பாரதி கண்ணம்மாவில் என்ட்ரியாகும் புதிய கண்ணம்மா... ஏற்க மறுக்கும் ரசிகர்கள்
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் டாப் ரேட்டிங் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. மிகவும் விறுவிறுப்பாக, பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் பலரின் ஃபேவரைட் சீரியலாக இருந்து வருகிறது.
Recommended Video
இந்த சீரியல் மலையாள சீரியலின் டப்பிங்காக இருந்தாலும் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேருவார்கள், வெண்பாவின் சதி வேலைகள் பற்றி பாரதிக்கு தெரிய வருமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விலகிய ரோஷினி
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இந்த சீரியலில் லீட் ரோலான கண்ணம்மா கேரக்டரில் நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன், சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. ரோஷினிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

புதிய கண்ணம்மா என்ட்ரி
அக்டோபர் 23 ம் தேதியுடன் ரோஷினி, பாரதி கண்ணம்மா சீரியல் ஷுட்டிங்கை முடித்து விட்டு, விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோஷினிக்கு பதிலாக கண்ணம்மா கேரக்டரில் வினுஷா நடிக்க போவதாக கூறப்படுகிறது. இதனால் நவம்பர் 1 ம் தேதி முதல் பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய கண்ணம்மா என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக புதிய போஸ்டர் ஒன்றும் வெளியானது.

வெண்பாவை வெறுப்பேற்றும் கண்ணம்மா
ஆனால் தற்போது நவம்பர் 1 ம் தேதி முதல் 7 ம் தேதி வரையிலான வரும் வாரத்திற்கான பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கண்ணம்மா வரும் ஆட்டோ பஞ்சராகி பாதியில் நிற்கிறது. அந்த வழியாக காரில் வரும் பாரதியும், ஹேமாவும் கண்ணம்மாவிற்கு டயரை மாற்ற உதவி செய்ய போகிறார்கள். வெண்பாவை வெறுப்பேற்ற லொகேஷன் சேர் செய்து, அங்கு வர வைக்கிறாள் கண்ணம்மா.

வெண்பாவை தடுக்கும் துளசி
கண்ணம்மா எதிர்பார்த்ததை போலவே வெண்பாவும் அங்கு வந்து டென்ஷன் ஆகிறார். கண்ணம்மாவிடம் சண்டை போட செல்லும் வெண்பாவை தடுக்கும் துளசி, கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து வாழ துவங்கி விட்டதாக கூறுகிறார். இதைக் கேட்டு வெண்பா கடுப்பாகி நிற்பதாக ப்ரோமோ முடிகிறது. இந்த ப்ரோமோ முழுவதும் கண்ணம்மா ரோலில் ரோஷினி ஹரிபிரியன் நடித்துள்ளார்.

வருத்தமான ரசிகர்கள்
இதனால் நவம்பர் 7 ம் தேதிக்கு பிறகு வரும் எபிசோட்களிலேயே புதிய கண்ணம்மாவாக வினுஷா என்ட்ரி ஆவார் என கூறப்படுகிறது. ஆனால் புதிய கண்ணம்மாவுடனான போஸ்டரை பார்த்து விட்டு, பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். ரோஷினி ஹரிபிரியனே, பாரதி கண்ணம்மா முழு சீரியலிலும் நடிக்க உள்ளதாக ஒரு தகவலும் வலம் வருவதால் அது உண்மையாக இருக்கும் என நம்பி வந்தனர்.

ரோஷினி தான் தொடரனும்
ஆனால் புதிய கண்ணம்மா வர போவது கிட்டதட்ட உறுதியாகி விட்டதால், ரோஷினியே சீரியல் முடியும் வரை கண்ணம்மா ரோலில் தொடர வேண்டும் என ரசிகர்கள் பலர் கேட்டுள்ளனர். கண்ணம்மா கேரக்டரை மாற்றினால் அது சீரியலின் டிஆர்பி.,யை பெரிதும் பாதிக்கும் என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











