»   »  பெண்கள் ஏன் இப்படி சீரியல் பைத்தியமா இருக்காங்க?

பெண்கள் ஏன் இப்படி சீரியல் பைத்தியமா இருக்காங்க?

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil
Tv Serial addiction is the most happening comedy in most houses
ஒரு படத்தில் வடிவேலுவின் ஆட்டோவில் ஏறும் நான்கு பெண்கள் ஒரு பெண்ணின் பிரசவத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். "ஐயோ கொஞ்சம் சீக்கிரம் போயேப்பா. அவளுக்கு என்ன ஆச்சோ தெரியலையே. குழந்தை பிறந்திருக்குமோ என்னவோ" என்று ஒரு வித பதற்றத்துடன் பேசி ஆட்டோ ஓட்டும் வடிவேலுவையும் பதற்றத்திற்கு உள்ளாக்குவார்கள். அவர்கள் இவ்வளவு நேரமும் டிவி சீரியலில் வரும் கதாபாத்திரத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்று வடிவேலுக்கு கடைசியாகத்தான் தெரியவரும்.உடனே அந்தப் பெண்களை அடித்து துரத்திவிடுவார்.

இன்றைக்கு இப்படித்தான் பெரும்பாலான பெண்கள் சீரியல் பைத்தியமாக இருக்கின்றனர். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் காலையில் 10 மணிக்கு டிவியைப் போட்டால் சமையல் செய்து கொண்டே சீரியல்தான் பார்க்கின்றனர். வீட்டிற்குள் வந்து திருடன் எதையாவது திருடிக்கொண்டு சென்றால் கூட அவர்களுக்கு தெரிவதில்லை அந்தளவிற்கு சீரியலில் மூழ்கிக் கிடப்பார்கள்.

இன்றைக்கு மின்சார தட்டுப்பாடு பல ஊர்களில் இருக்கிறது. இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் சொந்தக்காரர்களிடம் போன் போட்டு கதையை கேட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் போய்விட்டு பெண்களின் சீரியல் மீதான பாசம்.

மாமியார் - மருமகள் பிரச்சினையும், நாத்தனார் வில்லத்தனம்தான் பெரும்பாலான சீரியல்களில் ஒளிபரப்பாகிறது. அப்படியிருந்தும் ஏன் இந்தப்பெண்கள் இப்படி சீரியல் பைத்தியம் பிடித்து அலைகின்றனரோ தெரியவில்லை. நம்ம ஊர் சானல்கள் ஒளிபரப்பும் பைத்தியக்காரத்தனமான தொடர்கள்தான் இன்று பல குடும்பங்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. அதிலும் இப்போது வித்தியாசமான சீரியல் ஆர்வலர்களைக் காண முடிகிறது.

தர்மபுரியில் ஒரு திருடன் இருந்தான். அவனோட திருட்டுத்தனமே அலாதியானது. தினசரி காலை பஸ் ஏறி பெங்களூர் போவான். அங்கு யமஹா பைக்கை குறி வைத்து திருடுவான். பின்னர் நம்பர் பிளேட்டை மாற்றி விட்டு ஜாலியாக பைக்கிலேயே ஊருக்குத் திரும்பி விடுவான். ஊருக்கு வந்து பைக்கை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விற்று காசாக்கி விடுவான். பிறகு மறுநாள் காலை மறுபடியும் பெங்களூர், மறுபடியும் ஹமஹா திருட்டு என்று தொடர்ந்தது அவனது வாழ்க்கை. இப்படியாக கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பைக்குகளை அவன் திருடியிருந்தான்.

அதே போலத்தான் சில பெண்கள் இருக்கிறார்கள். அதாவது குறிப்பிட்ட ஒரு சானலின் தொடர்களை மட்டுமே இவர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். வேறு எந்த சானல் பக்கமும் இவர்கள் திரும்புவதில்லை, அதில் என்ன ஒளிபரப்பாகிறது என்பது குறித்து கவலைப்படுவதும் இல்லை.

அழுவாச்சித் தொடர்கள் என்றாலும் ஒன்றைக் கூட விடாமல் பொறுமையுடன் பார்த்து ரசிக்கிறார்கள். அதே போல இன்னும் சிலர் வேறு சில சானல்களை மட்டும் குறி வைத்து அவற்றை மட்டுமே பார்க்கிறார்கள்.

இது மன நோயா அல்லது அடிமைத்தனமா அல்லது வேறு என்ன என்று எந்த மருத்துவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அது சரி ஒவ்வொருவருக்கும் ஒரு பீலிங் இருக்கத்தான செய்யும்...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Almost all homemakers who feel proud as tv serial addicts are keen watching these female serial actor's beautiful jewels and saris rather than the serial itself.'Mother-in-law and daughter-in-law's fighting' is the bottom-line of the serial...if you are not surprised the serial's story itself is this bottom-line.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more