Just In
- 8 min ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 32 min ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
- 44 min ago
மீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு!
- 1 hr ago
குட்டி பவானிக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDMasterMahendran.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!
Don't Miss!
- News
பைடன் பதவியேற்பு விழா... பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 தேசிய பாதுகாப்பு படையினருக்கு கொரோனா
- Sports
மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Automobiles
கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்!
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Bigg Boss 3 Tamil: செம கேப்டனப்பா.. கலக்கிட்டாரே வனிதா விஜயகுமார்!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ் மேடாக தங்கி இருக்கும் வனிதா விஜயகுமார் நல்ல கேப்டன் என்று மீரா தவிர எல்லாரிடமும் நல்ல பேர் வாங்கி இருக்கார்.
குரல்தான் அப்பா நாட்டாமையோட குரல் என்றாலும், வனிதா மனசு என்ன நினைக்குதோ அது படி செயல்படறார். மனசு என்றாலே மனசாட்சின்னுதான் அர்த்தம். மனசாட்சிக்கு விரோதம் செய்யாம நடந்துக்கறார்.
இவரை ஏதாவது சலசலப்புக்கு உள்ளாக்கும் மாதிரி சூழ்நிலைகள் மாறி சென்றாலும், தன் டிராக் மாறாமல் அப்படியே இருக்கிறார் ,நியாயப்படி நடந்துக்கறார்.

குழந்தை பருவத்தில் வனிதா
வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மூவரும் பிறக்கும் வரை, வளசர வாக்கத்தில், இப்போது இருக்கும் பெரிய பங்களா கட்டப்பட்ட வில்லை. அதனால், இவர்களுக்கு போதுமான ஒரு சின்ன பங்களாவில்தான் குழந்தைகள் வளர்ந்து இருக்காங்க. பெண் குழந்தைகள் மூவரும் ஆயாம்மாவின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். காலையில் அம்மா,அப்பா ஷூட்டிங் எப்போது போவார்கள் என்றும் தெரியாது.இரவு எப்போது வீடு திரும்புவார்கள் என்றும் தெரியாது.

விஜயகுமார் மஞ்சுளா வீட்டில்
விஜயகுமார் மஞ்சுளா இருவரும் வீட்டில் இருக்கும் நேரங்களில் வீடே அதகளப்படுமாம். வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி மூன்று குழந்தைகளும் அத்தனை சந்தோஷத்தில் குதூகலிப்பார்களாம். அப்பா அம்மாவை ரெஸ்ட் எடுக்க விட மாட்டார்கள். என்றாலும் கூட பிள்ளைகளிடம் அம்மா மஞ்சுளா கோபம் காமிக்கவே மாட்டாராம். எந்த சண்டையாக இருந்தாலும், அம்மா அப்பாவுக்குள் வரும் எந்த சண்டையும் அப்படியே அவர்களுக்குள் குழந்தைகளுக்குத் தெரியாமல் முடிந்துவிடுமாம்.
பிள்ளைகளுக்கும் டாடி
மஞ்சுளா காதலித்து விஜயகுமாரை கல்யாணம் செய்துகொண்டாலும், அவரை அதுவரை வாங்க, போங்கன்னு மட்டுமே அழைத்துக்கொண்டு இருந்தாராம். வனிதா பிறந்து பேச ஆரம்பித்து, அப்பாவை டாடி என்று அழைத்த உடனே, தானும் கணவரை டாடி என்று செல்லமாக அழைப்பாராம். அன்று முதல் வனிதாவின் அம்மாவுக்கும், விஜயகுமார் டாடி ஆனார்.
அதோடு சரி
குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்த மஞ்சுளா,விஜயகுமார் தம்பதியர், அடுத்து குழந்தைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை.காரணம், பிள்ளைகள் அதற்கு மேல் படிக்காமல் நடிக்க ஆசைப்பட்டார்களா ,இல்லை வாய்ப்பு வந்ததும் நடிக்க வைத்துவிட்டார்களா என்று விவரம் தெரியவில்லை.
ஸ்ரீதேவி வனிதா
வனிதா சந்திரலேகா படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மிகச் சிறிய வயதிலேயே நடிக்க ஆரம்பிச்சார். அதற்குப் பிறகு வயதில் மிகப் பெரியவரான ராஜ்கிரணுடன் மாணிக்கம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்போது இந்த சின்ன பெண்ணிடம் பல பத்திரிகையாளர்கள் எதற்கு இந்த வயதில்லை ராஜ்கிரணுடன் என்று கேட்டபோது, நடிப்புன்னு வந்தாச்சு..இதில் இந்த ஹீரோவா அந்த ஹீரோவா என்று பாகுபாடு எதுக்கு. அதுவும் இல்லாமல் ராஜ்கிரண் பல வெற்றி படங்களைத் தந்தவர் என்று அதிரடி பதில் கொடுத்தவர். இவரின் இரண்டாவது தங்கை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாகவும் நடித்தவர்.

பங்களா வளசரவாக்கம்
பிள்ளைகள் அதுவும் வனிதா நடிக்க ஆரம்பித்த பிறகு மஞ்சுளா விஜய்குமார் தம்பதியர் கட்ட ஆரம்பித்ததுதான் வளசரவாக்கம் பெரிய பங்களா. இப்போது இந்த பங்களாவின் வனிதா வசிச்சதுதான் அவரது இரு தங்கைகளைத் தவிர இப்போதுள்ள அவர்கள் வீட்டார் யாருக்கும் பிடிக்காமல் அண்மையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

பிள்ளைகள் இருந்தாலும்
ஒரு தாய்க்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அத்தனை பிள்ளைகளும் தன்னுடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவாள். வளர்ந்துவிட்ட தனது மூத்த மகன் தன்னிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்சசிக்கு வந்ததைக் கூறுகிறார் வனிதா. என்னதான் வாயாடினாலும் குரைக்கற நாய் கடிக்காது என்பது போலத்தான் வனிதாவின் குணம்.
ஒருவரிடம் இருக்கும் குறையை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்காமல், அதே பூத கண்ணாடியை வைத்து அவரிடம் இருக்கும் நல்லதை பார்த்து, குடும்பத்தினர் அவரை அரவணைக்கலாமே! தங்கைகள் இருவரை இன்னொரு தாயாக இருந்து பார்த்து அரவணைத்துக் கொண்டவர் வனிதா.