twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிவியில் உற்சாகப் பொங்கல்…. காதலை 'புரபோஸ்' செய்த பவர் ஸ்டார்!

    By Mayura Akilan
    |

    பொங்கல் கொண்டாட்டம் வீதிகள் தோறும் களைகட்டியது ஒரு புறம் இருக்க வீட்டிற்குள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் உற்சாகமூட்டியது. சினிமா பிரபலங்களின் பேட்டிகள், சின்னத்திரை நட்சத்திரங்கள் கிராமங்களுக்கே சென்று கொண்டாடிய பொங்கல் என நேயர்களை ரசிக்க வைத்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது.

    நகைச்சுவை பட்டிமன்றம்

    நகைச்சுவை பட்டிமன்றம்

    பண்டிகை என்றாலே தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்களுக்கு குறைவிருக்காது. சன்டிவியில் சாலமன் பாப்பையாவின் தலைமையில் சின்னச் சின்னப் பொய்கள் சுகமே, சுமையே என்று பேச்சாளர்கள் தங்களின் அனுபவங்களை பேசினார்கள்.

    பொய்கள் எந்த அளவிற்கு வாழ்க்கைக்கு அவசியம் என்றும் எந்த இடத்தில் பொய்களை உபயோகிக்கலாம் என்று வள்ளுவர், நபிகள் நாயகம், கண்ணபிரான் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசினார் சாலமன் பாப்பையா.

    லியோனியின் ஆதங்கம்

    லியோனியின் ஆதங்கம்

    பழையவிசயங்கள் மறக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொங்கல் கொண்டாட்டங்களும் படிப்படியாக மறைந்து வருகிறது என்று ஆதங்கப்பட்டார் லியோனி. தவளை என்ற இனமே அழிந்து போனதால்தான் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு உள்ளிட்ட உயிர்பறிக்கும் காய்ச்சல் அதிகமாகி வருவதாக கூறினார். ஜெயாடிவியில் விஞ்ஞான வளர்ச்சியால் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்ற ரீதியில் முனைவர் ஞானசம்பந்தன் தலைமையில் பேசினார்கள். எல்லா பட்டிமன்றங்களும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானதால் எதைப் பார்ப்பது என்பதில் குழப்பமே ஏற்பட்டது.

    பானை உடைத்த தொகுப்பாளினிகள்

    பானை உடைத்த தொகுப்பாளினிகள்

    விஜய் டிவியில் வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சி கலர்புல் கொண்டாட்டமாக இருந்தது. பொங்கல் கொண்டாட கிராமத்திற்கு வந்த நடிகர் விஷாலுடன் பிரபல சின்னத்திரை நடிகைகள் தொகுப்பாளினிகள் பங்கேற்றனர். விஷாலுக்கு கிராம மக்கள் பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் என இரண்டு குழுவினராக பிரிந்து பானை உடைத்தல், ரேக்ளா ரேஸ், நடனம், கயிறு இழுத்தல் என உற்சாகமாக விளையாடினர் தொகுப்பாளினிகள். தீர்ப்பு சொன்ன விஷாலுக்கு ரொம்பவே உற்சாகம்தான்.

    பவர்ஸ்டாரின் பேட்டி

    பவர்ஸ்டாரின் பேட்டி

    இதில் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் பவர்ஸ்டார் சீனிவாசனின் பேட்டி ஒளிபரப்பானது. விஜய் டிவியில் சீனிவாசனை வைத்து அவர்கள் செய்த காமெடிதான் அதிகமாக இருந்தது. தொகுப்பாளினி பாவனாவிற்கு லட்டு தின்ன ஆசையா நாயகர்கள் எல்லோருமே காதலை புரபோஸ் செய்தனர்.

    விஜய் 20 உற்சாகக் கொண்டாட்டம்

    விஜய் 20 உற்சாகக் கொண்டாட்டம்

    திரை உலகில் நடிகர் விஜய் 20 ஆண்டுகாலத்தை முடித்திருக்கிறார். அதை கொண்டாடியது சன் டிவி. சன்டிவிக்கும் விஜய்க்கும் சில ஆண்டுகள் பிடிக்காமல் இருந்தது. இப்போது எப்படியோ ராசியாகிவிட்டார்கள். விஜய் நிகழ்ச்சிக்குள் நுழையும் போது தாரை தப்பட்டைகள் முழங்க வரவேற்பு கொடுத்தனர். கிராமத்து பாடகி ஒருவர் இளைய தளபதியின் சிறப்புக்களை வேறு பாடி விஜயை உற்சாகமூட்டினார். நடிகர் விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர், விஜயை வைத்து இயக்கிய இயக்குநர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    போட்டி போட்ட திரைப்படங்கள்

    போட்டி போட்ட திரைப்படங்கள்

    சன்டிவியில் வேங்கை, கலைஞர் டிவியில் வேலு, ஜீ டிவியில் இங்கிலீஸ் விங்கிலீஸ், விஜய் டிவியில் தாண்டவம் என தொலைக்காட்சிகளில் போட்டு போட்டு திரைப்படங்கள் ஒளிபரப்பானது. இதேபோல் மாலை நேரத்தில் விஜய் டிவியில் வேட்டை, சன் டிவியில் சகுனி என திரைப்படங்கள் ஒளிபரப்பானது எதை பார்ப்பது என்பதில்தான் பலருக்கும் குழப்பம்.

    English summary
    Pattimandram, Cini actors interview, new films in Special Programs telecasted Tamil Tv channals.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X