twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீரியல் ஹீரோக்கள் எல்லோரும் ஜீரோக்கள் தானா?

    By Mayura Akilan
    |

    TV Heroes
    சினிமா என்றாலே அது கதாநாயகனைச் சுற்றிய கதையாகத்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. திரைப்படங்களில் கதாநாயகி என்பவர் கதாநாயகனை காதலிக்கவும், டூயட் பாடவும்தான் என்று முடிவு செய்து விடுகின்றனர். இந்த நியதியை கே. பாலசந்தர் போன்ற ஒரு சில இயக்குநர்கள்தான் மாற்றியிருக்கின்றனர்.

    20 வயது கதாநாயகியுடன் ஜோடியாக நடித்த 30 வயது கதாநாயகனுக்கு 50 வயதானாலும் ஹீரோ வேஷம்தான் கொடுப்பார்கள். அதேசமயம் அந்த கதாநாயகியை ஹீரோவின் அம்மாவாக்கிவிடுவார்கள். இது சினிமாவில் எழுதப்படாத நியதி.

    இதையெல்லாம் பார்த்து பொங்கி எழுந்த நடிகைகள் சிலர் சீரியலில் தங்களின் பலத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனர். விளைவு சின்னத்திரையில் ஹீரோக்களை ஜீரோக்களாக்கிவிட்டு தாங்கள்தான் ஆல் இன் ஆல் அழகுராணிகள் என்பது போல சீரியல்களில் வலம் வருகின்றனர். அதேசமயம் தங்களின் எண்ணப்படியே கதாநாயகர்களை டம்மியாக்கி எல்லாமே தாம்தான் தம்மால் மட்டுமே அதை சாதிக்க முடியும் என்ற அளவில் கதை, திரைக்கதையை அமைத்து விடுகின்றனர்.

    இன்றைக்கு தனியார் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களின் பெயர்களை எடுத்துக்கொண்டாலே தெரியும் அனைத்து தொடர்களும் கதாநாயகியை போற்றும் விதமாகவே இருக்கும். ஒரு சில சீரியர்களின் பெயர்களைத் தவிர அனைத்து சீரியல்களின் தலைப்பும் பெண் தொடர்புடையதாவே இருக்கும். உதாரணமாக திருமதி செல்வம், சாந்தி நிலையம், செல்லமே, அழகி, முத்தாரம், தங்கம் போன்ற தொடர்களில் மட்டுமல்ல நூற்றுக்கு 90 சதவிகித தொடர்களில் கதாநாயகி ஆதிக்கம்தான்.

    போனால் போகட்டும் என்று சில தொடர்களின் ஹீரோக்களை பேச விட்டிருப்பார்கள்.

    சீரியல் கதாநாயகர்கள் எல்லாம் கதாநாயகி சொல்வதை கேட்கவேண்டும். வீட்டில் ஒரு ஆளாக இருக்க வேண்டும். கதாநாயாகியின் செயல்பாடுகளுக்கு துணையாக இருக்க வேண்டும் என்ற அளவிலேயே கதைகள் பின்னப்படுகின்றன. இதைத்தான் சீரியல் பார்க்கும் பெண்களும் விரும்புகின்றனர் என்று வேறு கூறப்படுகிறது. இதனால்தான் சீரியல் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்களாக மாற்றப்படுகின்றனரோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.

    அதையெல்லாம் விட ஒரு கொடுமை என்னவென்றால் கதாநாயகிக்கு 50 வயதாகும் ஆனால் கதாநாயகனோ 35 வயது உடையவராக இருப்பார். அந்த கதாநாயகனும் பிரபலமான ஒரு தொடரில் கதாநாயகன் என்ற அந்தஸ்து கிடைக்கிறதே என்பதற்காக வேறு வழியின்றி வயது கூடிய நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்க சம்மதிக்கின்றனர்.

    அதேபோல் சினிமாவில் தங்களுடன் ஜோடியாக நடித்த நடிகர்களை எல்லாம் சீரியலில் அப்பாவாக்கி அழகு பார்க்கின்றனர் சீரியல் கதாநாயகிகள். இது எப்படி இருக்கு?.

    இப்படி சீரியல் ஹீரோக்கள் பற்றி எழுத ஆரம்பித்தால் நாம் ஒரு தொடர் போடலாம். நமக்கெல்லாம் ஒரு விமோசனம் கிடைக்காத என்று ஏங்கித் தவிக்கும் எங்களுக்கு ஆறுதல் செய்யவாவது ஒரு சீரியல் எடுங்கப்பா என்கின்றனர் பாதிக்கப்பட்ட ஹீரோக்கள். யாராவது கை தூக்கி விட்டா சரிதான்.

    English summary
    TV serial heroes are not given the same importance like silver screen heroes. While the silver screen is male dominated, TV serials are female dominated.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X