விஜய் டிவி ‘சிப்பிக்குள் முத்து‘ சீரியலுக்கு வந்த சிக்கல்.. நடிகை திடீர் மாற்றம்!
சென்னை : தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது விஜய் டிவி. 20 வருடங்களுக்கும் மேலாக புதுப்புது நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் எப்போதுமே ரசிகர்களின் ஆல் டைம் பேவரிட். இதேபோல சீரியல்களும் விஜய் டிவியில் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன.
இரண்டரை மணிநேரத்தில் முடிந்து விடும் சினிமாவைவிட தினம் தினம் தொலைக்காட்சியின் வழியாக இல்லத்திற்குள் புகுந்து மக்கள் மனதில் நிறைந்து விடுகின்றன . இதனால், சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

ஏராளமான தொடர்கள்
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி , தமிழும் சரஸ்வதியும், செந்தூரப்பூவே, ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சமீபத்தில் வேலைக்காரன் என்ற பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

சிப்பிக்குள் முத்து
விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிப்பிக்குள் முத்து சீரியல் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இது வழக்கமான அக்கா, தங்கை கதை கிடையாது. தான் மகளாக நினைத்து வளர்ந்த தங்கை காதலித்தவனை திருமணம் செய்துகொள்வதற்காக அக்கா ஒரு மனவளர்ச்சி குன்றிய இளைஞனை திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையை தியாகம் செய்து அவரை திருமணமும் செய்து கொள்கிறார். இது தான் இந்த சிரியலின் கதை.

சீரியல் ரீமேக்
ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகி வரும் செல்லேலி காபுரம் என்ற தெலுங்கு சீரியலின் ரீமேக் தான் சிப்பிக்குள் முத்து. இந்த சீரியல் தெலுங்கு சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. தமிழிலும் பெரிய அளவில் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் ஸ்டார் விஜய்யில் சீரியல் ரீமேக் செய்யப்பட்டு இந்த சீரியலை ஒளிபரப்பி வருகிறது.

முக்கியமான கட்டத்தில்
சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் திருமதி ஹிட்லர் தொடரில் நடித்த பவ்யா ஸ்ரீ மற்றும் சூப்பர் குயின் தொடரில் பங்கேற்ற லாவண்யா இருவரும் கதையின் நாயகிகளாக நடிக்கின்றனர். சீரியல் தொடங்கி சிறிது நாட்களிலே இந்த தொடர் பலரின் ஆதரவை பெற்றுள்ளது..தற்போது சீரியல் முக்கியமான கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

நடிகை திடீர்மாற்றம்
இந்த சீரியல் மூலமாக கன்னட சீரியல் நடிகர் ஜெய் டிசோசா தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியுள்ளார். மேலும், பல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் வில்லி வேடத்தில் நடித்து வந்த நடிகை நிலானி திடீரென சில காரணங்களால் விலகி அவருக்கு பதிலாக ரிஹானா இணைந்துள்ளார். இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











