»   »  "ஜாதி வெறி" போலீஸ்.... தாலி பறிக்கும் கணவன்... ஜவ்விழு சீரியல்கள்... பாவம்ப்பா மக்கள்!

"ஜாதி வெறி" போலீஸ்.... தாலி பறிக்கும் கணவன்... ஜவ்விழு சீரியல்கள்... பாவம்ப்பா மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் என்றாலே ஜவ் மிட்டாய் போல இழுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள் போல. கல்யாணமோ, கொலையோ எதுவென்றாலும் எழுவது எபிசோடுகளாவது இழுக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. சன்டிவியோ, ஜீ தமிழோ, விஜய் டிவியோ எந்த சேனல் என்றாலும் சீரியல்களில் முக்கிய கதையே அடுத்தவர் குடியை கெடுப்பதாகத்தான் இருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரியமானவள், சந்திரலேகா, கல்யாண பரிசு என பல சீரியல்களிலும் கடந்த சிலவாரங்களாகவே ஒளிபரப்பாகும் நிகழ்வுகள் அனைத்துமே கந்தரகோலமாகவே உள்ளது. கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் அடித்து குழந்தையைக் கொல்வதும், கர்ப்பத்தைக் கலைப்பதும், ஜாதி வெறி பிடித்த போலீஸ் அதிகாரி கொலை வழக்கில் உண்மையை கண்டு பிடிக்கிறேன் என்று போட்டு அடித்து துவைப்பதும் என தினசரி வீடுகளில் ஒரே ரணகளம்தான்.

தாலியை கழற்றும் காட்சிகள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைதான் வைக்கப்படுகிறது. கூட இருந்தே குடும்பத்தைக் கெடுக்கும் தோழி... கணவனை கைக்குள் போட மனைவி போடும் திட்டங்கள் என ஏற்றுக்கொள்ளவே முடியாத பல சீன்களை வைத்து நடுக்கூடத்திற்கு கொண்டு வந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் நெளிய வைக்கிறது.

அண்ணியார் அவுட்

அண்ணியார் அவுட்

தெய்வமகள் தொடரில் எப்படியோ ஆட்டம் காட்டிய அண்ணியார் காயத்திரிக்கு விவாகரத்து கொடுத்து முடித்து விட்டார்கள். ஆனால் விவாகரத்து கொடுப்பதற்குள் மாறி மாறி காயத்ரி போட்ட திட்டங்கள் அப்பப்பா... 70 எபிசோடுகள் இழுத்து விட்டார்கள். இப்படியும் யோசிப்பார்களா? என்று வீட்டில் இருந்த சிறுவர்களைக் கூட கேள்வி கேட்க வைத்து விட்டார்கள்.

ஜூஸ் குடிக்கலமா?

ஜூஸ் குடிக்கலமா?

காயத்ரியின் தங்கையாக வரும் வினோதினியோ ஒரு படி மேலே போய் கணவனை ஜூஸ் குடிக்க கூப்பிடுவதும்... அதையே சாக்காக வைத்து மூர்த்தி உண்மையை கறப்பதும் என ஒரே களேபரம்தான். ஆனால் ஜூஸ் குடிப்பது பற்றி குழந்தைகள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொல்ல முடியவில்லை.

கல்யாணம் நடக்குமா?

கல்யாணம் நடக்குமா?

சந்திரலேகா தொடரில் கல்யாணத்தை வைத்து 50 எபிசோடுகள் வரை ஆட்டையை போட்டு விட்டார்கள். ஒருவழியாக கல்யாணம் நின்று விட்டது. கொலை செய்த விக்னேஷ் கைது செய்யப்படவே இனி சந்திராவின் வாழ்க்கை அவ்ளோதானா என்று யோசிக்கும் முன்பாக சபரியை திருமணம் செய்து வைக்க திட்டமிடுகின்றனர். அப்போ சபரியை காதலிக்கும் லேகாவின் நிலை என்னவாகும் என்று பார்வையாளர்களை நகம் கடிக்க வைக்கின்றனர்.

ஓவர் வில்லத்தனம்

ஓவர் வில்லத்தனம்

கல்யாண பரிசு சீரியலில் இருதார திருமணம் ஒரு பக்கம், திட்டமிட்டு கர்ப்பத்தைக் கலைப்பது, கொலை செய்ய திட்டமிடுவது என சுப்பு செய்யும் வில்லத்தனங்கள் ரொம்ப ஓவர். அதேபோல நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் அடித்து குழந்தையை கொலை செய்வது போல குரூரமான சீன்களை வைத்து டிஆர்பியை எகிற வைக்கின்றனர் இயக்குநர்கள்.

பேருதான் குல தெய்வம்

பேருதான் குல தெய்வம்

இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் சிறுவர்களை பாதிக்கும் பல சீன்களை வைக்கப்படுகின்றன. அதிலும் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாவது எல்லாம் சாதாரணம் என்பது போலவே சீன்கள் வைக்கப்படுகின்றன. வீட்டை விட்டு ஓடிப்போவது... சொத்துக்காக ஆளை கடத்துவது என குல தெய்வம் கொலை தெய்வமாகிவிட்டது.

நான்தான் முடிவெடுப்பேன்

நான்தான் முடிவெடுப்பேன்

பிரியமானவள் என்று எந்த நேரத்தில் பேர் வைத்தார்களோ ஆனால் கொஞ்சம் கூட பிரியமில்லாத மருமகள் வந்து வாய்த்திருக்கிறாள் உமாவிற்கு என்று இல்லத்தரசிகளே அங்கலாய்க்கும் அளவிற்கு அவந்திகாவின் நடவடிக்கைகள் இருக்கிறது. அதே நேரத்தில் அப்பாவியாய் இருந்த நடராஜ் இப்படி அடாவடியாய் மாறியது கொஞ்சம் ஓவர்தான்.

ஜாதி வெறி போலீஸ்

ஜாதி வெறி போலீஸ்

கொலை செய்யப்பட்ட 'மானங்கெட்ட மாப்பிள்ளை''க்காக களமிறங்கியுள்ள ஜாதி வெறி பிடித்த போலீஸ்.... யாரையும் விட மாட்டேன் எல்லாரையும் தூக்குவேன் என்று சொன்னது போலவே பிரபாகரை பிடித்து வந்து பின்னி பெடலெடுக்கிறார். குடுத்த காசுக்கு மேல கூவுறானே என்பது போல குய்யோ முறையோ என்று பிரபா போடும் சத்தம் பல கிலோ மீட்டர் தாண்டி கோயிலில் இருக்கும் அம்மாவின் காதில் கேட்கிறது! டி.ஆர்.பிக்காக இன்னும் என்னவெல்லாம் செய்வாங்களோ.. கொடுமை கொடுமை.

English summary
Thaali or Mangalsuta has become like a toy for serial directors as many serials are having thaali snatching scenes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil