twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விசு, கோபிநாத், லியோனி.. உங்களைக் கவர்ந்த டாக் ஷோ தொகுப்பாளர்கள்...

    By Mayura Akilan
    |

    விவாத நிகழ்ச்சி என்றாலே மக்களுக்கு சுவாரஸ்யத்தை தரக்கூடியதாக இருக்கிறது. முன்பெல்லாம், பொங்கல், தீபாவளி, தமிழ்புத்தாண்டு என சிறப்பு நாட்களில்தான் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெறும்.

    அப்புறம் தொலைக்காட்சி சேனல்கள் அதிகரிக்கவே ஒவ்வொரு சேனலிலும் ஒருவர் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. அதைப் பார்த்து சந்தோசப்பட்ட மக்களுக்கு அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம் என்று வந்தது.

    இப்போது ஒவ்வொரு வாரமும் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களின் மனம் கவர்ந்தவர்களாக மாறிவருகின்றனர் அந்த விவாத நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள்.

    முதல் ஹீரோ பாப்பையா

    முதல் ஹீரோ பாப்பையா

    தூர்தர்சன் காலம் தொடங்கிய பட்டிமன்றப் பயணம் இப்போதைய சேட்டிலைட் சேனல் காலம் வரை தொடர்கிறது. பருப்பு இல்லாத சாம்பார் கூட இருக்கலாம். ஆனால் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் இல்லாத சிறப்பு நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சியில் பார்க்க முடியாது.

    மக்கள் அரங்கம் விசு

    மக்கள் அரங்கம் விசு

    சன் டிவி தொடங்கிய காலத்தில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பு அதிகம் இருந்தது. விசு வின் அரட்டை அரங்கம் என்று டைட்டில் கார்டு போட்டதுதான் பிரச்சினையாகிப் போனது. சன் டிவியில் இருந்து வெளியேறி ஜெயா தொலைக்காட்சியில் மக்கள் அரங்கம் நடத்தி வருகிறார்.

    அரட்டை அரங்கம் டி.ராஜேந்தர்

    அரட்டை அரங்கம் டி.ராஜேந்தர்

    விசுவிற்குப் பின்னர் சாலமன் பாப்பையாவும், ராஜாவும் இணைந்து சில வாரங்கள் அரட்டை அரங்கம் நடத்தினார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அப்புறம் என்ன? டி.ராஜேந்தர் கையில் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் ஊராக போய் அரட்டை அரங்கம் நடத்தி வருகிறார் டி.ராஜேந்தர். இந்த நிகழ்ச்சிக்கும் இப்போது வரவேற்பு குறைந்து விட்டது போல அதனால்தான் ஞாயிறு ஒளிபரப்பான நிகழ்ச்சியை சனிக்கிழமைக்கு மாற்றிவிட்டது சன் நிர்வாகம்.

    நீயா நானா கோபிநாத்

    நீயா நானா கோபிநாத்

    விஜய் டிவியில் ஞாயிறு இரவு வந்துவிட்டாலே நீயா? நானா? பார்க்க அமர்ந்து விடுகின்றனர். அந்த அளவிற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. சமூகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இரு பிரிவினர் விவாதிக்கின்றனர். 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியை நடத்தும் தொகுப்பாளர் கோபிநாத் பெயரே நீயா நானா கோபிநாத் என்றாகிவிட்டது. அந்த அளவிற்கு ரசிகர்களை பெற்றிருக்கிறார் கோபிநாத்.

    களம் காணும் விவாதங்கள் கபிலன் வைரமுத்து

    களம் காணும் விவாதங்கள் கபிலன் வைரமுத்து

    புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கபிலன் நடத்தும் விவாத நிகழ்ச்சி களம் காணும் விவாதங்கள். இதுவும் சமூகப் பிரச்சினைகளை அலசும் விவாத நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டு ஆண்டு கூட இன்னமும் முடியவில்லை. கபிலனின் பேச்சு இளம் தலைமுறை ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளதாம்.

    கலைஞரில் திண்டுக்கல் ஐ. லியோனி

    கலைஞரில் திண்டுக்கல் ஐ. லியோனி

    கலைஞர் டிவியில் பட்டிமன்றம் மட்டுமே நடத்தி வந்த திண்டுக்கல் ஐ. லியோனி, இப்போது இரண்டு குழுவினர் விவாதிக்கும் நல்லா பேசுங்க... நல்லதையே பேசுங்க என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதுவும் ஒவ்வொரு ஊராக சென்று நடத்தும் நிகழ்ச்சிதான். லியோனியின் நகைச்சுவை பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    English summary
    Every host is here because they either contributed something unique to the genre or became a legend by finding a place in our hearts and minds.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X