எத்தனை காருப்பா...ஆலியாவுக்கு மீண்டும் காஸ்ட்லி கார் பரிசளித்த சஞ்சீவ்
சென்னை : அபூர்வா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக சஞ்சீவ், தமிழில் குளிர் 100 டிகிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிறகு விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து, மிகவும் பிரபலமானார் சஞ்சீவ்.
இந்த சீரியலில் இணைந்து நடத்த போது சஞ்சீவ், ஆலியா மானசா இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரின் காம்போவால் இந்த சீரியல் மிகப் பெரிய ஹிட் ஆனது. இவர்கள் இருவர் இடையேயான காதல், ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் பிரபலம்.

யூட்யூப்பில் செய்யும் சேட்டை
இந்த ஜோடி 2019 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது. இவர்களுக்கு அயிலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையுடன் இவர்கள் செய்யும் சேட்டைகள், கணவன் - மனைவி இடையேயான காதல் ஆகியவற்றை வைத்து தனி யூட்யூப் சேனலே நடத்தி, தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

இப்பவும் சீரியலில் பிஸி
அத்தோடு அடிக்கடி தனது ரீல் வீடியோக்கள், வாழ்க்கை நிகழ்வுகள் ஆகியவற்றை ஃபோட்டோக்களாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறார் ஆலியா மானசா. இவர் தற்போது விஜய் டிவி.,யில் ராஜா ராணி சீரியல் சீசன் 2 லும் நடித்து வருகிறார். இதே போல் சஞ்சீவ், சன் டிவி.,யில் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

காஸ்ட்லி கார் பரிசளித்த சஞ்சீவ்
இந்நிலையில் தற்போது தனது காதல் மனைவி ஆலியாவிற்கு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசளித்துள்ளார் சஞ்சீவ். இந்த காரின் ஆரம்ப விலை ரூ.25 லட்சமாம். இந்த காருக்கு முன் நின்று குடும்பத்துடன் இவர்கள் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்று, வைரலாகி வருகிறது.

ஆலியா மீண்டும் கர்ப்பமா
இந்த ஃபோட்டோவுடன், எங்க குடும்பத்திற்கு நியூ பீஸ்டை வரவேற்கிரோம். பாப்புவின் கார் சேகரிப்பில் இதுவும் ஒன்றாக இருக்கும் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் ஆலியா. இதனால் ரசிகர்கள் பலரும் அப்படி என்ன உங்க வீட்ல விசேஷம் என கேட்க துவங்கி விட்டனர். சிலர் ஆலியா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா என கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

இத்தனை காரா
சஞ்சீவ், ஆலியாவுக்கு கார் பரிசளிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் ஆலியா கர்ப்பமாக இருந்த போதும் பென்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கினார் சஞ்சீவ். அதற்கு பிறகு ஆலியாவின் பிறந்தநாளுக்காக மற்றொரு காஸ்ட்லி காரை பரிசாக வழங்கினார். தற்போது மூன்றாவது முறையாக கார் பரிசளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











