11 மாதமாக என் மனைவியுடன் அந்த நபர் ஒரே வீட்டில்...புலம்பும் பிக்பாஸ் பிரபலம்

மும்பை : தனது மனைவி வேறு ஒரு நபருடன் கடந்த 11 மாதங்களாக தவறான உறவில் இருப்பதாக பிக்பாஸ் பிரபலம் ஓப்பனாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது இந்தி டிவி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி டிவி சீரியல், படங்களில் நடித்து வரும் கரண் மெஹ்ராவும், தொலைக்காட்சி நடிகை நிஷா ராவலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நிஷாவும், கரணும் ஆறு ஆண்டுகள் காதலித்து, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். 2017ம் ஆண்டு ஆண் நிஷாவுக்கு குழந்தை பிறந்தது.

Tv actor complaint against his wife on illegal affair

இந்தி சின்னத்திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் கரண் மெஹ்ரா. அவர் இந்தி பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். கரண் தன்னை தாக்கியதுடன், தன் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடியை எடுத்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார் நிஷா. இதையடுத்து 31.05.2021 அன்று கோரேகாவ்ன் போலீசில் கரண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரண் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும், அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் நிஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிஷாவை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கரண், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். நிஷா தொடர்ந்த வழக்கை அடுத்து கரணும் அவரது குடும்பத்தாரும் முன்ஜாமீன் பெற்றார்கள்.

கரண் தற்போது ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, நிஷாவுக்கும், ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதை அந்த நபரே ஒப்புக் கொண்டார். அதன் பிறகும் அந்த நபரை எங்கள் வீட்டிற்குள் அனுமதித்தேன். மீண்டும் வாழ்க்கையை புதிதாக தொடங்க நினைத்தேன். பின்னர் மகன் கவிஷ் பிறந்தான். அந்த கள்ளத்தொடர்பு ஆசாமி இன்னும் எங்கள் வீட்டில் தான் வசித்து வருகிறார். கடந்த 11 மாதங்களாக எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறார் என கரண் மெஹ்ரா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X