»   »  குஷ்பு இனி ஜீ தமிழில் சிம்ப்ளி குஷ்பு…

குஷ்பு இனி ஜீ தமிழில் சிம்ப்ளி குஷ்பு…

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜீ தமிழ் சேனலில் புத்தம் புதிதாக ஒரு நிகழ்ச்சியை நடத்த வருகிறார் நடிகை குஷ்பு. அது நட்சத்திரங்களை பேட்டி காணும் நிகழ்ச்சி. பரபரப்பான அரசியல்வாதி, தேசிய கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்,திரைப்பட தயாரிப்பாளர், நடிகை என பலமுகம் காட்டும் குஷ்பு, சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஜாக்பாட் தொடங்கி, தந்தி டிவியில் அச்சம் தவிர், ஜீ தமிழ் டிவியில் நம்ம வீட்டு மகாலட்சுமி, வேந்தர் டிவியில் நினைத்தாலே இனிக்கும் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் குஷ்பு. இதோடு சீரியல்களையும் எழுதி தயாரித்து வருகிறார்.

இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்க மனசுக்கு பிடிச்ச ஸ்டார்ஸ் உங்க வீடுதேடி வந்து அவங்க மனசு விட்டு பேச போறாங்க., இது “...

Posted by Zee Tamil onTuesday, July 14, 2015

புத்தம் புதிதாக ஜீ தமிழ் சேனலில் நட்சத்திரங்களை பேட்டி காண வருகிறார். பிரபல நட்சத்திரங்கள் தங்களின் பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியின் பெயர் ‘சிம்ப்ளி குஷ்பு'.

வேந்தர் டிவியில் 'நினைத்தாலே இனிக்கும்' என்ற நிகழ்ச்சியில் நட்சத்திரங்களை பேட்டி கண்டு வந்தார் குஷ்பு. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென்று அதேபோன்ற நிகழ்ச்சியை ஜீ தமிழ் சேனலில் நடத்தப்போகிறார்.

ஆகஸ்ட் 22 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் மனசுக்கு பிடிச்ச ஸ்டார்ஸ் உங்க வீடுதேடி வந்து அவங்க மனசு விட்டு பேச போறாங்க. "SIMPLY குஷ்பூ" ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8:00 மணிக்கு ஜீ தமிழில் காணத்தவறாதிர்கள் என்று முன்னோட்டத்தில் பேசுகிறார் குஷ்பு.

English summary
Simply Kushboo program host actress Kushboo on Zee Tamil TV every Saturday at 8.P.M

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil