eeramana rojaave serial: முதலிரவு...முதலிரவு... ஓ மை கடவுளே... எப்போதான் அது நடக்கும்?

சென்னை: முதலில் மலர் பிடிகொடுக்கலை... இப்போ வெற்றி என்னவோ ரொம்பவே தள்ளிப் போறான்...ஓ மை கடவுளே...இதுதான் கதையேவா? என்னங்கடா உங்க கதை... புருஷனையும், பொண்டாட்டியையும் ஒரு வருஷத்துக்கு மேல தள்ளி வச்சு பார்க்கறீங்க?

Recommended Video

Eramana Rojave today episode | Pugazh Akila Romance

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் வெற்றிக்கும் மலருக்கும் எதிர்பாராதவிதமா நடந்த கல்யாணத்தை வச்சு.. இயக்குநர் எபிசோடை நகர்த்தும் விதம் இருக்கே...ஐயயோ...!

முதலில் இருவரும் பேசிக்கறாங்க.. அப்புறம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு நல்ல அபிப்ராயம் வருது. அப்புறம் ஒருத்தர் மீது ஒருத்தருக்கு காதல் வருது. அதை சொல்வதற்குள், வெற்றியின் மீது மலருக்கு சந்தேகம்னு ஒன்னு வருது.

சொல்லிட்டீங்களா

சொல்லிட்டீங்களா

குடும்பமே வெற்றியும் மலரும் தங்கள் காதலை சொல்லிக்கிட்டாங்களான்னு எதிர்பார்த்து இருக்க, ஈரமான ரோஜாவே சீரியலின் இளமைக்குத் தக்க மாதிரி ரசிகர்களும் ஆவலா கத்துக்கிட்டு இருந்தாங்க. ஒரு வழியா காதலையும் சொல்லி, மலர் வெற்றியை மாமான்னு கூப்பிட ஆசைன்னு சொல்லி வெற்றியின் அனுமதியுடன்.. மூச்சுக்கு முன்னூறு தடவை அவள் மாமா மாமான்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க.

என்னடி மாமா

என்னடி மாமா

மலர் மாமான்னு அழைக்க அழைக்க வெற்றியும் சலிக்காமல் என்னடி என்னடின்னு கூப்பிடறான். மாமா சாப்பிட வாங்க மாமா...இல்லை மலர் நான் வெளியில் சாப்பிட்டுட்டு வந்துட்டேன்னு வெற்றி சொல்ல, என்ன மாமா நீங்க.. உங்களுக்காக நான் ஒருத்தி சாப்பிடாம உட்கார்ந்து இருக்கேன் மாமான்னு மலர் சிணுங்கறா.

வாடி உனக்கு மாமா

வாடி உனக்கு மாமா

வாடி உனக்கு மாமா தோசை சுட்டுக் தரேன்.. சாப்பிட்டு தூங்குடின்னு வெற்றி சொல்ல, அது வந்து மாமா எனக்கு முட்டை தோசை சுட்டுத் தருவீங்களா மாமான்னு மலர் கேட்க, வாடி மாமா எப்படி சுட்டுத்தரேன்னு பாருன்னு இவன் சொல்ல அவள் சாப்பிடத் தயாரா கிச்சனுக்கு வர்றா. அவன்முட்டை தோசை மட்டும் இல்லை, சில்க் தோசை, கேரட் தோசை, தக்காளி தோசை எல்லாம் சுட்டுத் தர்றான். சூப்பரா இருக்கு மாமா... சூப்பரா இருக்கு மாமா.. போதும் மாமான்னு இப்படி ஆயிரத்தெட்டு மாமா, ஆயிரத்தெட்டு டி சொல்லி இருவரும் பேசிக்கிறாங்க.

டைம் வேணும் மாமா

டைம் வேணும் மாமா

முதலிரவுக்கு மலரை வழிக்கு கொண்டு வரணும் என்று இயக்குநர் கே. பாக்யராஜ் நடித்து வெளிவந்த படம் முந்தானை முடிச்சு.. இது நம்மாளுன்னு அத்தனை படங்களை போட்டுப் பார்த்த பிறகும் மலர் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறா. ஒரு வழியா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு கேட்க, டோட்டலா மாறிப்போயிட்டான் வெற்றி.

நடுவில் தலையணை

நடுவில் தலையணை

பெட்டில் நடுவில் தலையணை வச்சுக்கிட்டு படுக்கறதென்ன.. சட்டையில் பட்டன் இல்லேன்னாலும் மலரைக் கூப்பிடமா வேற சட்டையைப் போட்டுக்கறது என்னன்னு ஓவரா பண்றான்.. மாமா நான் இப்போ தயாராயிட்டேன்னு மலரை சொல்ல விடாம சூழ்நிலையும் அமையுது. வெற்றி பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்புக்கு கொடுத்து நடந்துக்கறானாம்.

இதைத்தாங்க... மலர் வெற்றி கியூட் ஜோடி.. கதை அப்படித்தான் போகும். உங்களுக்கு என்ன வந்துச்சு.. பிடிச்சா பாருங்க. பிடிக்கலேன்னா விடுங்கன்னு ஈரமான ரோஜாவே சீரியல் ரசிகர்கள் சொல்றாங்க... ஓ மை கடவுளே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X