»   »  பிரியமானவள்... குலதெய்வம்... லட்சுமி வந்தாச்சு... 2015ல் இவங்க புதுசுங்க...

பிரியமானவள்... குலதெய்வம்... லட்சுமி வந்தாச்சு... 2015ல் இவங்க புதுசுங்க...

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இப்போதெல்லாம் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி சாதனைப்படைப்பது சாதாரண விசயமாகிவிட்டது. 5 ஆண்டுகளுக்குக் கூட ஒரு சில சீரியல்கள் அசராமல் ஒளிபரப்பாகின்றன. அந்த சீரியல்களின் கதாபாத்திரங்கள் ஏதோ நம்முடன் வசிப்பவர்களைப் போலவே வந்து செல்வார்கள். அந்த அளவிற்கு டிவி ரசிகர்கள் சீரியல்களுடன் ஒன்றிப்போய் பார்த்து ரசித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் சில சீரியல்கள் முடிந்துதானே ஆகவேண்டும். சன், ஜெயா, ராஜ், விஜய் டிவி, காலைஞர் டிவி , ஜீ டிவி என தமிழகத்தில் உள்ள பல சேனல்களிலும் இந்த ஆண்டு பல புத்தம் புதிய சீரியல்கள் 2015ம் ஆண்டில் ஒளிபரப்பாகி வருகின்றன.

கிராமத்து பின்னணியில் களத்துவீடு, கண் தெரியாத காதலர்கள் நடிக்கும் மெல்லத் திறந்தது கதவு, கூட்டு குடும்ப பின்னணி கொண்ட குல தெய்வம் பிரியமானவள் என பல சீரியல்கள் பிரைம் டைமில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. பக்தி மணம் கமலும் மதத்தில் புரட்சி செய்த ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு கதையும் இந்த ஆண்டு புதிதாய் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இதில் பல சீரியல்கள் அதே வில்லத்தனம், கூட இருந்தே குழிபறிப்பது, அடுத்தவர் குடும்பத்தைக் கெடுப்பது, பல தார திருமணங்கள் என இந்த ஆண்டும் பழைய கதைகளைத்தான் புதிய பெயர்களில் ஒளிபரப்பிவருகின்றனர். சில சீரியல்களில்தான் புதுமுகங்கள், பல சீரியல்களில் பழைய முகங்கள்தான் புதிய பெயர்களில் வந்து வில்லத்தனம் செய்கின்றனர். 2015ல் ஒளிபரப்பாகும் புதிய சீரியல்களில் மக்கள் பார்த்து ரசிக்கும் சீரியல்கள் எவை, எவை தெரியுமா?

2015ம் ஆண்டின் புதிய சீரியல்கள்

ஸ்ரீராமானுஜர்- கலைஞர் டிவி

ஸ்ரீராமானுஜர்- கலைஞர் டிவி

மதத்தில் புரட்சி செய்த மகான் ஸ்ரீ ராமானுஜரின் கதையை தனது பாணியில் எழுதியுள்ளார் திமுக தலைவர் கலைஞர். குட்டி பத்மினியின் வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சீரியல் இயக்குனராக குட்டி பத்மினி பணியாற்றுகிறார். வைணவ தர்மத்தை பாமர மக்களுக்கு எடுத்துரைத்த மகத்தான மகான் ராமானுஜர், திராவிட தமிழ் வேதமான திவ்யபிரபந்தத்தை மக்களின் மனதில் ஆழப் பதியச் செய்து மதத்தில் பல புரட்சிகளை செய்த மாசற்ற மகான் ராமானுஜர் அவரது கதையை திமுக தலைவர் கருணாநிதி எழுதுவது கூடுதல் சிறப்பு

லட்சுமி வந்தாச்சு – ஜீ தமிழ் டிவி

லட்சுமி வந்தாச்சு – ஜீ தமிழ் டிவி

பிரபல திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்து ஒளிபரப்பி வரும் லட்சுமி வந்தாச்சு சீரியல் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் இருக்கிறது. நாட்டாமை நாச்சிமுத்துவிற்கு 4 மகன்கள். தங்கவேல், வெற்றிவேல், சக்திவேல், ரத்னவேல் ஆகியோரின் ஒற்றுமையை உடைத்து சாவிக்கொத்தை கைப்பற்ற நினைக்கிறாள் மூத்த மருமகள் தேன்மொழி. இரண்டவது மருமகள் லட்சுமிக்கு இருக்கும் நல்ல பெயரும், மதிப்பும், மரியாதையும் தேன்மொழியின் பொறாமையை அதிகரிக்கிறது. மருமகளாக நடிக்க வந்து குடும்பத்தில் மலர்ச்சியை ஏற்படுத்திய லட்சுமி, சக்திவேலை நிஜமாகவே திருமணம் செய்து கொண்டாளா என்பதுதான் கதை. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னேறுகிறது. வாணி போஜன், அனு பிரகாஷ், நாதன், ஹரிப்ரியா நடிக்கிறார்கள்.

பிரியமானவள் - சன் டிவி

பிரியமானவள் - சன் டிவி

கிருஷ்ணன் - உமா தம்பதியரின் நான்கு மகன்கள், அவர்கள் வீட்டிற்கு வரும் மருமகள்கள், தோழி என்ற பெயரில் நடித்துக்கொண்டே குடும்பத்தைக் கெடுக்கும் வில்லி. என நகர்கிறது கதை. திருமணத்தை நிறுத்த போடும் திட்டங்களும், ஆபாச வாட்ஸ் அப் வீடியோவும், அதனால் ஏற்படும் கொலையும் அந்த கொலை கண்டுபிடிக்க தொடரும் கதைகளும் என ஒருவித கலவையாக நகர்கிறது பிரியமானவள். பிரியமானவள் சீரியல் மாமியார் தமிழ் சீரியலுக்கு புதுமுகம்தான் என்றாலும் அனைவருக்கும் பிடித்த மாமியாராகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

கைராசி குடும்பம் – ஜெயா டிவி

கைராசி குடும்பம் – ஜெயா டிவி

கோலங்கள் தொடர் மூலம் புகழ்பெற்ற திருச்செல்வம் தயாரித்து இயக்கியுள்ள தொடர் 'கைராசி குடும்பம்'. ஊர் உலகத்தில் கைராசி குடும்பம் என்று பெயர் எடுத்த ஓரு கூட்டுக் குடும்பம். மூத்த மருமகளுக்கு எதிராக வில்லத்தனம் செய்கின்றனர் அடுத்தடுத்து வரும் மருமகள்கள். ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது இந்த கைராசி குடும்பம்

களத்து வீடு - விஜய் டிவி

களத்து வீடு - விஜய் டிவி

கிராமத்து பின்னணியில் எழுதப்பட்ட மற்றொரு சீரியல் களத்துவீடு. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் சங்கரபாண்டியன், தேவிப்ரியா, சிவன் ஸ்ரீனிவாசன், அனிலா, மாணிக்கம், ராஜேஷ், காயத்ரி, ஹேமா, மனோகரன், பாலன், ஜீத்து, ரீமா, சம்பத், ஜெயபிரகாஷ் பிரபு கண்ணன் நடித்திருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் களத்து வீடு, காரை வீடு, கம்மா வீடு என்கிற மூன்று பெரிய வீடுகள் இருக்கிறது. அதில் மூன்று பெரிய குடும்பங்கள் வசிக்கிறது. அதில் களத்து வீட்டு செல்வாக்கை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று கார வீட்டுக்காரர்களும், கம்மா வீட்டு காரர்களும் முயற்சிக்கிறார்கள். அதை களத்து வீட்டுக்காரர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பது கதை.

கலைஞர் டிவியில் கண்ணம்மா

கலைஞர் டிவியில் கண்ணம்மா

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு புதிய மெகா தொடர் கண்ணம்மா வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடர் பழிவாங்கும் கதையில் உருவாகிறது. இந்த கண்ணம்மா தொடரில் சோனியா ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் பொள்ளாச்சி பாபு, கிருத்திகா, ராஜசேகர், சுமங்கலி, அழகு உள்பட பலர் நடிக்கின்றனர். என்.கிருஷ்ணசாமி கதை திரைக்கதை வசனம் எழுத, மூலக்கதை எழுதி இயக்குகிறார் வேதபுரி மோகன். என்.எஸ்.பாலசுப்ரமணியன்.

