Vijay: காலில் விழுந்து அழுதாரா? கரூர் மக்களிடம் விஜய் பேசியது என்ன? உண்மையில் நடந்தது என்ன?

சென்னை: கரூரில் கடந்த செப்டம்பர் 27ந் தேதி தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் தவெக சார்பில் நிவாரணமாக தலா ரூ.20 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேற்று மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து Valai Pechu Anthanan யூடியூப் சேனலில் பேசி உள்ளார்.

அதில், கரூர் துயர சம்பவம் அனைவரும் மறக்க நினைக்கும் ஒரு சம்பவமாக தான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருந்தது. விஜய் கரூர் சென்று ஆறுதல் கூறவில்லை, பாதிக்கப்பட்டவர்களை இங்கே வரவைத்து ஆறுதல் கூறுகிறார் என சோசியல் மீடியாவில் மாறி மாறி சில கருத்துக்களை கூறி வந்தாலும், மைய புள்ளி என்னவென்றால், விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பது தான்.

Vijay Karur Anthanan
Photo Credit:

விஜய் சந்திப்பு: மாமல்லபுரத்தில் நேற்று நடந்த சந்திப்பு மிகவும் நெகிழ்வாக இருந்ததாக பலர் சொல்கிறார்கள். இது மீண்டும் ஒருமுறை கரூர் சம்பவத்தை நினைவுபடுத்தும் நிகழ்வாகவே இருந்துள்ளது. நேற்றைய நிகழ்வில் எந்த ஒரு ஊடகத்தையும் விஜய் அனுமதிக்கவில்லை. நேற்றைய நிகழ்வில் புஸ்ஸி ஆனந்த் இல்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், எனக்கு வந்த தகவல் படி புஸ்ஸி ஆனந்த், விஜய்யுடன் தான் இருந்தார் என்று சொல்கிறார்கள்.

காலில் விழுந்து அழுதார்: அதேபோல பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக விஜய் சந்தித்து பேசி இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் போது, அவருடன் யாரும் இல்லை, தனியாகத்தான் சந்தித்து அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அழுது இருக்கிறார். விஜய் நடிகர் என்பதால் இது நடிப்பு என கருத்துகளை பரவினாலும், 41 பேர் உயிரிழந்துவிட்டார்கள் என்று கேள்விப்படும்போது நமக்கே மன பதறுகிறது. நம்மால் 41 பேரின் உயிர் போய்விட்டதே என நினைக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் பார்த்து விஜய் எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பார் என்பதை உணர முடிகிறது.

உண்மையான கண்ணீர்: ஒரு நடிகராக இருப்பதால் உண்மையாக கண்ணீரை வெளிப்படுத்தி, வேதனைப்படும் போது அது நடிப்பு என விமர்ச்சிக்கப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட 41 குடும்பத்திற்கும் தெரியும் அந்த தண்ணீரில் உண்மை இருக்கா... இல்லையா.. என்பது. கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தாலும் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்ததால், 38 குடும்பங்கள் தான் அதில் பாதிக்கப்பட்ட குடும்ப. இதில் 37 குடும்பங்கள் தான் வந்திருந்தனர். நேற்று வந்திருந்த அனைத்து குடும்பத்திற்கும் லைஃப் இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்ஸ்சூரன்ஸ் போட்டு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதில், உயிரிழந்த ரமேஷின் மனைவி வரவில்லை. அவர், விஜய் வழங்கிய ரூ.20 லட்சத்தை ரமேஷின் மனைவி சங்கவி திரும்பி அனுப்பி உள்ளார். நேரில் வந்து ஆறுதல் கூறாததால் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டதாக கூறியிருந்தார். ஆனால், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தையும் வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும் என்று தான் விஜய் விரும்பி இருக்கிறார். இதற்காக கரூரில் மண்டபம் கிடைக்காததால், சென்னையில் வரவைத்து சந்தித்து இருக்கிறார். இதையடுத்து, தவெக தனது தேர்தல் வேலையில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X