twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Vennila kabaddi kuzhu 2: கபடி கபடி கபடி...அட வெண்ணிலா கபடி குழு பார்ட் 2 !

    |

    சென்னை:2009ம் ஆண்டு கபடி விளையாட்டு போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் வெண்ணிலா கபடி குழு. இந்த படத்தின் மூலம்தான் நடிகர்கள் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு அங்கீகாரம் கிடைத்தது.

    மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு பார்ட் 2 கதையை இயக்குனர் செல்வசேகரன் இயக்குகிறார். புதுப்பொலிவுடன் வெண்ணிலா கபடி குழு 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    2ம் பாகமானது, அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ளதாக வெண்ணிலா கபடி குழு 2 படக்குழுவினர் கூறுகிறார்கள்.

    திருவிழா போல் கபடி

    திருவிழா போல் கபடி

    இந்த கதை பலவருடங்கல்பின்நோக்கி சென்று நடப்பதாக படம் எடுத்து உள்ளார்கள்.1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளதாகவும், மேலும் முதல் பாகத்தில் நடித்த பரோட்டா சூரி, அப்புகுட்டி என பல நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்தது இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார் இயக்குனர் செல்வசேகரன்.

    முதல் பாகத்தில் ஸ்ரித்திகா

    முதல் பாகத்தில் ஸ்ரித்திகா

    இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், அப்பு குட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல்பாகத்தில் நடிகை சரண்யா, அதோடு, நாதஸ்வரம் சீரியலில் மலராக நடித்த ஸ்ரித்திகா இந்த படத்தில்தான் அறிமுக நடிகையானார். இதற்குப் பின் வேங்கை உள்ளிட்ட அப்பள படங்களில் நடித்துள்ளார் ஸ்ரித்திகா.

    பூங்காவனம், ஆனந்த்

    பூங்காவனம், ஆனந்த்

    சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.படத்திற்கு இசை, செல்வ கணேஷ் ஒளிப்பதிவு, கிருஷ்ண்சாமி
    சண்டைப்பயிற்சி,சூப்பர் சுப்பராயன்
    மக்கள் தொடர்பு , P.T.செல்வகுமார்

    மின்னொலி கபடி போட்டி

    மின்னொலி கபடி போட்டி

    நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட மின்னொலி கபடி போட்டியை எட்டு நாட்கள் தொடர்ந்து தத்ருபமாக படமாக்கி உள்ளார்களாம். காப்பதை நமது வீராதி தமிழரை விளையாட்டு. கில்லி படத்தில் விஜய் கபடி விளையாட்டு வீரராக நடித்து அசத்தி இருப்பார் இப்படி கபடி விளையாட்டை விரும்பாதவர்ள் இல்லை. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக வெண்ணிலா கபடி குழு 2 படம் அமையும் என்று உத்திரவாதம் அளிக்கிறார்கள்.

    வெண்ணிலா கபடி குழு முதல் பாகத்தின் மூலம் புகழடைந்த பரோட்டா சூரி, இந்த இரத்தம் பாகத்தில் என்ன நகைச்சுவை செய்யப் போகிறார் என்பதைப்பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

    English summary
    The Vanilla Kabadi Group is a big hit in the 2009 Kabadi Games competition with the success of Susheendran. It is through this film that actors Vishnu Vishal, Barotta Suri and director Susheendran have gained recognition in Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X