மெல்லத்திறந்தது கதவு – ஜீ தமிழ் டிவி

மெல்லத்திறந்தது கதவு – ஜீ தமிழ் டிவி

பார்வைதிறன் இல்லாத சந்தோஷ், செல்வி என்ற இரண்டு இளம் ஜோடிகளின் காதல் கதை. இதில் சந்தோஷ் கோடீஸ்வர வீட்டு மகன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி அதை விட அவன் நேசிப்பது செல்வியை. செல்வி சாதாரண குடும்பத்து பெண். சந்தோஷ் கோடீஸ்வரன் என்பது தெரியாமலேயே காதலிப்பவள். இந்த காதலர்களுக்கு வரும் பிரச்னையும், அதன் தீர்வுகளும்தான் கதை. செல்விக்கு பார்வை கிடைத்த பின்னரும் தான் காதலித்த சந்தோஷை திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்திற்குப் பின்னர் செல்வி சந்திக்கும் பிரச்சினைகள்தான் மெல்லத்திறந்தது கதவு.
புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

பிரியசகி – ஜீ தமிழ் டிவி

பிரியசகி – ஜீ தமிழ் டிவி

ஏழை குடும்பத்துப்பெண் திவ்யாவை தத்தெடுத்துக்கொள்கிறார் கோடீஸ்வரர் ஒருவர். சொத்துக்காக சொந்த மனைவியே அந்த கோடீஸ்வரரை கொலை செய்ய திட்டமிடுகிறாள். திவ்யா - காதலை பிரித்து வில்லத்தனம் செய்து சொத்துக்காக திவ்யாவை திருமணம் செய்து கொள்கிறான் வில்லன். திவ்யாவின் நிலை என்னவானது என்பதுதான் கதை. மித்ரா குரியன் நடிக்கும் இந்த சீரியலில் கூட இருந்தே குடும்பத்தை கெடுக்கும் கதைதான்.

அன்னக்கொடியும் 5 பெண்களும் – ஜீ டிவி

அன்னக்கொடியும் 5 பெண்களும் – ஜீ டிவி

தன்னை திருமணம் செய்து கொண்டு 4 பெண்களுடன் தவிக்க விட்டு கணவனை தேடி கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகிறாள் அன்னக்கொடி. தனது கணவனுக்கு ஏற்கனவே பாண்டியம்மா என்ற மனைவி இருப்பதை அறிந்து துடித்துப் போகிறாள். சித்தியின் மகள் கௌரியின் கணவனை அபகரிக்க தானாக தாலி கட்டிக்கொண்டு வந்து அடாவடி செய்யும் நீலாவதி திடீரென்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். இது கொலையா, தற்கொலையா என்று தெரியாத நிலையில் கொலைப்பழி அன்னக்கொடியின் மேல் விழுகிறது. இந்த பழியில் இருந்து தனது தாயை கௌரி காப்பாற்றினாளா என்பதுதான் கதை. இருதார திருமண கதை, திருமணமான ஆண்கள் மீது ஆசைப்படும் பெண்கள் என இந்த சீரியலும் பழைய சாதம்தான்.

என் தங்கை – ராஜ் டிவி

என் தங்கை – ராஜ் டிவி

மங்கை தொடரை இயக்கிய அரிராஜன் அதன் பிறகு சினிமா இயக்கச் சென்று விட்டார். சில படங்களை இயக்கி விட்டு தற்போது மீண்டும் தொடரை இயக்க வந்துவிட்டார். அவர் இயக்கும் புதிய தொடர் என் தங்கை. இதில் பாண்டியராஜன் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஒக்கேனக்கல் பரிசல் துறையில் பரிசல் காண்டிராக்டராக இருக்கும் பாண்டியராஜன் தன் தங்கைகள் 4 பேருக்கும் அரசு உத்யோகம் பார்க்கும் மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து கொடுக்க போராடுகிறார். திருமண வயதை தாண்டிய அண்ணனுக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கட்டிவைக்க தங்கைகள் போராடுகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையிலான உணர்ச்சி போராட்டமாக இருக்கிறது என் தங்கை.

