Just In
- just now
அது ஆரியா? ஆஜித்தா? ’எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ சூப்பர் ஹீரோ பாடல் வீடியோ ரிலீஸ்!
- 29 min ago
தங்கச்சிலை போல ஜொலிக்கும் துல்கர் சல்மான் பட நடிகை!
- 42 min ago
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானாமே..பாலாஜிக்கு அதுவும் இல்லையாம்? தீயாய் பரவும் தகவல்!
- 52 min ago
தீவிர வில்வித்தை பயிற்சி... ஆண்ட்ரியாவின் அசத்தலான பிக்ஸ்!
Don't Miss!
- News
'ஒன் இந்தியா தமிழில்' வெளியான எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதைக் கருதான் மாஸ்டர் கதையா? வெடித்த சர்ச்சை
- Automobiles
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
- Finance
லாக்டவுனில் 4 மடங்கு வளர்ச்சி.. டாடா பங்ககுளை திட்டம்போட்டு வாங்கிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!
- Lifestyle
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
- Sports
என்ன இது? இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக சிக்கிய ரோஹித்!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குங்குமம், சந்தனம், அழுகை, சிரிப்பு: பிக் பாஸ் வீட்டில் விசேஷமுங்க

சென்னை: நேற்று பிக் பாஸ் வீட்டில் விசேஷமுங்க.
சென்றாயன் தனது மனைவியை பார்த்ததும் ஓடிப் போய் கட்டிப்பிடித்து என் அம்மா என்று கூறி அழுதார். பிக் பாஸ், சில நாட்கள் கழித்து குடும்ப உறுப்பினர்களை பார்த்தால் கண்ணீர் வருவது தவறு இல்லை. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஓவர் ஆக்டிங்கை தாங்க முடியவில்லை.
கொடுத்த காசுக்கு மேல நடிக்கிறார்கள் பிக் பாஸ். கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க.

கயல்விழி
சென்றாயனும், கயல்விழியும் நல்ல காலம் டேனி அவரது காதலி மாதிரி முத்தம் கொடுத்து சீன் போடாதது ஆறுதலாக இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் கயல்விழி தன்மையாக நடந்து கொண்டார். அவர் தான் கர்ப்பமாக இருப்பதை சென்றாயனிடம் தெரிவித்தார். அதற்கு சென்றாயன் கொடுத்த ரியாக்ஷனை புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் ஆகிவிட்டது.

அம்மா
சென்றாயனின் அப்பா, அம்மா பாசத்துடன் அழுது கொண்டே வந்ததை பார்த்த பார்வையாளர்களால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் பெத்த மகனே என்று அம்மா கதற, அதை பார்த்து சென்றாயன் கதற பார்வையாளர்களுக்கு ஏதோ ஒரு மாதிரி ஆகிவிட்டது. இந்தா அழாதீங்க என்று பாசத்துடன் அதட்டிய சென்றாயனின் தந்தையை பார்க்கும்போது நம் வீட்டில் ஒருவரை பார்ப்பது போன்று இருந்தது.

கண்ணீர்
சென்றாயனின் தாய், தந்தை போலித்தனம் இல்லாமல் வெள்ளந்தியாக இருந்தனர். சென்றாயன் தனது அம்மாவை ஒரு குழந்தை போன்று தூக்கிச் சென்றதை பார்த்து அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சென்றாயன் அப்பாவான செய்தி அறிந்து பிக் பாஸ் போட்டியாளர்களாலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

மகிழ்ச்சி
என் தாயை நான் தூக்கிட்டேன்டா என்று கூறி சென்றாயன் தன் அம்மாவை தூக்கிக் கொண்டு அங்கும் இங்குமாக சென்றதை பார்க்கவே நன்றாக இருந்தது. பிக் பாஸ் வீட்டில் பலருக்கும் தாயாக இருக்கும் மும்தாஜ் தாயாகப் போகும் கயல்விழியை கட்டிப்பிடித்து அழுது வாழ்த்தினார். டேனிக்கு நேர் எதிராக சென்றாயன் தனது அம்மாவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார். டேனியோ அம்மாவை விட்டுவிட்டு காதலியை கொஞ்சிக் கொண்டிருந்தார்.

மும்தாஜ்
நீ பொறுமைான பொண்ணு, நல்லா இரு ஆத்தா என்று சென்றாயனின் அப்பாவும், அம்மாவும் மும்தாஜை வாழ்த்தினார்கள். சென்றாயன், கயல்விழியை அமர வைத்து சந்தனம் பூசி வாழ்த்தியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒல்லியாகிவிட்டீயே என்று சென்றாயனின் அம்மா வீட்டுக்கு வா நாட்டுக்கோழி அடிச்சு குழம்பு வச்சு தாரேன் என்றார். இது தாங்க தாய் பாசம்.