»   »  உறவாடிக் கெடுக்கும் சீரியல் வில்லிகள்… யாரைத்தான் நம்புறது பாஸ்!

உறவாடிக் கெடுக்கும் சீரியல் வில்லிகள்… யாரைத்தான் நம்புறது பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீரியலில் ஹீரோயினாக நடிப்பவர்களை விட வில்லிகளுக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் போல, அதனால்தான் ஒரு சீரியலிலாவது வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதோடு பேட்டியும் கொடுக்கின்றனர்.

சினிமாவில் எப்படி ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்கிறார்களோ அதேபோல சீரியலில் வில்லியும், ஹீரோயினும் சவால் விட்டு சண்டை போடுவார்கள். சில சீரியல்களில் வில்லிகள் உறவாடி கெடுப்பார்கள்.

மருமகளாக, மாமியாராக, தோழியாக இருக்கும் பெண்கள் செய்யும் வில்லத்தனத்தைப் பார்க்கும் போது, பெண்கள் இப்படியும் இருப்பார்களா என்று யோசிக்கத் தோன்றுவதோடு யாரையும் முழுதாக நம்பக்கூடாது என்ற சந்தேகத்துடனே பார்க்க வைக்கிறது. இதில் சில சூப்பர் வில்லிகளை கூறியுள்ளோம்.

தெய்வமகள் காயத்ரி

தெய்வமகள் காயத்ரி

அண்ணியாரே.... இந்த வார்த்தைக்கு சரியான வில்லி அண்ணி காயத்ரிதான். அந்த தோற்றம், அதற்கு ஏற்ப செயல்பாடுகள் என கலக்குவார் காயத்ரி. சொத்தை அபகரிக்க, குடும்பத்தைப் பிரிக்க என காயத்ரி போடும் மாஸ்டர் பிளான்கள் ஒவ்வொன்றையும் ஹீரோயும், ஹீரோயினும் உடைத்தாலும் நொடிக்கு நொடி வில்லத்தனத்தில் கலக்குகிறார் காயத்ரி.

தாமரை உமா

தாமரை உமா

ராகவன் குடும்பத்தை கெடுக்கணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் மூத்த மருமகள் உமா, நாத்தனார், மாமியாரிடம் நல்லவள் போல நடித்து செய்யும் வில்லத்தனங்கள். கணவனையே பிச்சை எடுக்க வைப்பேன் என்று சபதம் போடுவது நம்பர் 1 ரகம்.

மரகதவீணை கவிதா

மரகதவீணை கவிதா

போலீஸ் எஸ்.ஐ ஆக நடிக்கும் கவிதாவிற்கு தோழியின் குடும்பத்தை எப்படி கெடுப்பது என்பதுதான். தோழியின் கணவனை அபகரிக்க கவிதா போடும் திட்டங்கள் உவ்வே ரகம்.

வள்ளி இந்திர சேனா

வள்ளி இந்திர சேனா

பெண் தாதா இந்திரசேனாவிற்கு வள்ளி குடும்பத்தை எப்படி துவம்சம் செய்வது என்பதிலேயே பாதி நேரம் போய்விடுகிறது. முந்தானை முடிச்சு தொடரில் பிரேமாவாக வந்து வில்லத்தனம் செய்தவர்தான் இப்போது இந்திரசேனாவாக வந்து மிரட்டுகிறார்.

சந்திரலேகா வசுந்தரா

சந்திரலேகா வசுந்தரா

நாத்தனார் குடும்பத்தை எப்படி கெடுப்பது என்பதுதான் இந்த வசுந்தராவின் வேலையே குறிப்பாக சந்திராவின் குடும்பத்திற்கு குழி பறிப்பது, சந்திராவின் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று வசுந்தரா போடும் வில்லத்தனங்கள் ஐயோ ரகங்கள். அதெப்படி வில்லிகள் எல்லோரும் பணக்காரர்களாக இருக்கிறார்களோ தெரியலையே.

பிரியமானவள் ஈஸ்வரி

பிரியமானவள் ஈஸ்வரி

ஏழையாக இருந்த தோழி உமா பணக்காரியாக மாறிய உடன் பொறாமையில் வெந்து சாகும் ஈஸ்வரிக்கு லட்சியமே, சொத்தை அபகரிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக எந்த எல்லைக்கும் போகும் ஈஸ்வரியின் வில்லத்தனத்தான் தோழிகளின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிவிடுகிறது.

வாணி ராணி டிம்பிள்

வாணி ராணி டிம்பிள்

குடும்பத்தின் மூத்த மருமகளாக வந்த டிம்பிள், சூனியக்கார கிழவியின் சொல் பேச்சு கேட்டு செய்யும் வில்லத்தனங்கள் பயங்கரம். மாமியாருக்கு சவால் விடுவது, ஓரகத்தியுடன் சண்டை போடுவது என ஜெகஜால வில்லியாக வலம் வருகிறார்.

பொம்மலாட்டம் நடராஜ்

பொம்மலாட்டம் நடராஜ்

சீரியல்களில் வில்லிகளின் ராஜ்ஜியத்திற்கு இடையே போனால் போகட்டும் என்று வில்லன்களுக்கும் கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார்கள். பொம்மலாட்டம் சீரியலில் அண்ணன் சொத்தை அபகரிக்க அவர் செய்யும் வில்லத்தனங்கள் அப்பப்பா ரகம்.

கல்யாண பரிசு குமார்

கல்யாண பரிசு குமார்

மாமன் மகளுக்கு திருமணமாகி அவள் கர்ப்பமாக இருந்தாலும் பரவாயில்லை, அவளை எப்படியாவது அடையவேண்டும் என்று குமார் போடும் திட்டங்கள் கொடூரத்தின் உச்சம். கடத்தல் ஆள்மாறாட்டம், கொலை முயற்சி, என இந்த வில்லனின் திட்டங்களை தவிடு பொடியாக்கும் ஹீரோ இருக்கத்தான் செய்கிறார்.

எத்தனை டைப் வில்லிகள்

எத்தனை டைப் வில்லிகள்

ஸ் ஸ் அப்பா முடியல... குடும்பத்தைக் கெடுக்க வில்லிகள் போடும் திட்டங்களைப் பார்க்க ரத்தக்கொதிப்புதான் அதிகமாகிறது. மன உளைச்சலும், பிறநோய்களும் கேட்காமலேயே உள்ளே புகுந்து விடும். சாதாரணமாகவே யாராவது நட்பு பாராட்டினால் கூட இந்த சீரியல் வில்லிகளினால் மனிதர்கள் மீதான நம்பகத்தன்மையே போய்விடுகிறது. இந்த வில்லிகள் சாம்பிள்தான் மற்ற சீரியல்களில் நடிக்கும் உங்களுக்குத் தெரிஞ்ச வில்லிகளையும் சொல்லுங்களேன்.

English summary
Here is the list of Tamil TV serial villis have become a major threat to the traditional family setups.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil