தங்கச்சியா?.. படுக்குறப்போ போட்டோஸ் எடுத்து வைச்சிக்கோங்க.. நாஞ்சில் விஜயனை விளாசிய விஜே வைஷு!

By Staff

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பரப்பான நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ, விஜய் தொலைக்காட்சி பிரபலங்களால் ஏற்படும் பரபரப்பு என்பது இணையத்தில் பரபரப்பாகவே இருந்து கொண்டு உள்ளது. அப்படியான ஒரு சம்பவம்தான் நாஞ்சில் விஜயன் மற்றும் விஜே வைஷ்ணவி விவகாரம். இவர்களுக்கு இடையிலான பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொள்ள நாஞ்சில் விஜயனும் அவரது மனைவியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அப்படி இருக்கையில் அவர்களுக்கு சின்னத்திரை நடிகை விஜே. வைஷு பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, " கமிஷனர் அலுவலகம் முன்பு நான் பேட்டி கொடுக்கும்போது ஒரு ரிப்போட்டர் கேட்கும்போது, என்னைத் தெரியாது என்று கூறுகிறார் நாஞ்சில் விஜயன். அதன் பின்னர் ஒரு இடத்தில் பேட்டிக்குச் செல்லும்போது, பழகியிருக்கேன் என்று கூறியுள்ளார். மூன்றாவது தோழி என்று கூறியுள்ளார். நான்காவதாக சகோதரி என்று கூறியுள்ளார். இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்பதை பொதுமக்கள் நீங்கள்தான் யோசித்துக் கொள்ள வேண்டும்.

Vijay TV VJ Vaishu Slams Nanjil Vijayan New Video Out
Photo Credit:

நான் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறேன் என்று நாஞ்சில் விஜயன் பொய் சொல்லுகிறார். அப்படி நான் வட்டிக்கு விட்டு சம்பாதித்தால் எனது பொருளாதார நிலை இவ்வளவு மோசமாக மாறி இருக்காது. நான் மூன்று லட்சம் கொத்தற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார். அதற்கு மனசாட்சியும் காதலும் தான் ஆதாரம். நான் உங்களை நம்பிக் கொடுத்திருக்கிறேன் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அந்த பணத்தை திருப்பிக் கொடுங்க. என்னை யாரென்று தெரியாதுனு சொல்லிவிட்டு, எனது வீடு முதல் மாடியில் தான் இருக்கிறது என்பது உங்களுக்கு எப்படி தெரியும்.

பப்ளிசிட்டி: நான் பப்ளிசிட்டிக்காக இதைச் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். நாஞ்சில் விஜயன் என்ன ரஜினியா? கமலா? அஜித்தா? விஜயா? இப்போது விஜய் தொலைக்காட்சியில் தனம் என்ற சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். வி.ஜே. வைஷ்ணவி என்றால் அனைவருக்கும் தெரிகிறது. இப்படி இருக்கையில் எனக்கு என்ன பப்ளிசிட்டி தேவை இருக்கிறது.

எத்தனை கணவர்கள்: வைஷுவை திருமணம் செய்து கொண்டால், அவர் ஏற்கனவே பாலியல் தொழில் செய்து கொண்டு இருந்தவர், அவரது முந்தைய கணவர்கள் கேட்க மாட்டார்களா என்று கேட்கிறார். எனக்கு இதற்கு முன்னர் எத்தனை கணவர்கள் இருந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த பட்டியலை அவர் வெளியிடுவாரா? நாஞ்சிலின் மனைவி மரியாவும் ஒரு விஷயம் சொல்லி உள்ளார், இந்த பிரச்னையால் தலைகாட்ட முடியவில்லை என்று. என்னாலும் தலைகாட்ட முடியவில்லை.

அந்தரங்கம்: வழக்கறிஞர் என்னிடத்தில் தொடர்பு கொண்டு நாஞ்சில் விஜயன் சமரசம் பேசுகிறார் என்று கூறினார். நாஞ்சில் விஜயன் என்னிடத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். என்னிடத்தில் மன்னிப்பு கேட்காதீங்க, எனக்கு கஷ்டமாக உள்ளது. உங்களிடத்தில் கேட்காமல் நான் கமிஷ்னர் அலுவலம் சென்று புகார் கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதன் பின்னர் நீங்கள் என்னிடத்தில் பேசுவீர்களா என்று தெரியவில்லை. நான் உங்களை காதலித்தது உண்மை. எல்லோரும் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். ஆனால் என்னிடத்தில் ஆதாரம் இல்லை. என்னைப் போல் யாருமே ஆதாரம் வைத்துக் கொள்ளாமல் இருக்காதீர்கள். இனிமேல் யாராவது காதலிக்கிறீர்கள் என்றால், புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள். அந்தரங்கமாக இருந்தாலும் பரவாயில்லை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் என்னைப்போல் கேவலமாக, யார் துணையும் இல்லாமல் நிற்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X