காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு சிம்புவுடன் ஜோடியாக வருவாரா நயன்தாரா?

By Siva

சென்னை: காபி வித் டிடி நிகழ்ச்சியில் இது நம்ம ஆளு படத்தை விளம்பரப்படுத்த சிம்புவுடன் நயன்தாரா வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாலிவுட்டில் தயாராகும் படங்களை அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தை விளம்பரப்படுத்துகின்றனர்.

இந்த பாணி கோலிவுட்டிலும் பின்பற்றப்படுகிறது.

காபி வித் டிடி

காபி வித் டிடி

விஜய் டிவியில் வரும் காபி வித் டிடி நிகழ்ச்சியில் புதுப்படங்களை விளம்பரப்படுத்த நடிகர், நடிகைகள் வருகிறார்கள். நிகழ்ச்சியில் ஜாலியாக பேசிவிட்டு படத்திற்கு விளம்பரம் தேடிவிட்டு செல்கிறார்கள்.

புலிவால்

புலிவால்

புலிவால் படத்தை விளம்பரப்படுத்த பிரசன்னா, விமல் மற்றும் சூரி ஆகியோர் அண்மையில் காபி வித் டிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நயன்தாரா

நயன்தாரா

பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் முன்னாள் காதலர்களான நயன்தாரா, சிம்பு நடித்து வருகின்றனர். இந்த படத்தை விளம்பரப்படுத்த அவர்கள் டிடி நிகழ்ச்சிக்கு ஜோடியாக வருவார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

படப்பிடிப்பில்

படப்பிடிப்பில்

என்ன தான் முன்னாள் காதலர்களாக இருந்தாலும் படப்பிடிப்பில் இருவரும் பழைய சம்பவங்களை எல்லாம் மறந்துவிட்டு தங்கள் காட்சிகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றனராம்.

ஆர்யா

ஆர்யா

முன்னதாக நயன்தாரா தன்னுடன் காதல் என்று கிசுகிசுக்கப்படும் ஆர்யாவுடன் ராஜா ராணி படத்தை விளம்பரப்படுத்த காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X