அசிங்கப்படுத்தியவருக்கு செம நோஸ்கட் கொடுத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா
Recommended Video

சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து வரும் சரண்யா தன்னை அசிங்கப்படுத்தியவருக்கு சரியான நோஸ்கட் கொடுத்துள்ளார்.
நெஞ்சம் மறப்பதில்லை தொலைக்காட்சி தொடரில் அமித் பார்கவ் மனைவியாக நடித்து வருபவர் சரண்யா. அவர் தனது ரீல் கணவருடன் இன்ஸ்டா லைவில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்பொழுது ஒருவர் உங்களை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது சரண்யா என்று கூறியிருந்தார். அதை பார்த்த சரண்யாவோ கோபப்படாமல் அமைதியாக பதில் அளித்துள்ளார்.
நமக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் அவரிடம் சொல்வது சரி. ஆனால் பிடிக்காதபோது நேரம் ஒதுக்கி அவரை தேடிக் கண்டுபிடித்து டைப் செய்யும் மனது இருக்கிறது அல்லவா அது கடவுள் சார். அந்த வகையில் நீங்கள் கடவுள்.
பிடித்த விஷயத்திற்கே நேரம் ஒதுக்க முடியவில்லை. நான் என்னுடைய விமர்சனங்களுக்கு எல்லாம் பெருசா காதே கொடுக்க மாட்டேன். அப்படி காது கொடுத்திருந்தால் இந்த சீரியலின் 50வது எபிசோடிலேயே ஓடிப் போயிருப்பேன் என்றார்.


Click it and Unblock the Notifications











