»   »  வி வாய்ஸ் குரல் தேடல்... அசத்திய போட்டியாளர்கள்: அனுபவங்களை பகிர்ந்த டி.ராஜேந்தர்

வி வாய்ஸ் குரல் தேடல்... அசத்திய போட்டியாளர்கள்: அனுபவங்களை பகிர்ந்த டி.ராஜேந்தர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேந்தர் டிவியின் வி வாய்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டி. ராஜேந்தர் கலந்து கொண்டு தனது வாழ்வில் நடந்த சுக துக்கங்களையும் அனைவரிடமும் பகிர்ந்து தான் வெற்றி பெற்றது குறித்து சிறப்புரையாற்றி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

வேந்தர் டிவியில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய இசை நிகழ்ச்சி V வாய்ஸ் . சென்னையில் வண்ணமயமான பிரமாண்டமான அரங்குகளில் முதல் சுற்றில் தேர்வானவர்களுக்கு இறுதிக்கட்ட போட்டிகள் நடைப்பெற்றுக் கொண்டிருகிறது .

Vendhar TV V voice Chief guest T.Rajendar

அடுத்த தலைமுறைக்கான குரல் தேடல் என்னும் முனைப்போடு நடைப்பெறும் தமிழ்நாட்டில் தொலைக்காட்சியில் புதிய வரலாறு படைக்கவிருக்கும் இந்த V வாய்ஸ் குரல் தேர்விற்காக ஆயிரக்கணக்கில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொண்டனர் .

தமிழ்நாடு முழுவதும் 7மண்டகலாக பிரித்து குரல் தேர்வு நடத்தப்பட்டது. இதுவரைக்கும் தமிழ்நாட்டில் குரல் தேர்வு நடத்தாத இடங்களில் கூட தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது அங்கெல்லாம் போட்டியாளர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர். அங்கு ஒவ்வொரு மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அல்லது நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய சுற்றுகளுடன் நடத்தப்பட்டது.

Vendhar TV V voice Chief guest T.Rajendar

இதில் அதிரடி சுற்று மற்றும் பஞ்சபூதங்களாகிய நிலம் ,நீர் ,காற்று, ஆகாயம் ,நெருப்பு என ஐந்து பகுதிகளாக புது புது சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் இனிய பாடல்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்காளாக பிரபல பின்னணி பாடகர் பிரசன்னா, பிரபல திரைப்பட நடிகை ஆன்ட்ரியா, பிரபல பின்னணி பாடகர் நரேஷ் அய்யர் போன்றோர் நடுவர்களாக இருந்து தேர்ந்தெடுத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டி. ராஜேந்தர் கலந்து கொண்டு தனது வாழ்வில் நடந்த சுக துக்கங்களையும் அனைவரிடமும் பகிர்ந்து தான் வெற்றி பெற்றது குறித்து சிறப்புரையாற்றினார் .

வி வாய்ஸ் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 8.00 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது .

English summary
Have a quick Glimpse of our judges on V Voice Andrea Jeremiah. V voice is a talent hunt show for Singing telecast on Venthar TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil