Don't Miss!
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- News
'கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா'.. போட்டியின் போது கிரவுண்டுக்குள் புகுந்து உணவு டெலிவரி செய்த நபர்
- Lifestyle
உங்க உணவுகளை சமைக்க இந்த 4 எண்ணெய்களில் ஒன்றை உபயோகித்தால் எடை வேகமாக குறையுமாம்...!
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Finance
2 நாளில் ரூ.2.37 லட்சம் கோடி காலி.. அதானி குழுமத்திற்கு இது போறாத காலமே..என்ன பிரச்சனை?
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஜவ்வு மாதிரி இழுக்குதே.. பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எண்டே இல்லீங்களா? கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை : விஜய் டிவியில் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. 2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 1000க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து விட்டது.
திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல், மலையாளம் சீரியலான 'கருத்தமுத்து' என்ற தொடரின் ரீமேக் ஆகும்.
இந்த சீரியலில் அருண் பிரசாத், வினுஷா தேவி, ரூபா ஸ்ரீ, பரினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த
பக்கம்
கீர்த்தி
சுரேஷ்..
அந்த
பக்கம்
பிரியங்கா
மோகன்..
கொடுத்து
வச்சவரு
விஜய்
அட்மின்!

பாரதிகண்ணம்மா
காதல், ரொமான்ஸ் என்று பரபரப்பாக தொடங்கிய பாரதிகண்ணம்மா சீரியல் ஒரு கட்டத்தில் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருந்தது. ஹேமா மற்றும் லட்சுமி தன்னுடைய மகள்கள் தான் என்று பாரதிக்கு தெரியாமலே சீரியல் ஆயிரம் எபிசோடை தொட்டது. இதையடுத்து, ஒருவழியா பாரதி டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து ஹேமாவும், லட்சுமியும் தனது மகள்கள் என்பதை தெரிந்து கொண்டார்.

திசை திருப்பிய இயக்குநர்
பாரதி டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து கண்ணம்மாவுக்கு திருப்தியோ, இல்லையோ சீரியலைப் பார்த்துக்கொண்டு இருந்த ஆடியன்ஸ் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர். ஒருவழியாக பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தனர். அங்கே தான் ஒரு செம ட்விஸ்டை வைத்து கதையை வேறுபக்கம் திசை திருப்பினார் இயக்குநர்.

ஊருக்குபோன கண்ணம்மா
டி.என்.ஏ டெஸ்டுடன் மன்னிப்பு கேட்ட பாரதியை கண்ணம்மா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த டெஸ்டைப் பார்த்துத்தான் என்னை நீ நம்புவியா என கேட்டு, அந்த ஊரைவிட்டு, தனது அப்பா இருக்கும் ஊருக்கு தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். நம்ம கண்ணம்மாவுக்கு இப்படி ஒரு அப்பா இருப்பதே இப்போதுதான் ரசிகர்களுக்கே தெரியும். அட ரசிகர்களுக்கு மட்டும் இல்லீங்க, கண்ணம்மாவுக்கும் இப்போத்தான் தெரிஞ்சி இருக்கும் போல.

ஜவ்வு மாதிரி இழுக்குதே
கண்ணம்மா ஊரைவிட்டு வந்ததும் பாரதி தனது மனைவியை சமாதானப்படுத்த அதே ஊருக்கு வந்து, ஜெயம் ரவி படமான உனக்கும் எனக்கம் சம்திங் சம்திங் படத்தில் வருவது போல, மனைவிக்காக பல சாகசங்களை செய்கிறார். ஆனால், கண்ணம்மா கிராமத்தில் யாருடைய தயவிலும், இல்லாமல், சுயமாக தொழில் செய்து வாழ்ந்து வருகின்றார்.

காயமடைந்த பாரதி
அந்த ஊரில் உள்ள வில்லன் கண்ணம்மா பற்றி தவறாக தகவலை ஊர் முழுவதும் சொல்லி அவரை அசிங்கப்படுத்துகிறார். இதனால் வெகுண்டெழுந்த பாரதி அவருடன் சண்டைப்போட்டு வில்லன் செய்த தவறை அவரது வாயாலேயே கூற வைத்ததோடு, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசுகிறார்.இந்த நேரத்தில் வில்லன் பாரதியின் தலையில் கம்பியால் அடித்து அவரை காயப்படுத்தி விடுகிறார்.

சீரியலுக்கு எண்டே இல்லீங்களா?
கடைசியில் மருத்துவமனையில் கண் விழித்த பாரதி, அம்மா , தம்பியைப்பார்த்து நீங்க யாரு என்று கேட்டு நம்ம தலையில் குண்டை போட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்னது... பாரதி பழைசை மறந்துவிட்டாரா என்றும், மறுபடியும் ரோபோ சங்கர் சொல்வது போல "அன்னைக்கு காலையில 6 மணியா'' முடியலடா சாமி ஆளைவிடுங்க, மறுபடியும் பாரதிக்கு எப்போது நினைவுவரது, எப்போது இவர்கள் சேர்ந்து வாழ்வது இந்த சீரியலுக்கு எண்டே இல்லீங்களா? என கேட்டு பாரதி கண்ணம்மா சீரியலை கிண்டலடித்து வருகின்றனர்.