twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மச்சான் வாயேன் சேர்ந்து குடிக்கலாம்: சீரழிக்கும் டிவி சீரியல்கள்

    By Mayura Akilan
    |

    மதுவிலக்கு கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்க மாமியார் மருமகள், அண்ணி - நாத்தனார் வில்லத்தனங்களை கதை கதையாக சொல்லும் டிவி சீரியல்களும், சினிமாக்களிலும் மதுபழக்கம் பற்றி தீவிரமாக பிரச்சாரம் செய்யும் வகையில் காட்சிகள் வைக்கப்படுகின்றன.

    ‘போரடிக்குதுன்னு சொல்லி போன் பண்றவன் ப்ரெண்டுன்னா... பீர் அடிக்கணும்னு சொல்லி போன் பண்றவன் பெஸ்ட் ப்ரெண்டு' இது சகலவலா வல்லவன் படத்தில் வரும் வசனம். இதுதான் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்படும் போது முன்னோட்டமாக போடப்படுகிறது.

    இதைப்பார்க்கும் சின்னஞ்சிறுவர்கள் கூட இந்த வசனத்தை சொல்ல ஆரம்பித்து விட்டனர். சினிமாவில் எப்படி டாஸ்மாக் குத்து பாட்டு வைப்பது தவிர்க்க முடியாததாகி விட்டதோ, அதே போல சீரியல்களில் டாஸ்மாக் பார் காட்சிகள் வைப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த அளவிற்கு டாஸ்மாக் பாரின்றி அமையாது சீரியல் என்றாகிவிட்டது.

    தெய்வமகள் கணேசன்

    தெய்வமகள் கணேசன்

    சன்டிவியில் ப்ரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் தொடரில் நடிக்கும் கணேசன், மூர்த்தி ஆகியோருக்கு வைக்கும் காட்சிகள் பெரும்பாலும் டாஸ்மாக் பார் காட்சிகளாகத்தான் இருக்கின்றன.

    மூர்த்தி

    மூர்த்தி

    தெய்வமகள் தொடரில் மூர்த்தியின் முழு நேர தொழிலே மது குடிப்பதுதான் போல, வில்லி காயத்திரி மூர்த்திக்கு பணத்தை கொடுத்து கூட்டுச்சதிக்கு உடந்தையாக வைத்துக்கொள்வதுதான் கொடுமை.

    ராஜூவும் இதே ஜோலிதான்

    ராஜூவும் இதே ஜோலிதான்

    மனைவியை விட்டு பிரிக்க பிரசாத்தின் அண்ணன் ராஜூவிற்கு பணத்தைக் கொடுத்து முழுநேர குடிகாரனாக மாற்றியதே அண்ணி காயத்ரிதான்.

    மரகத வீணை

    மரகத வீணை

    பிற்பகல் நேரத்தில் மரகத வீணை என்ற சீரியலில் பெண் போலீஸ் ஒருவரே தான் விரும்பும் நபருக்கு மதுவை ஊற்றிக்கொடுக்கிறார். மனைவியை மறந்துவிட்டு தன்னுடைய நினைப்பிலேயே இருக்கவேண்டும் என்பதற்காக ஊற்றிகொடுப்பதாக வசனம் வேறு பேசுகிறார் அந்த பெண் போலீஸ்.

    ஜால்ரா போடும் ஏட்டு

    ஜால்ரா போடும் ஏட்டு

    எஸ்.ஐ.கவிதாவின் வில்லத்தனங்களுக்கு எல்லாம் ஒரு பெண் ஏட்டு வேறு கூடவே இருந்து ஜால்ரா போடுவதுதான் கொடுமை. டாஸ்மாக் சரக்கை பாட்டில் பாட்டிலாக வேறு வாங்கி வைக்கிறார் எஸ்.ஐ.கவிதா.

    பணம் குடு சரசு

    பணம் குடு சரசு

    இது ஒருபுறம் இருக்க கணவனின் குடல் கெட்டுவிடக்கூடாது என்று வெளிநாட்டில் இருந்து வந்த சரக்கை வாங்க சரசுவிடம் பணம் கேட்டு வரும் வீட்டு ஓனரை திட்டுகிறாள் சரசு. அவளது கணவனே பாட்டில் பாட்டிலாக வீட்டில் வாங்கி வந்து குடிப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

    மாமியாருக்கு தெரியுமோ?

    மாமியாருக்கு தெரியுமோ?

    அந்த நேரம் பார்த்து சரியாக மாமியார் வரவே அவருக்கு தெரியாமல் மது பாட்டில்களை மறைக்க சரசுவும், வீட்டு ஓனர் பெண்மணியும் ஆடும் நாடகம் ஐயோ... ஐயோ...

    குலதெய்வத்திலும் இப்படியா?

    குலதெய்வத்திலும் இப்படியா?

    குடும்ப தொடர்களை எடுத்து வந்த குலதெய்வம் தொடரிலும் பார்ட்டி கலாச்சாரம்தான். ஆண், பெண் பேதமின்றி அனைவருமே மது அருந்துகின்றனர். இதில் நைட் பார்ட்டிக்கு போகும் பெண்களை கொலை செய்யும் மனநோயாளி கதாபாத்திரம் வேறு அடிக்கடி வந்து போகிறது.

    கட்டிங்கிற்கு கட்டிங்

    கட்டிங்கிற்கு கட்டிங்

    இப்போதெல்லாம் சின்னஞ்சிறுசுகள் கூட மச்சான் ஒரு கட்டிங் சொல்லேன் என்று கூறும் அளவிற்கு மதுக்கடை காட்சிகள் இடம்பெறுகின்றன. கூடவே குடி குடியைக் கெடுக்கும் என்ற வரிகள் வேறு இடம்பெறுகின்றன.

    தடை வருமா?

    தடை வருமா?

    சினிமாவில்தான் மது அருந்தும் காட்சிகளும், பாடல்களும் இடம் பெறுகின்றன. வீட்டிற்குள்ளேயே வரும் சீரியல்களில் மது அருந்தும் காட்சிகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்பது சீரியல் பார்க்கும் ரசிகர்களின் கோரிக்கையாகும்.

    English summary
    Most of the TV serails in Tamil are boosting the booze and liquors
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X