குத்துன்னா இப்படி தான் குத்தனும்...பிக்பாஸ் ராஜு போட்ட தரைலோக்கல் குத்தாட்டம்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னரான ராஜு ஜெயமோகன், செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதிலும் ராஜுவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டவர்களை பார்த்து விட்டு ரசிகர்கள் குஷியாகி, ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Recommended Video

குத்துன்னா இப்படி தான் குத்தனும்...பிக்பாஸ் ராஜு போட்ட தரைலோக்கல் குத்தாட்டம்

அக்டோபர் 3 ம் தேதி துவங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஜனவரி 16 ம் தேதி நிறைவடைந்தது. இதில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வென்றார். பிரியங்கா, ரன்னர் அப்பை பெற்றார். மூன்றாவது இடத்தை பாவனி பிடித்தார். பிக்பாஸ் சீசன் 5 முடிந்த பரபரப்பு அடங்குவதற்குள், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான அறிவிப்பை வெளியிட்டு, ரசிகர்களை விடாமல் ஈர்த்து வருகின்றனர்.

சக போட்டியாளர்களுடன் சந்திப்பு

சக போட்டியாளர்களுடன் சந்திப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள், ஏற்கனவே வெளியேறி போட்டியாளர்களை சந்தித்து போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் முடிந்த பிறகும் இந்த சந்திப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய சீசன் போட்டியாளர்களையும் சந்தித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குருநாதர்களுடன் சந்திப்பு

குருநாதர்களுடன் சந்திப்பு

டைட்டிலை வென்ற ராஜு, தனது ஃபேவரைட் போட்டியாளரான இமான் அண்ணாச்சியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து அமீர் உள்ளிட்டோரையும் சந்தித்து வந்தார். தனது குருநாதர்களான பாக்யராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகியோரையும் சந்தித்து கோப்பையை காட்டி வாழ்த்து பேற்றார் ராஜு.

 என்னப்பா இப்பிடி குத்துறாரு

என்னப்பா இப்பிடி குத்துறாரு

இந்நிலையில் அமீருடன் இணைந்து, பிரபலமான கானா பாடலான தொரத்தாதய்யா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் ராஜு. அமீர், அவரது குடும்பத்தினர், நாடியா சாங் உள்ளிட்டோரும் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாமரை, ராஜு குத்தாட்டம் போட்டதை தனது மொபைல் போனில் வீடியோ எடுக்கிறார். இந்த வீடியோ தற்போது செம வேகமாக பரவி வருகிறது.

நம்ம ராஜுவா இது

நம்ம ராஜுவா இது

இதை பார்த்த ரசிகர்கள், நம்ம ராஜுவா இது. பிக்பாஸ் வீட்டிற்குள் அவ்வளவு அமைதியாக இருந்தாரே. இவருக்கு காமெடி மட்டும் தான் பண்ண வரும் என்று பார்த்தால் குத்தாட்டத்திலும் பின்னி எடுக்கிறாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். தாமரை, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சொன்னார்கள். ஆனால் இந்த வீடியோவில் இருக்காரே. இது எப்போது எடுக்கப்பட்டது என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

சீரியலில் ரீஎன்ட்ரி

சீரியலில் ரீஎன்ட்ரி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் ஏற்கனவே நடித்து வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ராஜு. அதோடு பல படங்களில் நடிக்கவும் ராஜு கமிட் ஆகி உள்ளார். ராஜு அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் பிஸியாகி வருவதால், அவரின் ரசிகர்களுக்கு அவரைப் பற்றிய தகவல்கள் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X