»   »  வில்லி கல்பனாவுக்கு என்ன ஆச்சு? ... தலையணைப்பூக்கள் சுவாரஸ்யம்

வில்லி கல்பனாவுக்கு என்ன ஆச்சு? ... தலையணைப்பூக்கள் சுவாரஸ்யம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவியை இழந்த தொழிலதிபர் ராமநாதனுக்கு சுந்தர்ராஜன், நாகராஜன், நடராஜன் மூன்று மகன்கள். சென்னையில் லட்சுமி அன் கோ என்ற மிகப்பெரிய தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். ராமநாதனும் பரமேஸ்வனும் நண்பர்கள் என்பதால் சிறுவயதில் இருந்தே நண்பனின் மகள் வேதவல்லியை தன் வீட்டு மருமகளாக்க வேண்டும் என்பது ராமநாதனின் விருப்பமாக உள்ளது. எனவே தனது மூத்த மகன் சுந்தரராஜனுக்கு வேதவல்லியை நிச்சயம் செய்கின்றனர்.

அதே நேரத்தில் லட்சுமி அன் கோ நிறுவனத்தில் வேலை செய்யும் கல்பனாவிற்கு ராமநாதன் மூத்த மகன் சுந்தரராஜன் மீது ஒருதலைக்காதல். இதற்காக நாடகம் போட்டு சுந்தராஜன் கையினால் தாலி கட்டிக்கொள்கிறாள் கல்பனா. திருமணத்திற்குப் பின்னரும் சுந்தர்ராஜன் வேதவல்லியுடன் பேசுவது கல்பனாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, இருவரையும் அவமானப்படுத்துகிறாள்.

வேதவல்லிக்கு டாக்டர் மாப்பிள்ளையுடன் திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது. திருமணம் எப்படியாவது நிற்க வேண்டும் என்று நினைக்கிறாள் கல்பனா. மண நாளில் வெளியே சென்ற மாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியாக திருமணம் நிற்கும் நிலைக்கு வருகிறது.

வேதவல்லி திருமணம்

வேதவல்லி திருமணம்

மகளின் மானத்தை காக்க ராமநாதனால் மட்டுமே முடியும் என்று நினைத்த வேதவல்லியின் அப்பா, ராமநாதனின் மகன் நாகராஜனை எப்படியாவது திருமணம் செய்து கொடு என்று கெஞ்சுகிறார். உடனே நாகராஜனை அழைத்து பேசி சம்மதம் கேட்கிறார் ராமநாதன். இது கல்பனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைக்கும் கல்பனா, திருமணம் நடைபெறும் இடத்திற்கு மல்லிகாவை வரவழைக்க முயற்சி செய்கிறாள்.

கல்பனாவின் வில்லத்தனம்

கல்பனாவின் வில்லத்தனம்

அப்பாவின் பேச்சை கேட்ட நாகராஜன், தான் மனதில் நினைத்த மல்லிகாவை விட்டு விட்டு வேதவல்லி கழுத்தில் தாலி கட்டுகிறான். திருமணமான நாளில் இருந்தே வேதவல்லியை எதிரியாக பார்க்கிறாள் கல்பானா. நாகராஜ், கல்பனா இடையே இப்போதுதான் ஒருவித புரிதல் உருவாகி காதலாக மலர்ந்து வருகிறது. மகனை இம்ப்ரஸ் செய்ய மருமகளுக்கு காதல் கவிதை எழுதி கொடுக்கிறார் மாமனார் ராமநாதன்.

மனம் மாறிய வில்லி

மனம் மாறிய வில்லி

மூத்த மருமகள் கல்பனா கணவனை மதித்து நடப்பவளாக மாறுகிறாள். கணவனுக்குத் தேவையான பணிவிடைகளை செய்கிறாள். கணவன் சுந்தரராஜனையும், மாமனார் குடும்பத்தினரையும் மதிக்காமல் இருந்த கல்பனா ஒரே நாள் இரவில் திடீரென மனம் மாறி நல்லவள் ஆனது எப்படி என்பதுதான் பலரது கேள்வி.

பாலகுமாரான் சீரியல்

பாலகுமாரான் சீரியல்

தலையணைப் பூக்கள் தொடர் எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் கதைக்கருவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் டெல்லி குமார்,ஸ்ரீ, ஸ்ரீ கர், நிஷா, சான்ட்ரா, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கல்பனாவின் மனம் மாற்றத்திற்கு காரணம் என்ன? வேதவல்லி நாகராஜ் இடையே காதல் கனிந்து உறவு மலருமா ஆகிய பல கேள்விகளுக்கு விடை தருகிறது தலையணைப் பூக்கள் தொடர்.

English summary
Zee Tamil takes pride in bringing the best and most innovative entertainment on the small screen. The serial Thalaiyanai Pookkal which is being telecast at 9:00 p.m. from Monday to Friday has attracted a huge following.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil