twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் டிவியின் வழக்கு எண் 18/9 மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்

    By Mayura Akilan
    |

    vazhakku Enn 18/9 helps re-uniting a family
    வழக்கு எண் 18/9 படத்தில் மனநலம் குன்றியவனாக நடித்த சிறுவன் பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூரைச் சேர்ந்தவர் மில் தொழிலாளி லோகநாதன். இவருடைய மகன் அன்பு மனநலம் குற்றியவன். கடந்த சில வருடங்களுக்கு முன் குடும்பத்தோடு சென்னைக்கு சென்றிருந்த போது 6 வயதில் அன்பு காணாமல் போய்விட்டான். லோகநாதன் குடும்பத்தினருடன் தேடிவிட்டு குழந்தை கிடைக்காமல் போகவே திருப்பூருக்கு திரும்பிவிட்டனர்.

    இதனையடுத்து சென்னை தெருக்களில் அழுதபடி சுற்றி திரிந்த அவனை மனநலம் குன்றிய இல்ல நிர்வாகிகள் தூக்கி வந்து காப்பகத்தில் சேர்த்தனர். 2006 முதல் எழும்பூரில் உள்ள அரசு பாலவிகார் இல்லத்தில் வளர்ந்து வந்தான். மனநலம் குன்றிய அச்சிறுவனை இயக்குனர் பாலாஜி சக்திவேல் 'வழக்கு எண் 18/9' படத்தில் நடிக்க வைத்தார்.

    கதாநாயகியின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிறுவனாக அன்பு நடித்திருக்கிறான். இப்படம் வினாயகர் சதுர்த்தியன்று விஜய் டி.வி.யில் ஒளிபரப்பானது. இதனை லோகநாதனும் அவரது மனைவியும் பார்த்துள்ளனர்.

    அதில் நடித்துள்ள சிறுவன் அன்பு தங்கள் மகன் என்று அடையாளம் கண்டுபிடித்த அவர்கள் உடனடியாக சென்னை புறப்பட்டு வந்து இயக்குநர் பாலாஜி சக்திவேலை சந்தித்தார்கள். அன்பு சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் என கூறவே அவர்களை பாலாஜி சக்திவேல் குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்து சென்றார். அங்கு பிறப்பு சான்றிதழ், சிறுவயதில் எடுத்த போட்டோ, ரேசன்கார்டு போன்ற ஆதராங்களை காட்டி சிறுவன் அன்புவை மீட்டு அழைத்து சென்றார்கள்.

    இதுகுறித்து பேசிய அன்புவின் பெற்றோர். விநாயகர் சதுர்த்தியன்று காணமல் போன தங்களின் பிள்ளையை விநாயகர் காட்டிக்கொடுத்துவிட்டார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்ததன் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆஸ்கார் விருது பெற்றது போன்ற சந்தோசம் கிடைத்திருக்கிறது என்று கூறினார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

    English summary
    Vazhaku enn 18/9, telecast on Vijay TV as a Vinayakar Chathurthi Special stunned a Tirupur family as the kid acting as the heroine's retarded neighbor turned out to be their mentally challenged boy missing for six years.
 
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X