அட! ஆப்பிரிக்காவில் இருந்து தனித்தனியா அனுப்ப முடியுமா? முதல் வார எலிமினேஷனில் நடந்த செம ட்விஸ்ட்!

சென்னை: சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் வெள்ளிக் கிழமையான நேற்றே அதிரடியாக இருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

வெறும் நிகழ்ச்சி தொடங்கி 5 நாட்களிலேயே காடர்கள் அணியில் இருந்து ஒருவரும் வேடர்கள் அணியில் இருந்து ஒருவரையும் ஷோவை விட்டு வெளியேற்றுவதாக அர்ஜுன் அறிவிக்க ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், கடைசியில் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் போல நடந்த விஷயத்தை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே குழம்பிப் போயுள்ளனர்.

அதற்குள் எலிமினேஷன்

அதற்குள் எலிமினேஷன்

பிக் பாஸ் நிகழ்ச்சியை போல முதல் வாரம் நோ எலிமினேஷன் என சொல்வார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிரடி கொடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை எபிசோடில் அதிரடியாக இரு சினிமா நட்சத்திரங்களை வெளியேற்றியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

வீக்கான போட்டியாளர்

வீக்கான போட்டியாளர்

முதல் வாரத்தில் காடர்கள் அணியில் இருந்து ஒருவரையும் வேடர்கள் அணியில் இருந்து ஒருவரையும் வெளியேற்ற வேண்டும் என்று சக போட்டியாளர்களுக்கு கட்டளை இடப்பட்டது. ஒவ்வொருத்தரும் யார் வீக்கான போட்டியாளர்கள் என்பதை ஓட்டுப் போட்டு தெரிவிக்க வேண்டும் என அர்ஜுன் ஆர்டர் போட ஒவ்வொருவரும் வீக்கான போட்டியாளரை தேர்வு செய்தனர்.

இந்திரஜா மற்றும் ராம்

இந்திரஜா மற்றும் ராம்

காயத்ரி ரெட்டி கேப்டனாக இருக்கும் காடர்கள் அணியில் பிகில் பாண்டியம்மா இந்திரஜா சங்கர் மற்றும் ராம் ஆகிய இருவர் வீக்கான போட்டியாளர்கள் என சக போட்டியாளர்கள் ஓட்டு போட்டிருந்தனர். இந்திரஜாவுக்கு இரு ஓட்டுக்களும் ராமிற்கு அதிக ஓட்டுக்களும் கிடைத்தன.

சிருஷ்டி மற்றும் விஜே பார்வதி

சிருஷ்டி மற்றும் விஜே பார்வதி

சர்வைவர் தமிழ் ரசிகர்கள் அடுத்த ஜூலி என கலாய்த்து வரும் விஜே பார்வதிக்கு எதிராகவே வேடர்கள் அணியில் அதிக ஓட்டுக்கள் விழுந்தன. அவருக்கு அடுத்தபடியாக நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு ஓட்டுக்கள் விழுந்தன. இந்த இருவரும் தான் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை உயர்த்தும் முதல் சண்டைக்கு காரணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செம ட்விஸ்ட்

செம ட்விஸ்ட்

ஆனால், அதிக ஓட்டுக்கள் வாங்கிய ராம் மற்றும் விஜே பார்வதி தான் இந்த வாரம் வெளியே போகப் போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செம ட்விஸ்ட்டாக இரு அணியின் தலைவிகள் போட்ட ஓட்டை வைத்துத் தான் எலிமினேஷன் நடக்கும் என அர்ஜுன் கூற அனைவரும் ஆடிப் போனார்கள்.

கண் கலங்கிய இந்திரஜா

கண் கலங்கிய இந்திரஜா

காடர்கள் அணியில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டிக்கும் இந்திரஜா சங்கருக்கும் ஏற்கனவே ஆகாது போல இந்திரஜா சங்கரை வீக்கான போட்டியாளர் என அவர் வெளியேற்ற அப்பா ரோபோ சங்கரின் நம்பிக்கையை உடைத்து விட்டேனே என ரொம்பவே ஃபீல் பண்ணி கண் கலங்கி விட்டார் இந்திரஜா.

செல்லக் குட்டி சிருஷ்டி

செல்லக் குட்டி சிருஷ்டி

இந்த சீசனில் செல்லக்குட்டி ஹீரோயினாக கலந்து கொண்ட சிருஷ்டி டாங்கேவை லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமெளலி கூடவே இருந்து குழி பறித்தது போல விஜே பார்வதியை வெளியே அனுப்பாமல் சிருஷ்டியை வீக் எனக் கூறி வெளியே அனுப்பி விட்டார். நான் வீக் கிடையாது என அவரும் கலங்கிய மனதுடன் இந்திரஜாவுடன் அங்கே வந்த படகில் ஏறி சென்றனர்.

மூன்றாம் உலகம்

மூன்றாம் உலகம்

ஆனால், இருவரும் படகில் ஏறி சோகமாக கரைக்கு செல்லும் போது அங்கே இன்னொரு சர்வைவர் போர்ட் இருப்பதை பார்த்து இருவரும் குழம்பிப் போனார்கள். மூன்றாம் உலகம் என அறிவித்து, எலிமினேட் ஆகும் போட்டியாளர்கள் இங்கே வந்து சர்வைவ் பண்ண வேண்டும் என்கிற கிளைமேக்ஸ் ட்விஸ்ட் உடன் நேற்றைய எபிசோடு அசத்தலாக முடிந்தது.

ஆப்பிரிக்காவில் இருந்து

ஆப்பிரிக்காவில் இருந்து

ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் உள்ள ஜஞ்சிபார் எனும் தீவில் தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இரு போட்டியாளர்களை மட்டும் தனியாக எப்படி சொந்த நாட்டுக்கு அனுப்ப முடியும் அதனால் தான் மூன்றாம் உலகத்தை ஆரம்பித்து நல்லா சமாளிக்கிறாங்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X