»   »  மக்களின் மனம் கவர்ந்த சனீஸ்வரன் மகிமை

மக்களின் மனம் கவர்ந்த சனீஸ்வரன் மகிமை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சனீஸ்வரன் என்றாலே மக்களுக்கு அச்சம்தான். காரணம் அவரது பார்வைதான். சனியின் பார்வை பட்டாலே கெடுதல் நடந்துவிடுமோ என்ற பயத்தினாலே சனிப்பெயர்ச்சி என்றாலே பரிகாரம் செய்ய கோவிலுக்கு படையெடுக்கின்றனர். ஆனால் டிவி சீரியலில் சனிபகவானைப் பற்றி ஒளிபரப்பினால் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும், ‘ஸ்ரீசனீஸ்வர மகிமை' தொடர், மக்களின் பேராதரவுடன் 100 அத்தியாயங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

சனிபகவான் மகிமை

சனிபகவான் மகிமை

சூரியபகவான் - சாயாதேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த சனீஸ்வர பகவான், மக்களுக்கு நீதி வழங்கும் நவக்கிரக நாயகனாக மாறிய வரலாறு இதுவரையிலும் எடுத்துச்சொல்லப்பட்டது. இனிவரும் அத்தியாயங்களில் சனீஸ்வர பகவானின் மகிமைகளும், அவர் பக்தர்களுக்கு அருள்புரிந்த வரலாறுகளும் ஒளிபரப்பாக இருக்கின்றன.

மனித உருவில் வரும் சனி

மனித உருவில் வரும் சனி

ஆற்றில் மிதந்துவந்த சனீஸ்வரர் சிலையை ஊருக்குள் வைத்து பூஜித்துவருகிறார் பக்தர் துக்காராம். அப்போது ஊர் மக்களுக்கு வரும் துன்பங்களையும் துயரங்களையும் மனித உருவில் வந்து தீர்த்துவைக்கிறார் சனீஸ்வரர்.

துக்காராமின் மகள்

துக்காராமின் மகள்

தான் பிறந்தவுடன் தாயை இழந்துவிட்ட பக்தர் துக்காராமின் மகளை ஊர்மக்கள் அனைவருமே அபசகுனமாக பார்க்கிறார்கள். அவள் முகத்தில் விழித்தால் கெட்டது நடக்கும் என்று தூற்றுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் துக்காராமின் மகளுக்கு வெளியூர் மணமகனுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம் திடீரென நின்றுவிடுகிறது.

பக்தரின் துயர் தீர்ப்பாரா?

பக்தரின் துயர் தீர்ப்பாரா?

இதனால் பக்தர் துக்காராம் பெரும் சங்கடத்தில் ஆழ்கிறார். இந்த சிக்கலான சூழ்நிலையில் இருந்து துக்காராம் குடும்பத்தை சனிபகவான் காப்பாற்றுவாரா என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

புதுயுகம் டிவியில்

புதுயுகம் டிவியில்

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத் தொடர்களைத் தயாரித்து வழங்கிய சாகர் ஆர்ட்ஸ் நிறுவனம், ‘ஸ்ரீசனீஸ்வர மகிமை' தொடரை பிரமாண்டமாக தயாரித்து வழங்குகிறது. புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு, ‘ஸ்ரீசனீஸ்வர மகிமை' ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பு அடுத்தநாள் பகல் 11,30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

English summary
Puthuyugam tv serial Saneeswara mahimai touches 100 episode.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil