»   »  சத்யா, அலமு, துளசி சீரியல் ஹீரோயின்களில் யார் க்யூட்டி, பியூட்டி

சத்யா, அலமு, துளசி சீரியல் ஹீரோயின்களில் யார் க்யூட்டி, பியூட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தினம் ஒரு சீனிலாவது அழவேண்டும் என்பது தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் எழுதப்படாத விதி. எனவே அழுது அழுது முகமெல்லாம் வீங்கி, மூக்கு சிவந்து காணப்படுவார்கள் ஹீரோயின்கள். ஆனாலும் சில சீரியல் ஹீரோயின்கள் சினிமா ஹீரோயின்களை விட அழகாய் தோன்றுவார்கள்.

சன்டிவியோ, விஜய் டிவியோ, ஜெயாடிவியோ, ஜீ தமிழோ எந்த சேனல் எடுத்துக்கொண்டாலும் சில ஹீரோயின்கள் மாறி மாறி சீரியல்களில் ஷிப்ட் போட்டு நடிப்பார்கள் சாரி அழுவார்கள். அந்த அளவிற்கு நடிப்போடு அவர்களின் அழுகை ஒன்றிப்போய்விட்டது.

சினிமாவில் ஹீரோக்களுக்கான கதையை இயக்குநர்கள் எழுதினால் சீரியலில் ஹீரோயின்களுக்கான கதையாக எழுதவேண்டும். இதுதான் விதி.

லட்சுமியாக, காயத்ரியாக, பூஜாவாக, வள்ளியாக, சத்யாவாக, துளசியாக பல கதாபாத்திரங்களாக இல்லத்தரசிகளின் நெஞ்சங்களில் குடியேறியிருக்கிறார்கள் கதாநாயகிகள். நாயகிகளின் ஒரிஜினல் பெயரை விட சீரியல் கதாபாத்திர பெயர்கள்தான் இல்லத்தரசிகளின் மனதில் தங்கிவிடும். அப்படி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சில சீரியல் நாயகிகளை பாருங்களேன்.

தெய்வமகள் சத்யா

தெய்வமகள் சத்யா

ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தின் கடைசி மருமகளாக வந்து மூத்த மருமகளின் வில்லத்தனங்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் சத்யாதான் இல்லத்தரசிகளின் ஃபேவரைட் என்கிறது ஒரு சர்வே. இவரே ஜீ தமிழில் லட்சுமியாக வலம் வருகிறார்.

பூஜா

பூஜா

வாணி ராணி தொடரில் வாணியின் இரண்டாவது மருமகள் பூஜாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டாம். அமைதியான நடிப்பில் ஸ்கோர் பண்ணிவிடுகிறாரம்.

மச்சான் பூமிகா

மச்சான் பூமிகா

வம்சம் தொடரில் மூச்சுக்கு மூன்று முறை மச்சான் மச்சான் என்று உருகும் பூமிகாவின் அழகான நடிப்பிற்கு இல்லத்தரசிகள் ரசிகைகளாம்.

தங்க மீனாட்சி

தங்க மீனாட்சி

சரவணன் மீனாட்சியில் வரும் தங்கமீனாட்சியின் அலட்டலான நடிப்பு. மாமா என்று உருகி அழைப்பது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதாம்.

ஓ பிரியா பிரியா

ஓ பிரியா பிரியா

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகியை பார்ப்பதற்காகவே சீரியல் அடிமைகள் ஆகிவிட்டார்களாம் இளைஞர்கள்... உண்மையாப்பா? நீங்க சொல்லுங்க.

குலதெய்வம் அலமு

குலதெய்வம் அலமு

சன் டிவி நாதஸ்வரத்தில் மலராக நடித்து இல்லத்தரசிகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாயகியே குலதெய்வம் தொடரில் அலமுவாக வந்து அசத்துகிறார். அசால்ட் நடிப்பில் ஸ்கோர் பண்ணும் நாயகிக்கு ரசிகர்கள் அதிகமாம்.

தென்றல் துளசி

தென்றல் துளசி

5 ஆண்டுகாலமாக தென்றல் தொடர் மூலம் துளசியாக வலம் வந்த நாயகி விஜய் டிவியில் ஆபிஸ் தொடரில் ராஜியாக நடித்தார். ஜீ தமிழில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடரில் செல்லப்பெண்ணாக நடித்த நாயகி, மீண்டும் சன்டிவியில் ‘அபூர்வ ராகங்கள்' பவித்ராவாக வலம் வரப்போகிறார்.

பிரியமானவள் அவந்திகா

பிரியமானவள் அவந்திகா

அழகான மாமியாருக்கு அதிரடி மருமகளாக நடித்து வரும் அவந்திகாவிற்கு தனி ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திமிரான பேச்சு... ஆனாலும் கணவனிடம் உருகும் நடிப்பு என ஸ்கோர் பண்ணுகிறார்.

வள்ளி

வள்ளி

பிற்பகல் நேரங்களில் சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகள் வள்ளியை மிஸ் பண்ணத்தவறுவதில்லையாம். வள்ளி தில் ஆக நடித்தாலும் சில நேரங்களில் அழுமூஞ்சி வள்ளியாகிவிடுகிறார்.

தாமரை சிநேகா

தாமரை சிநேகா

சில நடிகைகள் இரவு நேர சீரியல்களில் வில்லியாக தோன்றினாலும் பிற்பகல் சீரியல்களில் நாயகியாக நடித்து அசத்துகின்றனர். நீலிமாராணியும் அப்படித்தான் வாணி ராணியில் வில்லி டிம்பிள், தாமரையில் சினேகமான சிநேகாவாக வலம் வருகிறார்.

English summary
Among the TV heroines who is the most beautiful. Tell us.
Please Wait while comments are loading...