்ளனர். விவசாயிகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளித்தல் மற்றும் கால்நடைகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவி செய்தல் போன்றவை இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படும். இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

English summary
Raghava Lawrence's 'Vivasayin Uyir Kaapom - Sollathe Sei' is a new initiative that the actor has embarked on to help the TN farmers.Raghava Lawrence distributes welfare measures to bereaved families of Tamil Nadu farmers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil