குத் வித் கோமாளி 3 ல் என்ட்ரி கொடுக்கும் டாப் ஹீரோ... சர்ப்ரைஸ் ஆன ரசிகர்கள்

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 3 ல் இந்த வாரம் டாப் ஹீரோ மற்றும் டாப் ஹீரோயின் இருவரும் என்ட்ரி கொடுக்க போகிறார்களாம். இந்த அறிவிப்பு வெளியானது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவர்கள் எதற்காக இந்த ஷோவிற்கு வந்துள்ளனர் என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 போட்டியாளர்களுடன் ஜனவரி 22 ம் தேதி துவங்கி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த காமெடி சமையல் நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமோதரன் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்து வருகின்றனர்.

அடுத்த எலிமினேஷன் யார்

அடுத்த எலிமினேஷன் யார்

ரோஷினி ஹரிபிரியன், ஆன்டனிதாசன், விதுலேகா ராமன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருதிகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராபி, தர்ஷன் மனோபாலா, ராகுல் தாதா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதுவரை ராகுல் தாதா மற்றும் மனோபாலா ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறி உள்ளனர். இந்நிலையில் அடுத்து வெளியேற போவது யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அட இவர் வர போறாரா

அட இவர் வர போறாரா

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மலையாள டாப் ஹீரோ துல்கர் சல்மான் மற்றும் ஹீரோயின் அதிதி ராவ் இருவரும் குக் வித் கோமாளி ஷோவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளனர். இதற்கான ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் துல்கர் சல்மானும், அதிதி ராவும் இருக்கிறார்கள். சிவாங்கி, துல்கர் சல்மானுடன் சைகையில் பேசுவதாகவும், அவருடன் பைக்கில் ஏறி ஒரு ரவுண்ட் வருவதாகவும், அதிதி போட்டியாளர்களுக்கு மத்தியில் நின்று டான்ஸ் ஆடுவதாகவும் காட்டப்படுகிறது.

 இக் வித் கோமாளியில் இவரா

இக் வித் கோமாளியில் இவரா

ரசிகர்கள் இதை பார்த்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். என்னது...குக் வித் கோமாளியில் துல்கர் சல்மானா என கேட்டு வருகின்றனர். துல்கர் சல்மான் என்ட்ரியாகும் எபிசோடிற்காக காத்திருப்பதாக கமெண்ட் செய்து, ஹார்ட் மற்றும் ஃபயர் எமோஜிகளால் கமெண்ட் பகுதியை நிரப்பி வருகிறார்கள். ஏற்கனவே துல்கர் சல்மானுக்கு பெண் ரசிகைகள் அதிகம். இந்த சமயத்தில் இந்த ப்ரோமோ வேறு வந்துள்ளதால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

இதுக்கு தான் வர்றாங்களா

இதுக்கு தான் வர்றாங்களா

சமீபத்தில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் இணைந்து நடித்துள்ளனர். இதில் காஜல் அகர்வால் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக தான் இவர்கள் குக் வித் கோமாளி ஷோவிற்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக சிம்பு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X