»   »  கொழுந்தனிடம் போட்ட சபதத்தில் ஜெயிப்பாளா வள்ளி ? 1025 எபிசோடுகளை கடந்து சாதனை

கொழுந்தனிடம் போட்ட சபதத்தில் ஜெயிப்பாளா வள்ளி ? 1025 எபிசோடுகளை கடந்து சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டி.வியின் வள்ளி சீரியல் 1025 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. வள்ளி சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கண் தெரியாத தங்கையாகவும், வள்ளியாக போல்ட் ஆக நடித்து அசத்தி வருகிறார் நாயகி வித்யா.

மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் என 21 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் மலையாள திரையுலகின் நாயகி வித்யா, தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் வள்ளி தொடரின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

விக்கி வள்ளி ஜோடி, ஆனந்த், வெண்ணிலா ஜோடி நடிப்பில் மட்டும் அல்லாது நகைசுவை என்று கலக்கி இருக்கிறார்கள். விக்கி குடும்பத்தை இந்திரசேனாவிடம் இருந்து காப்பாற்றும் வள்ளி, தங்கை வெண்ணிலாவின் குடும்பத்தை கொழுந்தன் பிரகாஷ் இடம் இருந்து காப்பாற்ற ஆதாரங்களை சேகரித்து வருகிறாள்.

கொழுந்தன் விட்ட சவால்

கொழுந்தன் விட்ட சவால்

தங்கை வெண்ணிலாவிற்காக நடிக்க வந்திருக்கும் வள்ளியிடம் சவால் விடுகிறான் கொழுந்தன் பிரகாஷ். சேகரித்து வைத்திருந்த ஆதாரங்களை எல்லாம் அழித்து விடுகிறான்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மீண்டும் ஆதாரங்களை சேகரித்து கொழுந்தன் விட்ட சவாலில் வென்று தங்கையின் கணவனை காப்பாற்றுவாளா வள்ளி என்பதே அடுத்து வரும் எபிசோடுகளின் பரபரப்பான எதிர்பார்ப்பாக உள்ளது.

பாட்டியின் ஆதரவு

பாட்டியின் ஆதரவு

வெண்ணிலாவாக நடிக்க வந்திருக்கும் வள்ளிக்கு பாட்டியின் ஆதரவு இருப்பதால் எந்த அச்சமும் இன்றி சவால்களை சமாளிப்பாள் என்று இல்லத்தரசிகள் பேசி வருகின்றனர். இனிவரும் எபிசோடுகள் பரபரப்பாகவே இருக்கும்.

வள்ளிக்கு வரவேற்பு

வள்ளிக்கு வரவேற்பு

வள்ளி தொடரில் எனது கேரக்டரை டபுள் ரோலாக மாற்றும் அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ரோலில் டைட்டில் ரோலான வள்ளி கேரக்டரிலும், மற்றொரு ரோலில் பார்வையற்றவளாகவும் நடிக்கிறேன் ரசிகர்களிடம் பாராட்டு கிடைத்து வருகிறது என்கிறார் வள்ளி ஹீரோயின் வித்யா.

வள்ளிக்குத்தான் முதலிடம்

வள்ளிக்குத்தான் முதலிடம்

நீலாம்பரி என்ற மலையாளத் தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன். இப்போது வள்ளி தொடருக்கே நேரம் சரியாக இருப்பதால், அந்தத் தொடரில் இருந்தும் விலகிவிட்டேன். வள்ளி சீரியல் முடியும் வரை வேறு சீரியல்களில் நடிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார் வித்யா.

English summary
Sun TV Serial Valli crossed 1025 episode. Valli heroine Vidya married Vinu Mohan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil