Just In
- 10 min ago
அயலான் படத்தின் அசத்தல் அப்டேட்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. தெறிக்கும் டிவிட்டர்! #Ayalaan
- 54 min ago
ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி.. கவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்த ஷிவானி நாராயணன்!
- 17 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 17 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு கொரோனா குறைந்துள்ளது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை.. சர்க்கரை அளவு அதிகரிப்பு
- Finance
வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..!
- Sports
என்னுடைய நோக்கமே இதுதான் பாஸ்.. உண்மையை உடைத்த "தற்காலிக கேப்டன்".. ரஹானே vs கோலி பின்னணி!
- Automobiles
செம்ம... நாளை, குடியரசு தினத்தில் அறிமுகமாகிறது அரசியல்வாதிகளின் பிரபலமான டாடா கார்...
- Lifestyle
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Chithi 2 Serial: வெண்பா வீடியோ விட்டுட்டா.. அவ மேல கோபம் வரலை.. சித்தி மீது ஏன்?
சென்னை: சன் டிவியின் சித்தி 2 சீரியல் அந்த நேரத்துக்கு உண்டான ரேட்டிங் என்று பார்த்தால் சுமார்தான். சன் டிவியின் ரேட்டிங்கில் 5 வது இடத்தில்தான் சித்தி 2 சீரியல் இருக்கு. சீரியல் ஆரம்பித்த புதிதில் பிடித்த ரேட்டிங்கில்தான் இன்னும் இருக்கு.
அப்பாவுக்கு சரக்கு வாங்க போன நந்தினி, வெண்பாவின் கண்ணில் மாட்டி அவள் வீடியோ எடுத்து, அதை சமூக வலைத் தளத்திலும் பதிவிட்டு விடுகிறாள். அப்பாவுக்கு சரக்கு வாங்க நந்தினி ஏன் போகணும்? அப்பாவின் மானம் காக்க என்றாலும் வீட்டில் அண்ணன் வேலை வெட்டிக்குப் போகாமல் சும்மாத்தானே இருக்கான்.
சரி, அதை விடுங்க...வெண்பா வீடியோ எடுத்து போட்டு அந்த வீடியோவை ரெண்டு லட்சம் பேர் பார்த்துட்டாங்கன்னா கோவம் யார் மேல் வரணும்? வெண்பா மேலதானே? ஆனா, இவ சித்தி மேலதான் கோபப்படறா.

சித்தி 2 ஒன் லைன்
அண்ணனுக்கு அப்பாவின் மானம் முக்கியம் இல்லையா? ஒரு பெண்ணை சரக்கு வாங்க அனுப்ப அந்த குடும்பத்தில் பிறந்த அண்ணன் ஒரு "கே" னாவா? இந்த கேள்வி எல்லாம் கேட்கப்படாது. ஏன்னா இதுதான் சித்தி கதையோட ஒன்லைன்! நந்தினி அப்பாவுக்கு சரக்கு வாங்க போகணும்.. அதை வெண்பா பார்த்து வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பதிவிடனும்.. அதில் சண்டை வந்து வெண்பாவுக்கு சித்தி சப்போர்ட் வரணும்...அதனால் சித்தி மேலதான் நந்தினிக்கு கோவம் வரணும். இதுதானே கதையின் ஒன்லைன்!

நந்தினி ஓவர் ஆட்டம்
அதுக்குன்னு நந்தினியின் ஆட்டத்தை ரொம்ப ஓவராக்கி காண்பித்து இருக்காங்க. ஹவுஸ் ஓனரை நந்தினி எடுத்ததுக்கும் கை ஓங்கறதும் அடிக்கறதும்னு ரொம்ப ஓவரா போயிட்டாங்க. சுந்தர் கே.விஜயன் இயக்கமே அப்படித்தான் இருக்கும். பரபரப்பு விறுவிறுப்பு என்று இப்படியான காட்சிகளை திணித்து விடுவார். அண்ணாமலை சீரியலில் இவர் பொறுப்பேற்ற பிறகு வீழ்ந்த கொலைகள் அப்படித்தான் இருந்தன.
Chocolate Serial: சாக்லெட் கலரில் ஒரு பொண்ணு.. அதை வச்சு செம ஃபன்னு.. !

ஆஹா ஓஹோ சித்தி
ஆஹா ஓஹோன்னு பேசப்பட்ட சித்தி சீரியல் இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்கவில்லை. ஆனால் வந்த வேகத்திலேயே ரொம்ப சாதாரண சீரியல் போல சித்தி 2 சீரியல் ஆகிவிட்டது. 9 மணிக்கு என்று முன்னதாக நேரம் ஒதுக்கியும் கூட ரேட்டிங் எதிர்பார்த்த அளவு வரவில்லை என்பதுதான் உண்மை. ராதிகா சரத்குமாருக்கு ஒரு தயாரிப்பாளரா பிரஷர் கூடி இருக்கிறது.

எதைச் செய்து
எதைச் செய்து ரேட்டிங்கை உயர்த்துவது என்பது ஒரு புறம் இருந்தாலும் இருக்கும் ரேட்டிங்கை தக்க வச்சுக்க என்ன பண்ணப் போறீங்க என்பதுதான் சானல் தரப்பு கேள்வியாக இருக்கிறதாம். கதையை இன்னும் வேறு வழியில் மாற்றி அமைக்கவும் திட்டங்கள் நடைப்பெற்று வருவதாகவும் கூறுகிறார்கள். ஆனால், ராடான் நிறுவனத்துக்கு ஸ்டார் காஸ்ட் என்றால் அது ராதிகா மட்டும்தான் என்பதில் உறுதியாக இருக்கிறது ராடான்.