twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீட்டு வரவேற்பரைக்கு வரும் வீர சிவாஜியும், ஜான்சிராணியும்…

    By Mayura Akilan
    |

    இதிகாசங்களையும், வரலாற்று காவியங்களையும் படிதத்தை விட காட்சிப்படுத்தி பார்ப்பதில் தனி சுவாரஸ்யம்தான்.

    ராமாயாணம், மகாபாரதம் மட்டுமல்லாது வீரசிவாஜி, ஜான்சி ராணி போன்ற இந்திய வீர வரலாற்று நாயகர்கள், நாயகிகளின் கதையும் இப்போது சின்னத்திரையில் தொடராக ஒளிபரப்பாகி வருகின்றன.

    பாடங்களாக படித்த வரலாற்றை, கண் முன்னே தத்ரூபாமாக கண்டு ரசிக்கின்றனர் இன்றைய இளம் தலைமுறையினர். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள தொடர்களை காணலாம்.

    ராமாயணம்

    ராமாயணம்

    தூர்தர்சன் காலத்தில் தொடங்கி தற்போது சேட்டிலைட் சேனல் காலம் வரை ராமாயணம் தொடரை பலமுறை ஒளிபரப்பியுள்ளனர். ஒவ்வொரு முறையும் அதில் நடித்த நடிகர்கள் தொடங்கி அனைத்துமே சுவாரஸ்யம்தான்.

    தமிழ் பேசிய இதிகாசம்

    தமிழ் பேசிய இதிகாசம்

    சன் டிவியில் ராமாயணம் தொடரை டப்பிங் செய்து ஒளிபரப்பினார்கள். அதற்காகவே அந்த தொடரின் டி.ஆர்.பி எகிறியது.

    மகாபாரதம்

    மகாபாரதம்

    தற்போது சன் டிவி, ஸ்டார் ப்ளஸ், விஜய் டிவி என மூன்று சேனல்களில் மகாபாரதம் ஞாயிறு காலையில் ஒளிபரப்பாகிறது. சன் டிவியில் தமிழ் நடிகர்கள் நடித்த நேரடி தமிழ் தொடர் தனி வரவேற்புதான் இதற்கும்.

    பிரம்மாண்டமான தொடர்

    பிரம்மாண்டமான தொடர்

    ஸ்டார் ப்ளஸ் சேனலில் வித்தியாசமான கதைக்களத்தோடு பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்ட மகாபாரதம் தினசரி வார நாட்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதே நேரத்தில் ஸ்டார் விஜய் டிவியில் இந்த தொடரின் தமிழ் டப்பிங் தெடர் ஒளிபரப்பாகிறது. இதற்கு தனி ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது.

    வீர சிவாஜி

    வீர சிவாஜி

    மராட்டிய மன்னன் சிவாஜியைப் பற்றி இன்றைய இளம் தலைமுறை அறிந்து கொள்வதற்காகவே சோனி டிவியில் அவரது வரலாறு சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகிறது.

    ஜான்சிராணி

    ஜான்சிராணி

    ஜான்சி நாட்டு ராணி லட்சுமி பாய் வீர வரலாறு ஜீ டிவியில் ஒளிபரப்பாகிறது. இதன் தமிழ் டப்பிங் ஜீ தமிழ் டிவியில் காணலாம்.

    சந்திர குப்த மௌரியர்

    சந்திர குப்த மௌரியர்

    சந்திரகுப்ர மௌரியரின் வரலாற்று காவியம் என்.டி.டிவி இமேஜின் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதில் மௌரிய சாம்ராஜ்யம் பற்றியும், சாணக்கியரைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். இதில் பல சுவாரஸ்யங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    திப்பு சுல்தான்

    திப்பு சுல்தான்

    தூர்தர்சன் டிவியில் ஒளிபரப்பான தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான் ரசிகர்களிடம் தனி வரவேற்பு பெற்ற வரலாற்று தொடர்.

    ஜோதா அக்பர்

    ஜோதா அக்பர்

    மாமன்னர் அக்பரின் வாழ்க்கையை மையமாக கொண்ட ஜோதா அக்பர் மெகா சீரியல் ஜீ டிவியில் ஒளிபரப்பாகிறது. சினிமாவை காட்டிலும், டி.வி. சீரியல் இன்னும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. அக்பரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இந்த தொடர் உருவாகியுள்ளது.

    English summary
    Historical TV serials, mounted on a grand scale and based on the life of real characters, significant to the history of India, are once again in vogue. We list down historical TV series that turned quite popular on the small screen.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X