குல தெய்வம் – சன் டிவி

குல தெய்வம் – சன் டிவி

மெட்டிஒலி, நாதஸ்வரம் சீரியல்களை இயக்கிய திருமுருகன் தயாரித்து இயக்கியுள்ள புதிய தொடர் குலதெய்வம். மவுலி, வடிவுக்கரசி, ஸ்ருதிகா உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். மெட்டிஒலி, நாதஸ்வரம் போல இந்த நெடுந்தொடர் என்னவே ரசிகர்களால் அதிக அளவில் ரசிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும்.

கேளடி கண்மணி – சன்டிவி

கேளடி கண்மணி – சன்டிவி

மனநலம் குன்றிய மாயாவுக்கு அன்னையாகவும், பாதுகாவலராகவும் இருக்கும் பவானிக்கு எத்தனையோ பிரச்சினைகள் வருகிறது. எதிர்பாராத தருணத்தில் மாயாவை திருமணம் செய்து கொள்கிறான் யுகேந்திரன். பவானியை பழிவாங்க அவளது கணவனும், இரண்டாவது மனைவியும் திட்டம் போடுவதுதான் கதை. சினி டைம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரில் சாதனா, அர்னவ், ராமச்சந்திரன், சுஜாதா, கிருத்திகா, பிரியங்கா, புவி, கீதா, ரவிசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, முத்துச்செல்வன். வசனம், எழில்வரதன்.ஒளிப்பதிவு, மீனாட்சிபட்டி இயக்கம், ஓ.என்.ரத்தினம்.

அபூர்வ ராகங்கள்

அபூர்வ ராகங்கள்

தென்றல் சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ருதிராஜ். அந்த தொடரில் அவர் நடித்த துளசி என்கிற கதாபாத்திரம் அவருக்கு பெண்கள் மத்தியில் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. அதையடுத்து ஆபீஸ் என்ற தொடரில் நடித்த ராஜி கேரக்டரும் ஸ்ருதிராஜை பேச வைத்தது. இப்போது அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்ற தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, சன் டிவியில் அபூர்வ ராகங்கள் சீரியலில் பவித்ராவாக நடிக்கிறார். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சாதுர்யமாக சமாளிப்பது மட்டுமின்றி, ஒரு போர்க்குணம் கொண்ட பெண்ணாகவும் நடிக்கிறார் பவித்ரா. இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான். அண்ணியின் வில்லத்தனம், பேத்தி என்று பொய் சொல்லிக்கொண்டு வந்து மகாதேவை பழிவாங்க துடிக்கும் வில்லி இவற்றை
பவித்ரா எப்படி சமாளிக்கிறாள் என்பதுதான் கதை.

ஆதிரா – சன் டிவி

ஆதிரா – சன் டிவி

இது பேய் சீரியல். ஆதிரா பேயை சுற்றி சுழல்கிறது. பழிவாங்கும் கதையான ஆதிராவில் வெள்ளை சேலை கட்டிய பேய், எப்படி ஒரு பெண்ணின் உடம்பிற்குள் புகுந்து கொண்டு மிரட்டுகிறது என்பதுதான் கதை.

7ம் உயிர் - வேந்தர் டிவி

7ம் உயிர் - வேந்தர் டிவி

சரவணன் மீனாட்சி தொடரின் முதல் பகுதி, காஞ்சனா, காத்து கருப்பு,சன் டிவியின் பாசமலர் தொடர்களை இயக்கிய அழகர் தற்போது ஏழாம் உயிர் என்ற தொடரை இயக்கி வருகிறார். 7 ஊர்களில் வாழும் 7 பெண்களுக்கு ஒரு தீய சக்தியால் ஆபத்து வருகிறது. அந்த தீய சக்தியை அழித்து நல்ல சக்தி அவர்களை எப்படி காப்பாற்றுகிறது என்பதுதான் கதை. இது வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

English summary
Here is the list of new serials telecast on 2015. Sri Ramanujar,lakshmi Vanthachu, Priyamanaval, kalathuveedu, is the top serials on Tamil Tv Channels.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil